Tuesday, December 6, 2022
வானகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி
🌺🌺 வானகி மண்ணாகி வளியாகி
ஒளியாகி ஊனாகி உயிராகி... 🌺🌺
இறந்தவர் உடல் மண்ணிற்கு தானே செல்கிறது.
ஆனால் இறந்தவர் சொர்க்கத்திற்கு போனார் என ஆகாயத்தை காட்டுகிறோமே... 🤔🤔
அப்போ உடல் மண்ணிற்கு போகிறது என்றால் எது விண்ணிற்கு போகிறது..???
மண்ணோடு மண்ணாக போவது ஒன்றும், விண்ணோடு விண்ணாக போவது ஒன்றும் இருக்கனும் தானே..
"நீங்கள் மண்ணில் இருந்து பிறந்தவர்கள். என்னை பிதா அனுப்பியிருக்கிறார். நான் விண்ணில் இருந்து வந்தேன்" என பைபிளில் சொல்லப் பட்டிருப்பதை காணலாம்.
ஆக, விண்ணில் இருந்து வந்தது ஒன்றும், மண்ணில் இருந்து வந்தது ஒன்றும் இருக்கு என தெளிவாகிறது.
ஒன்று பெண் தன்மையாகவும், மற்றொன்று ஆண் தன்மையாகவும் இருக்கிறது.
எல்லா ஜீவன்களுக்கும் பூமி தான் தாயாக விளங்குகிறது. தாயின் மடியிலே பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, மடிந்தும் போகிறோம். அப்போ ஆண் தன்மையாக விளங்குவது விண்ணில் இருந்து தானே வந்திருக்க வேண்டும்.
"நானும் பிதாவும் ஒன்றாகவே இருக்கிறோம். என்னை அறிந்தவன் என் பிதாவையும் அறிவான்" என பைபிள் சொல்கிறது.
விண்ணில் இருந்து பூமிக்கு வருவது ஒரு சுழற்சியும், பூமியில் இருந்து விண்ணிற்கு போவதும் ஒரு சுழற்சியும் இருக்கிறது. இரு தன்மைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. தாவோயியம் யின் - யாங் கோட்பாடும் இதுவே.
இந்த தூல உடலான மண்ணை பிடித்துக் கொண்டு இருந்தால் மண்ணாக தான் போவோம். விண்ணிற்கு போக வேண்டும் எனில் தாயின் மடியில் தவழ்வதை விடுத்து, தந்தையை அறிந்து அதன் வழி பற்ற வேண்டும்.
தாய் நமக்கு தந்தையை காட்டித் தருவாளா??
நன்றி
ஜனனி
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment