Sunday, December 4, 2022

ஏழாம் வாசலும் - பத்தாம் வாசலும் ==== தமிழ் என்ற சொல்லில் த்-அ-ம்-இ-ழ் என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன. இதனால்தான் "தமிழ்"  ஒரு பஞ்சாட்சரம் என்று சொல்கிறோம். த், ம், ழ் என்ற மூன்று எழுத்துக்களும் மெய்யெழுத்துகள். அ, இ என்ற இரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள். "த்' என்பது 7-வது மெய்யெழுத்து "ம்' என்பது 10-வது மெய்யெழுத்து "ழ்' என்பது 15-வது மெய்யெழுத்து "தமிழ்" என்ற சொல்லில் உள்ள "த" என்ற உயிர்மெய்யெழுத்து "த், அ' என்ற இரண்டு எழுத்துக்களும் இணைந்து சேர்வதால் உருவாகிறது. "த்' என்ற மெய்யெழுத்து பதினெட்டு மெய்யெழுத்துக்களின் வரிசையில் "ஏழாவதாக " அமைந்திருக்கின்றது. தத்துவ உருவம் முதலிய தச காரியங்களில் அதாவது, பத்துக் கட்டளைகளில் இது ஏழாவதாக உள்ள "சிவ உருவம்" என்ற கட்டளையாகும். தத்துவ உருவம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்ம உருவம், ஆன்ம தரிசனம், ஆன்மசுத்தி, சிவஉருவம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவை பத்துக் கட்டளைகள். தகராகாசம் என்றால் என்ன? "த" என்ற எழுத்தை எண்ணாக எழுதினால் அதற்கு ஆயிரம் என்று பொருள். ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரையுடன் ஒப்பிட்டு நமது மூளையைக் குறித்துப் பேசுவார்கள் சித்தர்கள். மூளைதான் அறிவு விளக்கம் தரும் இடம். இந்த இடத்தைத்தான் தகராகாசம் (தகர ஆகாசம்) என்று குறிப்பிடுகிறார் வள்ளலார்) ஏழாவது கட்டளையாகிய சிவ உருவத்தைக் காண்பதற்கு எங்கும் எதிலும் இறைவன் கலந்து இருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்குத்தான் முடியும் என்பதை இந்த "த" என்ற உயிர்மெய்யெழுத்து குறிக்கிறது. உயிரெழுத்து வகையில் மூன்றாவதாக உள்ள "இ' என்ற இந்த எழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பத்தாவதாக உள்ள "ம்" என்ற மெய்யெழுத்துடன் சேர்ந்து "மி" என்ற உயிர்மெய் எழுத்தாகிறது. பத்தாவது கட்டளையாகிய சிவபோகம் பெறுவதற்கு தெளிவுபெற்ற மக்கள் எல்லாருக்கும் உரிமை உண்டு என்பதை இந்த "மி" என்ற உயிரெழுத்து குறிப்பிடுகிறது. "ழ்' என்ற மெய்யெழுத்து, மெய்யெழுத்து வரிசையில் பதினைந்தாவதாக இருக்கிறது. இது வளர்பிறையின் நிறைவைக் காட்டும் பெüர்ணமியை அதாவது, முழுநிலவைக் குறிக்கிறது. நமது பரதகண்டம் சிவபோக பூமி. "தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது. வானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும், ஞானவெளியில் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியையும் தமிழில் காணலாம். சொல்லுக்கு அடங்காமல் சுத்த மெüனமாக இருந்து அனுபவிக்கும் இயற்கை உண்மைதான் தமிழ். தமிழ் மொழிதான் மிகமிக எளிதாக சுத்த சிவ அனுபவத்தைக் கொடுக்கும் ஆற்றலை உடையது.   --- திரு. ரியான் ஐயா அவர்கள் ”ஏழாம் வாசலின் கீழாய்ந்து வந்தெதிர்த்த தலத்திற்க்கு மேலே தசை மூளை எலும்பிற்க்கு நடுவே நெற்றி முகமூக்கிடையில் முண்டகபார்வையில் நாளாம் பதினாலில் உலாவி நின்ற நாயகனே நானுன்னோடிரந்து கேட்ப்பேன் கேளா செவிக்கு மீளாநெருப்பாய் கிருபை விளைத்தெனக்கு உதவி செய்வாய் பாழாம் குபிரென்னை அணுகாமலே படைத்தோனே உன்றன் அடைக்கலமே == பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்

No comments:

Post a Comment