Thursday, December 8, 2022

ஆராயும் அறிவு

ஆராயும் அறிவு மனிதனின் பகுத்தறிவு நன்மையையும் தீமையையும் காண்பிக்கின்றது உள்ளத்தில் பொங்கும் ஆற்றலால் நற்காரியங்கள் செயல்படுகின்றது, தீமையை கொண்டு வரும் செயல்கள் தவிர்த்து ஒதுக்கப்படுகின்றது, ஒவ்வொரு காரியத்தையும் மனிதன் உள்ளம் ஆராய்ந்து பார்க்கின்றது, செயல்களின் முடிவையும் அதன் நிலையையும் கண்டுபிடிக்கும் ஆற்றல் அவன் உள்ளத்திற்கு உண்டு, முடிவில் தீமையையும் விபரீதத்தையும் உருவாக்கும் செயல்களை அது சுத்தமாக கண்டுபிடித்து விடுகிறது, சீர் குலைந்த நிலையை திருத்தி அமைப்பது எப்படி என்றும், அவனுக்கு ஏற்படக்கூடும் விபரீதத்தை தடுப்பது எப்படி என்றெல்லாம் ஆராய்ந்து அவன் உண்மையை கண்டுபிடித்து செயலாற்றுகின்றது அவருடைய அறிவு பகுத்தறிவு பெற்ற மனிதன் மனிதனின் நன்மையும் தீமையும் அவனிடம் உள்ளது, ஒருவர்  நோயுற்று இருக்கிறீரார், வைத்தியர் உங்கள் ரத்தத்தை ஆராய்ந்து உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றார், கஉப்பையும் புலியையும் நீங்கள் நினைத்து கூட பார்க்கக் கூடாது என்று, இந்த நிலையில் உங்களுக்கு முன்னால் அறுசுவை உணவு வைக்கப்பட்டுள்ளது, அதன் சுவையை நீங்கள் பல தடவை அனுபவித்து இருப்பீர்கள், எனவே எடுத்து சாப்பிட தோன்றும், உங்களுடைய உணர்வு, ஆனால்  இந்த உணர்வு மிருகத்துக்கும் உண்டு,  எந்த உணவு தன் உடல் நிலையில் எவ்வித விளைவை ஏற்படுத்தும் என்று அதற்குத் தெரியாது, அதற்கு பகுத்தறிவும் கிடையாது, எனவே சில சமயம் அது தனக்கு ஒத்துக் கொள்ளாததை உட்கொண்டு வேதனைப்படுகிறது, கயிற்றில் தொங்கும் புழுவென்று எண்ணி தூண்டிலில் அகப்பட்டுக் கொண்டு தொங்கும் மீன்,  ஒரு சிறு தேங்காய் காக பொறியியல் சிக்கிக் கொள்ளும் எலி, ஆனால் வியாதியுற்று இருக்கும் மனிதன் உப்பு கலந்த உணவை உட்கொண்டு தனக்கு தீங்கு ஏற்படுத்திக் கொள்வதில்லை, ஏனெனில் அவனுக்கு பகுத்தறிவு இருக்கின்றது, கடைசி நேரத்தில் அந்த வைத்தியரின் எச்சரிக்கையை அவனுக்கு நினைவூட்டி விடுகின்றது பகுத்தறிவு, பகுத்தறிவு  என்ற இந்த ஆற்றல் மனிதனை தவிர்த்து வேறு எந்த உயிரினத்துக்கும் கிடையாது,  இந்த ஆற்றலால் தான் அவன் பெரு மதிப்புக்கு உரியவன் ஆகிறான், வயது வந்த மனிதனுக்கு பகுத்தறிவு ஏற்படுகிறது, சிறுவர் சிறுமியருக்கு பகுத்தறிவு கிடையாது, இதனால் தான் அவர்கள் வானில் இருக்கும் நட்சத்திரத்தை பிடித்து விளையாட ஆசைப்படுகின்றார்கள், விளையாட்டின் மோகத்தால் சத்துள்ள உணவை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளுகின்றார்கள், பருவ வயது வந்ததும் பகுத்தறிவு பிறக்கின்றது, ஆனால் அது பிறக்கும்போதே தனக்குரிய முழு ஆற்றலையும் பெற்றுவிடுவதில்லை, பொது அறிவு ஏற்பட ஏற்பட பகுத்தறிவு துலங்குகிறது, ஒரு மனிதன் அறிவுத்திறனை ஒட்டியே அவன் பகுத்தறிவு அமைந்திருக்கின்றது ஞானம் இல்லையேல் பகுத்தறிவு பயனற்று போய் விடுகின்றது, புலியைப் பற்றியும் அதன் குணத்தை பற்றியும் நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ளா விடில் உங்கள் பகுத்தறிவு உங்களை புலி இடம் இருந்து காப்பாற்றாது, விஷம் கலந்த உணவை உட்கொண்டு மாண்டு இருக்கின்றார்கள் அறிஞர்கள் சிலர், அவர்களின் பகுத்தறிவில் குறை ஏதும் காணப்படவில்லை என்றாலும் சக்தி மிக்க பகுத்தறிவு அவர்களைக் காப்பாற்ற தவறிவிடுகின்றது ஏனெனில் எதிரில்  உள்ள நஞ்சூட்டப்பட்ட உணவு என்று அவர்களுக்கு முன்கூட்டியே தெரிய வில்லை.

No comments:

Post a Comment