Wednesday, December 7, 2022
திரு விளங்குதல்
ஸ்தோத்தரித்தல்
தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை
அப்படியெனில் இங்கு “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் “ என குறிப்பிடுவது எதை ஐயா?
மஹாமந்திரம் எதர்க்கு கொடுக்கபட்டுள்ளது?...தயவு தான் சாதனம் எனில் மந்திரம் எதற்க்கு?
கருணை எனும் தயவினால் சுத்த உஷ்ணம் பெருகாதல்லவா?..அதுக்கு சத் விசாரம் தான் காரியமாக இருக்கிறது...ஆனால் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் தான் சத்விசாரம் என கருதப்படுகிறது...இவற்றில் இவ்விரண்டு விசாரங்களுமே அபர விசாரங்களெயாம்...அதாவது இகலோக விசாரங்கலே...அப்படியாயின் அண்ட பிண்ட விசாரத்தினால் சுத்த உஷ்ணம் வராது என தெளிகிரது....அப்படியெனில் பரவிசாரம் செய்வது எப்படி?
சுத்த உஷ்ணம் என்பது நாடிகளின் சமநிலையினால் வருவது என எந்த அனுமானத்தால் எடுத்துகொள்ளுவது?...சத் விசாரத்தினால் வருமென்றல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...அமுதம் என்பது விசாரமல்ல அல்லவா?
”தயவு எனும் கருணையே என்னை தூக்கிவிட்டது”...தூக்கிவிட்டது என சொல்லுவது ஏன் எனில் வேறு ஏதோ சாதனை சம்பிரதாயம் பெருமானாரால் செய்யப்பட்டுள்ளது...அந்த சம்பிரதாயம் உயர் நிலைகளில் அடைய தயவு தூக்கிவிடும் சாதனமாக இருந்தது, இருக்கிறது....அப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்...அந்த சாதனை என்பது “சத் விசாரம்” எனும் சாதனையேயாகும்..... துரதிஷ்ட்டமாக நாம் இது வரை கேட்டுரிக்கிர சாதனைகள் சத்விசாரம் அல்ல...அவை அண்டவிசாரமும் பிண்ட விசாரமும் மட்டுமேயாகும்...உண்மை சத்விசாரத்தை செயல்படுத்தும் போது தயவு எனும் இயல்பானது “தூக்கி விடும்...அதாவது சாதனை மலரசெய்யும்.....
அதனாலேயே ஜீவகாருண்யமும் சத்விசாரமும் சேர்த்தே வைக்கபட்டிருக்கின்றன.... சத்விசாரம் இல்லத ஜீவகாருண்யம் பூரணமல்ல...அதுபோல ஜீவகாருண்யம் இல்லாத சத்விசாரம் பூரணப்படாது...இவை ரெண்டும் சேர்ந்தே இருக்கின்றன....
நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
இங்கு “ஸ்தோத்தரித்தும் உண்மை விளங்க வேண்டுமென தெய்வத்தை நினைந்தும் நமது குறையை ஊன்றியும் இடைவிடாது இருத்தலே” சத்விசாரம் என கொள்ளபடுகிறது
இதில் “ஸ்தோத்தரிப்பது” என்பது சன்மார்க்கிகளில் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது
இப்படி இருப்பதையே பெருமானார் “நல்ல விசாரணை” என்கிறார்....அதாவது பர விசாரணை என பொருள்
தோத்தரிப்பது என்பது ஜெபிப்பது கிடையாது...இரண்டும் ஒனென நினைந்து கொண்டுள்ளனர்...அப்படி கொள்ளலாகாது.....தோத்தரிப்பதினால் “திருச்செவியேற்றம் “ நடக்கிறது......அதாவது இறைவனின் காதுகளுக்கு எட்டசெய்வதே தோத்திரம்....சதா இறைவனின் திருசெவிக்கு எட்டும் விதம் “ இருப்பதையே தோத்திரம் என்கின்றனர்....அதையே பெருமானாரும் ... “உன் திருசெவிக்கு “ கேட்க்கிறதா..எட்டுகிரதா எனவெல்லாம் வினவுகிரார்
”திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்......நாம் வீட்டில் “திரு விளக்கு “ வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?...
“திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது....அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும் , என்பது பொருள்
திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது...அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார்.
அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம்.கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள்
இப்படி “தோத்திரமானது திருச்செவிக்கு கேட்க்க செய்வதே” சாதனை....சுருங்க சொல்லின், திருவிளக்கானது ஆரம்பகால சாதகர்களுக்கு புரிதல் உண்டாகும் பொருட்டு வைக்கபட்டிருப்பதேயாகும்....கொஞ்சம் தேறினவர்கள் “உண்மை திரு” எனும் இறை அறிவானது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், நாம் பேசும் விஷயங்கள் அனைத்தையும், நாம் என அனைத்தையும் அறிபவனாக இருக்கிறான் என்பதேயாகும். இதனையே “திருவிளங்குதல்” என்பார்கள்...
அப்படி நாம் தோத்தரிப்பது திருச்செவிக்கு ஏறும் படியாக , நாம் சொல்லுவதை “அவர்” கேட்க்கின்றார் எனும் “உண்மை நிலை” உடையவர்களுக்கு “அருள் விளக்கம்” உண்டாகும்
அப்படி நாம் சொல்லி கேட்கின்றவரிடம் அன்பு மலர்கிறது...எப்போதும் நம் சொல்லுவதை கேட்கின்றவராக அவர் இருக்கிறார் என்பதனை உணரும் போது அந்த அன்பு மேலும் மலர்கிறது.....இதை தான் “தெய்வத்தை கண்டாலொழிய தெய்வத்தின் மேல் அன்பு வராது” என பெருமானார் சொல்லுகிரார்
கடவுள்”இயற்க்கை உண்மையாக” இருக்கின்றார்...ஆதலினால் அவரிடம் “இயற்கை உண்மை அன்பு வைத்தல் அவசியம்”.....
இதையே, இப்படி “திரு விளங்குதலையே” “பெரும் திறவுகோல்”...என்கிறார் பெருமானார்.....அதை எட்டும் இரண்டு கூட அறிந்து கொள்ள இயலாத நாயிற்கடையேனாகிய தன்னிடம் இறைவன் தந்தனம் என்கிறார்...இது அவருடைய அடிமைபேறு என்பதனை சுட்டுகிறார்....இதை பக்குவம் இல்லாதவர் எட்டும் இரண்டும் தான் பெரும் திறவுகோல் என வள்ளலார் சொல்லி இருப்பதாக பொருள் கொள்கின்றனர்
உண்மை அவர் எல்லாம் கேட்ப்பவராக இருக்கிறார் என்பது உண்மை....நம் தோத்திரம் கேட்க்கும் என்பதில் ஐயம் இல்லை....ஆனாஅல் அவர் கேட்க்கிறார் என நாம் உணர்தலே ஆரம்பம்....அந்த உணர்தல் நமக்கு வரவேண்டும்...அவர் பார்க்கிறார் என உணர வேண்டும்...அவர் கேட்க்கிறார் என உணர வேண்டும்.....இதனையே “வெளிச்சத்திற்க்கு வருதல்” எனபடுகிறது....ஏனையவை இருளில் செய்யபடுபவை
நாம் ஜெபிப்பதும் அவர் காண்கிறார் , அவர் கேட்க்கிரார் எனும் உனருதல் வரும் போது அது ஆன்ம உணர்தல் ஆகிறது...அப்படி வராது போனால் அவையெல்லாம் இந்திரிய ,மன செயல்களாகவே இருக்கும்...
இதையே சித்த வித்தையிலும் சாட்சி என கொள்ளபடுகிறது....சில சம்பிரதாயங்களில் அக்கினி சாட்ச்சி என இதை சொல்லுகிறார்கள்.....இவை எல்லாம் “திரு நிலை விளக்கங்களே”....மறைவாக சொல்லியவற்றை இங்கு தெளிவாக்கி விடுகிறேன்...அவ்வளவுதான் என் வேலை...
ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment