Thursday, December 8, 2022
பகுத்தறிவு
பகுத்தறிவு
நேர்மையையும் முரண்பாட்டையும் பகுத்தறியும் ஆற்றலே நாம் பகுத்தறிவு என்று அறிகின்றோம் கண்ணுக்குத் தெரியாத இந்த ஆற்றல் மண்ணில் உள்ள அனைத்தையும் எடை போடுகின்றது இது நிறைய மர்மமான எல்லாவற்றையும் சுத்தமாக அறிந்து கொள்ள துடிக்கின்றது இதற்கு வேறு ஒரு தன்மையான பெயரும் உண்டு அதன் பெயர் அறிவு அது ஒரு ஆற்றல் இந்த பகுத்தறிவு என்பது ஒரு ஆற்றல் அதற்கு உருவம் கிடையாது ஒரு ஜடப்பொருளின் துணையின்றி அது உண்டாகவும் முடியாது இந்த பகுத்தறிவு என்பது ஒரு உருவம் இருந்தால் தான் இதை அறிய முடியும்
இறைவனையும் மனிதனின் மர்மங்களையும் ஆராய்ந்து அறியும் பேராற்றல் மனிதனிடம் உண்டு, அந்த ஆற்றலை உயிர் இருந்தால் மட்டுமே இதை நாம் அறிய முடியும்
உள்ளம் என்பது புனிதமான ஒன்று அது பரிசுத்தமாக ஒருவனின் உடலில் படைக்கப்பட்டிருக்கிறது இறைவனை அறியும் ஆற்றல் அதற்கு உண்டு இறைவனை அறிந்து அவனை அடைய புனிதமான வழியில் அது நடை போடுகின்றது இறைவனை அடைவது மட்டுமே அதன் குறிக்கோள், இந்த குறிக்கோளை அடைவது அப்படி ஒன்றும் எளிதான காரியம் அல்ல அது ஓடியாடி உள்ளம் துறந்து எல்லாவற்றையும் (ஆசை) விட்டால்தான் அது கிடைக்கும் அப்பொழுது தான் இறைவன் என்ன என்று அவனுக்கு விளங்க தெறியும் இதற்கு பல நற்காரியங்கள் பல செய்ய வேண்டும் நல்லெண்ணம் சதாகாலமும் உள்ளத்தில் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும் அந்த நற்செயல்களால் மட்டுமே அவனுடைய உள்ளத்தில் நல்ல எண்ணம் உருவாக ஆரம்பிக்கும் நம் மனதில் பக்தி உண்டாகும் கோயிலுக்கு செல்வதும் நம் கடமையாக வைத்துக் கொண்டிருப்போம் இதற்கு உள்ளம் சரியாக இருந்தால் தான் முடியும், இந்த உடல் உறுப்புகள் சரியாக இயக்கத்துக்கு வந்து கொண்டிருந்தால் தான் முடியும் உடல் இல்லாமல் உள்ளத்தால் தனித்து நின்று செயல்பட முடியாது (என்னை வணங்குவதற்கே நான் மனிதனை படைத்தேன்)மனிதன் உலகில் வாழ்கின்றான் மனிதன் உலகில் இறைவனை வணங்க வேண்டும் அவன் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வர வேண்டும் மனிதனுக்கு உள்ளம் ஒன்று படைக்கப்பட்டு அவன் தன் அவயங்களை கருவிகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றான் இறைவனை வணங்குவதற்கும் நற்காரியங்களுக்கும் உடல் ஆரோக்கியம் தேவை, உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் நற்காரியங்களை செய்ய முடியும் நோயுற்று நலிந்து போனால் இந்த உடலை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் அரை மணி நேரம் இறைவனை வணங்கினால் ஆறு மணி நேரம் பாயில் படுத்துக்கொண்டு இருந்தால் நாம் இறைவனை எப்படி வணங்க முடியும் எனவே ஆரோக்கியத்தை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு ஏற்படுகின்றது, ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் இறைவனை நாம் முறைப்படி வணங்க முடியும் இதனால் ஆரோக்கியத்திற்கு தேவையில்லாத உணவு வகைகளை நாம் பயன்படுத்தக் கூடாது ஆரோக்கியமாக வாழவேண்டும் நாம் விரும்பினால் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும் தேவையான அளவு தூக்கமும் நல்ல காற்றையும் குளிர்ச்சியான குளிர் தரும் இடங்களை கண்டு களிக்க வேண்டும் இவை அனைத்தையும் உங்கள் வெளியுறுப்புகள் செய்கின்றன ஆனால் உங்கள் உள்ளம் செய்வதில்லை உங்கள் உடல் தான் குளிர்கின்றது இதனால் உங்கள் உள்ளத்திற்கு குளிக்கத் தேவையில்லை நீங்கள் உணவு உண்ண வேண்டும், அதற்கு கையும் வாயும் சேர்ந்து வேலை செய்யும், உள்ளத்திற்கு பசி கிடையாது, நீங்கள் உறங்குகிறீர்கள், இது உங்கள் கண்களின் வேலை, உள்ளத்திற்கு உறக்கம் எது? அது உறங்கி விட்டால் உங்க உடலில் உயிர் ஏது?
உள்ளத்தின் ஆற்றல்களால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு காமம், கோபம், தாகம், இரக்கம்,பாசம் இப்படிப்பட்ட உணர்வுகள் நம்மிடம் உள்ளன மனிதனுக்கு இவை அனைத்தும் ஒவ்வொரு சமயத்தில் பயன் தருகின்றது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்துள்ள உணவை நாம் உட்கொள்கின்றோம் ஆனால் பசி இல்லை எனில் நம்மால் எப்படி சாப்பிட முடியும் உங்கள் விரோதிகள் உங்கள் கையை வெட்ட காத்து நிற்கின்றார்கள் தற்காப்புக்கு கோபம் பயன்படுகிறது உங்கள் கோபம் பொங்கியதும் கை கால்கள் இயங்குகின்றன உங்களை உங்கள் உள்ளம் எவ்வளவு திறமையுடன் காப்பாற்றுகின்றது பாருங்கள், உங்கள் எதிரியை உங்கள் கண்கள் பார்த்ததும் உள்ளம் உடனே கட்டளை பிறப்பிக்கின்றது சினம் பொங்குகின்றது கால்களும் கைகளும் தற்காப்புக்கு சண்டை செய்கின்றன சினம் என்றால் உள்ளாற்றலும் கை கால்களும் எத்தனை வேகமாக இயங்குகின்றது உள்ளத்திற்கு இப்படி பல்வேறு ஆற்றல்கள் உள்ளன இதற்கு தூண்டுபவை முதலில் கோபம் இவை அனைத்தும் உணர்ச்சிகளாக இடம் பெறுகின்றன உடல் முழுவதும் பரவியிருக்கும் சக்தி இடம்பெறுகிறது இந்த சக்திக்கு இயக்கும் ஆற்றல் என்று பெயர் உண்டு இது ஒரு குறிக்கோளை அடைவதற்கு மனிதனின் அவையங்களை வேகமாக இயங்குகின்றது இதில் நுண்ணறிவை பயன்படுத்துகின்றது இது பார்வை, கேள்வி, நுகர்வு, சுவை ,ஸ்பரிசம், இவை அனைத்தும் இதில் இடம்பெறுகின்றன எதிரில் உள்ள ஒவ்வொன்றையும் துப்பறிந்து உள்ளத்திற்கு செய்தி கிடைக்கின்றது இந்த ஆற்றல்கள் மாமிசத்தாலும் உதிரத்தாலும் ஆன அவயங்களுடன் தொடர்பு கொள்கின்றன பார்வை கண்ணுடன் தொடர்பு கொள்கின்றது, சுவை நாவுடன் சம்பந்தப்படுகிறது, கேள்வி செவியால் உருவாகின்றது ,இந்த உள்ளத்தின் ஆற்றல்கள் அதன் ஆற்றல்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட முறையில் இருக்கின்றன,
உணர்வுகள் & உணர்ச்சிகள் நிலையற்றவை
அவர்கள் நிரந்தரமாகத் தோன்றுகிறார்கள்
ஏனென்றால் நாங்கள் அவர்களிடம் சூழ்நிலையும் கவனமும்
நமது மனதையும், நமது மனதின் செயல்பாடுகளையும் கவனித்தால், நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் மற்றும் மன உந்துதல்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதை நாம் தெளிவாகக் காணலாம். ஒரு எண்ணம் மற்றொரு எண்ணத்திற்கு இட்டுச் செல்லும், மற்றும் பல எண்ணங்களாக உருவெடுக்கும் இவைகள் நம்முடன் நிலையானதாகத் தோன்றுவதற்கு ஒரே காரணம், நாம் வழக்கமாக அவற்றுடன் இணைந்திருப்பதால்தான்.
இவைகள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ, அவ்வளவு தீவிரமாக நாம் அவர்களுடன் இணைந்திருப்போம்.மேலும், இவைகள் நிலையற்றவையாக இருப்பதால், அவற்றிற்கு நிரந்தர சுய-இயல்பு இல்லை.
அப்படியென்றால், நிரந்தரமான சுய-இயல்பில்லாதவற்றுடன் நாம் ஏன் இணைகிறோம்?
அதற்குக் காரணம் நமது பழக்கமான= வழக்கமான போக்குதான். எனவே இந்த உதவியற்ற மற்றும் அடிக்கடி தீங்கு விளைவிக்கும் பழக்கத்திலிருந்து நம் மனதை விடுவிக்க விடாமுயற்சியுடன் மகிழ்ச்சியுடன் செயல்படுவேண்டும்
நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் மற்றும் மனத் தூண்டுதல்கள் ஆகியவற்றில் இருந்து நம் மனதை எவ்வளவு விடுவிக்கிறோமோ, அவ்வளவு இயற்கையானதும் கூட , மேலும் நாம் மன அமைதியையும் திருப்தியையும்அனுபவிக்கவேண்டும். இதெல்லாம் வெறும் கனவு, திரைப்படம் மற்றும் மாயை போன்றது. உங்கள் மனம் பற்றற்றதாக இருக்கட்டும்.
உங்கள் மனம் அமைதியாகட்டும்.
கோபமும் காமமும் உள்ளத்தின் மிக சக்தி வாய்ந்த முக்கியமானவை சில சமயங்களில் உள்ளத்தின் கட்டளைக்கும் பகுத்தறிவுக்கும் உடன் பாடு ஏற்படும் இவற்றினால் உள்ளத்திற்கு நன்மை கிடைக்கின்றது, இதனால் உள்ளம் தங்கு தடை இன்றி இறை பக்தியில் முன்னேறுகின்றது, ஆனால் எல்லா நேரத்திலும் உள்ளத்திற்கு அடி பணிவது இல்லை, சில சமயங்களில் உள்ளத்தின் கட்டளைக்கும் அடிபணிய மறுப்பதும் உண்டு அப்போது உள்ளம் அடிமையாகின்றது அப்பொழுது ஏற்படும் விபரீதங்கள் அளவிட முடியாதவை, உணர்ச்சிக்கு அடிமையானவர்கள் எத்தனை தூரம் இறைவழியில் பின்தங்கி விழுகின்றார்கள், தன் அறிவையும் திறனையும் முரண்பாடான வழிக்கு பயன்படுத்துகின்றார்கள், காமத்தை தணிப்பதற்கு அவன் அறிவாற்றல் அருமையான பல வழிகளை சொல்லிக் கொடுக்கின்றது, ஒரு விரோதியை தீர்த்து கட்டுவதற்கு அவன் சிந்தனை புதிய வழியை கண்டுபிடிக்கின்றது, குற்றங்களும் அட்டுழியங்களும் ஆராய்ந்து பார்த்தால் இதில் உண்மை என்னவென்று தெரியும் எத்தனை குற்றங்கள் நடக்கின்றன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் ஒரு குற்றவாளி கையாண்ட முறையை அடுத்த குற்றவாளி கையாள்வது இல்லை, வழிப்பறி செய்தவன் என்றால் மற்றொருவன் அரசாங்க அதிகாரியை போல் நடித்து கொள்ளையடிக்கின்றான், ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்தால் மற்றவன் நஞ்சுட்டிய உணவால் கொலை செய்கின்றான் இதற்கெல்லாம் காரணம் இவர்கள் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டவர்கள் அவர்களின் உள்ளத்தில் உணர்ச்சிகள் அவர்களை அடக்கி ஆளுகின்றன இவர்களின் அறிவும் ஆற்றலும் குற்றம் புரிவதற்கு பல பல புது வழிகளை கண்டுபிடித்துக் கொள்கின்றன, ஆனால் காமமும் கோபமும் இதற்காக படைக்கப்பட்டதில்லை, அவற்றிற்கு உள்ளம் அடிமை ஆவது எவராலும் ஏற்க முடியாது இவை என்றைக்குமே உள்ளத்துக்கும் பகுத்தறிவுக்கும் அடிமையாக இருக்க வேண்டியவை, இவற்றை நீங்கள் பழக்க வேண்டும் இல்லையேல் அவற்றால் ஏற்படும் விபரீதங்கள் பயங்கரமானவை உண்மையை உற்றுப் பார்த்தால் நம்மால் திருப்தி அடைய முடியவில்லை, பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கின்றார்கள், அவர்களுக்கு பகுத்தறிவு இருக்கின்றது, ஆனால் அவன் குரலுக்கு அவர்கள் மதிப்பு கொடுப்பது இல்லை.
"ஒரு சிலருக்கு நீங்கள் ஒரு மர்மமான நபராக இருப்பீர்கள்
ஒரு சிலருக்கு நீங்கள் பைத்தியமாக இருப்பீர்கள்
ஒரு சிலருக்கு நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள். ஆனால்
மற்றவர்கள் பார்வையில் நீங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுவீர்கள்
ஒரு நீங்கள் சிலருக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பீர்கள்
நீங்கள் மற்றவர்களுக்கு ஆபத்தாக இருப்பீர்கள்
ஒரு சிலருக்கு நீங்கள் நல்ல நண்பராக இருக்கலாம்
நீங்கள் என்ன உணருகின்றீர்கள்?
நீங்கள் மற்றவர்களின் மனநிலையின் பிரதிபலிப்பு மட்டுமே.
எனவே எப்போதும் நீங்களாகவே இருங்கள்
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாருடைய இருப்பிலும் பெரிய மகத்துவம் இல்லை, உங்களைப் போலவே அனைவரும் வெளிப்படுத்தும் சுதந்திரமான பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment