Wednesday, December 7, 2022
சிருஷ்டி அன்பு
இதயம் அன்பு என்பதும் இறைவனை குறிப்பது அல்ல,
ஆதியில் கடவுளுடைய ஒளித்தன்மையும் இருள் தன்மையின் உசும்புதலினால் கடவுள் தன்மை (முயற்சி) இதற்குத்தான் அன்பு என்று பெயர், இந்த ஜீவன் என்ற அமைப்பு அருளபடுவதும் அருள் தன்மை ஏற்படுவதையே இதையே அன்பு என்பர், மிகவும் அன்பாக இருந்ததும் இதுவே, ஜீவன் என்பது, தனியாக இருக்கக் கூடியது அல்ல இருளாக இருக்கக்கூடிய ஆன்ம அணுவினால் ஒன்றும் செய்ய முடியாதது, இவை இந்த பிரபஞ்சம் உயிரோட்டத்திற்கு வந்தால் தான் ஆண் பெண் தன்மைக்கு வர முடியும் , இந்த இரண்டுக்கும் இடையில் அன்பு என்ற வார்த்தை நிறைந்துள்ளது, இதையேதான் ஆதியில் வார்த்தை இருந்தது, இந்த அன்பு என்கிற வார்த்தையை உண்டாணதினாலே சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானது எல்லாம் அவர் அன்றி உண்டானது வேறொன்றுமில்லை, இந்த உண்டானதற்கும் உருவாக்கப்பட்டதற்கும் இதற்கு தான் சிருஷ்டி என்று பெயர்,நாம் இதையே கடவுள் என்று சொல்கின்றோம் , அனைத்தையும் படைத்து சிருஷ்டித்தவரை தான் கடவுள் என்று சொல்கின்றோம், ஆக இந்த கடவுளுக்கு மரியாதையாக உள்ள வார்த்தை அன்பு என்கின்ற ஒரே வார்த்தை, இந்த அன்பு என்கிற வார்த்தையில் தான் சிருஷ்டி அடங்கியுள்ளது, சிருஷ்டிக்கு ஆதாரமாக உள்ளது ஆண் பெண் என்கின்ற பகுப்பு, இந்த தன்மையே ஆண்ம அனுவிற்கு செயலற்ற தன்மையாகவும் உபகாரமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த அன்பெனும் அணு அன்பெனும் அணுவில் அகப்படும் மலையே, என்றும் அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே என்றும், அந்த அணு தன்மையாக இருக்கக்கூடிய அந்த அனாதி பேரறிவாகவும் நுணுக்கமாகவும் இருக்கக்கூடியது, அறிவுக்கு அறிவாகவும் இருக்கக்கூடியது, எத்தனை பேர்கள் இந்த வார்த்தையை கேட்டார்களோ, தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார்களோ, அத்தனைபேரும் தேவனுடைய பிள்ளைகள் ஆவார், இந்த வார்த்தையும் அதிலுள்ள நுணுக்கத்தையும் பெற்றால்தான் பயனுண்டு, இல்லையென்றால் பிரயோஜனமில்லை, சின்ன வயதில் இருந்து அன்பு என்ற ஒரு வார்த்தை எத்தனை கோடி முறை கேட்டாலும் சொன்னாலும் பாராட்டினாலும் இந்த அறிவுக்கு அகப்படாது, உயிர்ப்பானது இந்த தெய்வத்தனுடைய வார்த்தைகளை உனக்கு ஆசீர்வாதமாக கொடுக்கப்பட்டுள்ளது, உயிருக்கு ஆதாரமாக இருக்கக்கூடியது, ஆதாரமாகவும் உள்ளது, அன்பு என்ற அந்த வார்த்தை சிருஷ்டிக்கு ஆதாரமானது இரட்சிப்புக்கு ஆதாரமானது, அன்புதான் இந்த இருண்ட பொருளிலிருந்து ஒளிக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருவதே, இந்த அன்பு என்ற ஒரே வார்த்தையில் இந்த இருண்ட பொருள் மலர்ந்ததினால் தான் சிருஷ்டிக்கு ஆதாரமாக இருக்கின்றது, சிருஷ்டிக்கு புரிதல் வந்ததும் இந்த ஆதாரமான வார்த்தையை நாம் புரிந்துகொள்ளவேண்டும் ,இதனூடாக இவன் இரட்சிப்புக்கு செல்ல வேண்டும், இங்கு இரண்டும் அடங்கியுள்ளது, ஒன்று சிருஷ்டி மற்றொன்று முடிவான இறுதிநிலை, இந்த இரண்டும் அன்பு என்ற வார்த்தையில் அடங்கியுள்ளது, இந்த அன்பு ஒளியிலிருந்து வந்ததை எட்டிப் பிடிக்க முடியாது இது ஜீவ ஓட்டமாக உள்ளது ஒளியை நாம் எப்படி எட்டிப்பிடிக்க முடியும் இந்த மனிதனால் அறிய முடியாதது, இதையே மனிதன் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர், இந்த அன்பு என்ற ஒரு வார்த்தைதான் கடவுள் தன்மையாகவும் உள்ளது, இந்த அன்பான ஒளியில் தான் பிரவேசிக்க முடியும் வேறு எந்த உபகரணங்களாலும் அன்பையும் ஒளியையும் அறிய முடியாது இதை அறிந்தவன் தான் ஆன்மீகத்தில் பயணிக்க முடியும்,புரிந்தவர்களே பாக்கியவான்கள் இறைவனுடைய பிள்ளைகளாக இருப்பர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment