Tuesday, December 6, 2022
ஐயா
ஐயா
என்ற ஒரு வார்த்தை நாம் சிறுவயதில் இருந்தே நமக்கு நம் பெற்றோர்கள் கற்று கொடுத்துஇருக்கின்றார்கள்,அதுபோல் பள்ளிக்கூடத்தில் நாம் ஐயா என்று தமிழ் வாத்தியாரை அழைப்போம், அதுபோல் வீட்டில் நம்முடைய தந்தையையும் ஐயா என்று அழைப்போம்,, தந்தைக்கு தந்தையும் ஐயா என்று அழைப்போம், இது ஒரு பாரம்பரிய மிக்க வழக்கத்தில் இருந்து வரக்கூடிய ஒரு வார்த்தை, இந்த வார்த்தை அக்காலத்தில் மிகவும் நுண்ணியமாக நுணுக்கமாகவும் நமக்கு பெரியோர்களால் அமைக்கப்பட்டுள்ளது, ஞானியர்கள் இந்த ஐயா என்ற ஒரு வார்த்தையை இன்றும் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து இந்த வார்த்தையை வடிவமைத்து கொடுத்திருக்கின்றார்கள், இந்த ஐயா என்ற வார்த்தை மிகவும் தமிழில் அழகாகவும் இருக்கின்றது இந்த வார்த்தையை கூப்பிடும் பொழுதும் திரும்பிப் பார்க்காதவர்கள் யாராவது இருப்பார்களா, நம்முடைய தமிழருக்கு சொந்தமான தமிழுக்கே சொந்தமான இந்த ஐயா என்ற வார்த்தையை நாம் உபயோகப்படுத்துவது நாம் ஜீவனுக்கு உரிய விஷயம் அல்லவா, இந்த வார்த்தை மிகப்பெரிய அளவிலான ஆச்சரியமான விஷயத்தை நம் ஞானியர்கள் பழக்கபடுத்தி வைத்துள்ளார்கள், ஆமாம் அய்யா என்கிற ஒரு வார்த்தையில் மிகப் பெரிய ஞான ரகசியம் மறைக்கப்பட்டுள்ளது ஜுவ சிம்மாசனம் ஆன ஞானப் பொக்கிஷம் இந்த வார்த்தைக்குள் மறைந்துள்ளது, என்று எத்தனை பேர் அறிந்துள்ளீர்கள், சென்ற நூற்றாண்டிலே அவதரித்த மகா உன்னதமான ஞானியர் ஐயா வைகுண்டர் அவர்கள் எடுத்து வைத்த அய்யாவழி என்கிற ஒரு வழியை ஏற்படுத்தி உள்ளார்கள் இதனுடைய மிகப்பெரிய ஞான மந்திரமாக இருப்பதும் ஐயா உண்டு, ஐயா உண்டு, ஐயா உண்டு, இந்த மந்திரம் என்ன என்பதை உங்களுடைய ஞான சத்குருவிடம் அணுகிதெரிந்து கொள்ளவும்
அய்யாவழி வந்த இந்த மகா ஞான ரகசியம் அனைவருக்கும் தெளிவு பெற தெளிந்திட ஐயா அருள் புரியட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment