Thursday, December 8, 2022

குருவும் மறை ரகசியமும்

குருவும் மறை ரகசியமும் ஒரு  குரு வானவர் தன்னுடைய சீடனை பூனைக்குட்டி போல் பார்த்துக் கொண்டிருப்பார் பூனை எப்படி அதனுடைய குட்டிகளுக்கு பேசத் தெரியாமல் அமைதியாக இருக்கும் எந்த சப்தமும் இல்லாமல் இருக்கும் அப்போது அந்த தாய் பூனை அந்த குட்டிகளை வாயால் கவ்வி பிடித்து  இடம் மாற்றிக் கொண்டே இருக்கும் அந்த பூனைடைய பல் அந்த குட்டியின் மேல் எந்த இடத்திலும் தழும்புப்படாமல் பார்த்து அன்பாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சீடன் குருவிடம் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்தால் அவனுக்கு அந்தப் பக்குவம் இருந்தால் அவன் தேர்ச்சி பெறுவான், ஒரு பூனையைப் போல் அமைதியாக இருக்க வேண்டும் அப்பொழுது குருவினுடைய தத்துவார்த்த விஷயங்கள் அவனுக்கு புரிய வரும், அதே போல் இன்னொரு சீடன் குருவிடம் குரங்கு போல் இருப்பான், குரங்கு தன்னுடைய குட்டி என்ன பண்ணும் குரங்கை ஓடிக்கொண்டே இருக்கும் அப்பொழுது குரங்கின் வயிற்றை  கவ்வி பிடித்துக் கொண்டு கவி பிடித்துக் கொண்டு ஓடும், அப்பொழுது அந்த குட்டி குரங்கு தாயின் உடைய வயிற்றை சரியாக பிடிக்கவில்லை என்றால் அந்தக் குரங்கு கீழே விழுந்து அகால மரணம் அடைந்து விடும், இதுபோல்தான் குரு சீடருடைய உறவு குரு யாரை எந்த இடத்தில் எப்படி தத்துவார்த்த விஷயங்களையும் தன்னுடைய இதயத்தில் இருந்து அன்பான விஷயத்தையும் அள்ளிக் கொடுப்பாரோ அவர் அவர்கள் தகுதிக்கேற்ப வழங்கிக் கொண்டிருப்பார் இது சீடருடைய செயலைப் பொறுத்து அமையும் அதை விடுத்து சில சீடர்கள் இங்கே ஒரு குருவிடம் இருந்து கொண்டு வெளியே சுற்றிக்கொண்டு நாய் போல் சுற்றிக்கொண்டு அந்த தெருவழியாக நாய் ஓடும் அதைத் தாண்டி ஒரு மாதம் கழித்து பக்கத்து தெரு வழியாக ஓடும் அப்பொழுது அந்த நாய் அடுத்தவன் கையால் கல்லடி பட்டு மண்டை உடைந்து ரத்தத்துடன் கால் உடைந்து ஓடிக் கொண்டிருக்கும், இப்படிப்பட்ட சீடர்களும் இருக்கின்றார்கள் குருவிடம் எவ்வளவு பணிந்து பயபக்தியுடன் இருந்து அந்த தத்துவார்த்த விஷயங்களையும் அவருடைய அன்பிலிருந்து உதயமாகும் அன்பான விஷயத்தையும் செவிப் பருகிகின்றானோ அவனுக்கு அவன் அறிவு தக்க நிலைக்கேற்றவாறு வந்து ஏற்றமாகும். அவன் தெரியாமல் அடைந்த அறிவு அறிவுக்கண் போல் ஊற்ற்றெடுத்துக் கொண்டு அவன் நாதம் ரூப லிங்கத்திலிருந்து அறிவு அருவி போல ஓடிக்கொண்டே இருக்கும் இந்த இயற்கையின் சக்தி அருளால் அவனுக்கு அனைத்தும் கிடைக்கும் இது இல்லாமல் ஒரு சீடன் நாய் போல் சுற்றிக்கொண்டே தெருத்தெருவாக நாய் போல் சுற்றிக்கொண்டு இருந்தால் அவனுக்கு என்ன கிடைக்கும் அடுத்து தெருவில் இருந்த எலும்பு துண்டுகளும் கள்ளடியும் இதுதான் கிடைக்கும் இந்த நாலு தெரு சுத்தி சுத்தி வந்த நாய்க்கு என்ன தெரியும் நாளிடத்தில் வாய் வைத்துவிட்டு வந்து அதை வெளியே கொப்பளித்துக் கொண்டும் வாந்தி எடுத்துக் கொண்டும் சுற்றிக் கொண்டே இருக்கும் இப்படியும் ஒரு சில சீடன் ஜென்மங்கள் இந்த குரு பதவிக்காக போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டு இந்த இடம் விட்டு மாறி கொண்டும் இந்த ஜென்மத்தில் பிறந்தும் இறந்தும் இருந்து கொண்டே இருக்கின்றார்கள் அவருடைய வாழ்க்கையும் அப்படியே முடிந்துவிடும் தனக்கென்று அறிவு மலராத வரை அவன் இப்படியே தான் இருப்பான் மாற்றம் அவனுக்குள் வரும் வரை அவன் அமைதியாக இருப்பது நல்லது இல்லையென்றால்  மந்த புத்தியே அவனை அழித்து விடும்

No comments:

Post a Comment