Wednesday, December 7, 2022

தான் அற்றவன் தலைவன்

தான்’ அற்றிடத்தில் குணம் இல்லை குணத்திற்க்கு ஆதாரம் ’தான்’ அன்றி வேறில்லை.’தானாகி தன்மயமாய்’ இருப்பது கூட மூடத்தனமே.’தான்’ அற்றவனே தலைவன்  ’தன்னை’ இழப்பது வித்தையின் சொருபம், அதைத்தான் யுக்தி எனவும், உளவு எனவும், தந்திரம் எனவும் புகல்வர் மெய்ஞானியர்.’தன்னை ‘இழப்பது தான் குருமொழி,மவுனமான பாஷை.  தன்னை அறியாமல் தவிக்கும் மாக்களுக்கு தன்னை காட்டி,தன் சொருபம் காட்டி, தன் தன் மாயையின் அடையாலம் காட்டி, தன்னை இழக்கும் தவம் காட்டி, அறிவிக்க செய்தலே உபதேசம். அல்லாது வாயாலே முணுமுணுக்கும் மந்திரமோ, கழுத்தையும் நெஞ்சையும் நிமிர்த்தி இருந்து கொண்டு மூச்சை பிடிக்கும் செயலோ, கண்ணை உருட்டி விழித்து கொண்டு மேலேயும் கீழேயும் உற்று பார்த்து பரிதவிப்பதோ மாத்திரை பிரமானம் காட்டி அங்க நியாச மணி மந்திர அவௌடதங்கலை காட்டி தீபதூபம் போடுவது அல்ல தன்னை காண ,தன் நிலை காண மட்டுமே தான் பொய் என தெரியும், பொய் என திரியும், அவ்வண்ணம் பொய்யை மெய்யென்று கொண்டு திரியும் மயக்கம் பிரியும். மயக்கம் பிரிய வெளி புரியும்

No comments:

Post a Comment