Tuesday, December 6, 2022
வள்ளலார்
வள்ளலர் பிரான் தாம் விளம்பியிருக்கின்ற திரு அருட்பா உரைநடை மூலமாக எண்ணிறந்த ஞான ரகசியங்களை விட்டு சென்றிருக்கிறார்.
அதின்கண் பார்க்கையில் சன்மார்க்க கொடியின் ரகசியமே மேலோங்கி நிற்கின்றது. அதை விளக்குமிடத்து "நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது, அந்த நாடியின் மேற்புறம் புருவமத்திக்கு உட்புறம் ஒரு சவ்வு தொங்குகின்றது. அதில் ஏறவும் இறங்கவும் செய்ய நாடிகள் இருக்கிறது" என்கிறார்.
இவையெல்லாம் சுட்டிகாட்டுவது அந்த பராசக்தி நிலையமகின்ற பர நிலை குறிப்பே ஆம் அல்லவா?.
உடலுக்கு என கீழ் மூலம், உயிருக்கு என நடு மூலம், பூரணத்துக்கு என மேல் மூலம். இம்மூன்றையும் அறிண்ட்நிருக்கின்ற யோகியவனே மும்மூ்ல யோகி.
“அடியாகி முடியாகி மூலந்தன்னில் முப்பொருளும் தானாகி நடுவுமாகி அடியாகும் மூலமதே அகாரமாகி அவனவளாய் நின்ற நிலை அணுவதாமே”
~திருமூலர் ஞானம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment