Thursday, December 8, 2022
செவிச்செல்வம்
உங்களுடைய காதுகள் இன்னிசையையும் கேளிக்கூத்துகளையும் கேட்கின்றது இந்த செவிகளின் உதவியால் உங்களால் இறைவனின் பேச்சை கேட்க முடியுமா? நிச்சயமாக முடியாது எழுத்தோ மொழியோ இல்லாமல், வார்த்தையோ குரலோ இல்லாமல் பேசப்படும் இந்தப் பேச்சை நீங்கள் கேட்க விரும்பினால் உங்கள் மனதின் செவிக்கு திறமை வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.
=========== உன் உள்ளம்===========
இறைவனை அறிய மனிதனின் அவயங்களில் எந்த உறுப்பும் கிடையாது உள்ளம் ஒன்று தான் , இந்த சிறப்பு மிக்க உள்ளம் மனிதனிடம் இருப்பதால்தான் அவன் மற்ற படைப்புகளை விட சிறந்து விளங்குகின்றான், உள்ளம் தான் இறைவனை அறிகின்றது, அது தான் அவனை நெருங்குகின்றது சதாகாலமும் இறைவனை தேடிக் கொண்டே இருக்கின்றது, அதுவே தான் இறைஞானம் அனைத்தையும் தனக்குள் சேகரித்துக் கொள்ள முயற்சி செய்கின்றது, உள்ளம் என்ற சக்தி வாய்ந்த அரசன் மற்ற உறுப்புக்கள் அனைத்தையும் அடக்கி ஆண்டு வேலை வாங்குகின்றான், அதன் கட்டளையை மீறும் துணிவு கண்ணுக்கும் நாவுக்கும் கிடையாது, அதன் தீர்ப்பை மாற்றும் துணிவு காலுக்கும் காதுக்கும் கிடையாது, அதன் அடக்கு முறையை தகர்த்தெறியும் துணிவு எந்த உறுப்புக்கும் கிடையாது, உறுப்புக்கள் அனைத்தும் உள்ளத்தின் கட்டளையை தான் பின்பற்றி ஆக வேண்டும் மனத்தின் ஆட்சி மனிதனின் உடல் முழுவதும் வியாபித்து நிற்கின்றது
=========தூய்மை அன்பு ========
மனம் எப்பொழுதும் தூய்மையுடன் இருக்க வேண்டும், இறைவன் மீது நாம் பேரன்பு கொண்டாள் அந்த அன்பின் எதிரொலியாக, நாம் மற்ற அனைத்தையும் மறந்து விட்டால், இறைவனின் பேரன்பு அதற்கு உண்டு. இறைஞானம் பொங்கிப் பெருக வசதி உண்டு, நாம் தீயவழியில் திரும்பிவிட்டால் இறைவனின் வெறுப்பும் அதற்குண்டு, பிறகு இறைஞானம் மனதின் உள்ளத்தில் ஒளி விடுவதற்கு வழியே இல்லை ,மனத்துக்கு தான் தண்டனை அளிக்கப்படுகிறது மனம் தான் வெகுமதியையும் பெறுகிறது, நல்லதை செய்யும் மனம் நன்மையடைகிறது, தீமையை செய்யும் மனம் தண்டனைக்கு உள்ளாகிறது, உங்களை கெட்டவர் என்று தீர்மானிப்பதனால் ,இதனால் நம் மனத்தையே நாம் முதலில் ஆராய வேண்டும், நம்மை பற்றி நாமே என்ன எண்ணுகின்றோம்? என்று நெஞ்சில் கைவைத்துப் பாருங்கள் உங்கள் மனம் தூய்மையான தன்மை அடையும் வரை உங்களுக்கு தூய்மையானவர் என்ற பெயர் பொருந்தாது, விஷம்சேர்க்கப்பட்ட தேனை யார் தான் விரும்பப் போகிறார்கள்? உங்கள் மனதில் விஷமத்தனமான திட்டம் உருவாகிக் கொண்டிருக்கும் போது உங்கள் சிரிப்பில் உள்ள இனிப்புக்கு யாருக்கு தான் பயன் தரப் போகின்றது.
இறை வணக்கமும் பக்தியும்
இறைவனின் வழியில் நடப்பதாக நாம் சொல்கின்றோம் உண்மையில் உங்கள் உடலில் எந்தப் பகுதி இறைவணக்கம் கூறுகின்றது தெரியுமா? உங்கள் உள்ளம் தான் இறைவணக்கம் புரிகின்றது இறைவனை வணங்குவதும் அவனுக்கு பக்தி செய்வதும் தான் உங்கள் மனதில் பக்தி உருவாகும் அப் பொழுது அதன் அதிர்வலைகள் உங்கள் அவயங்களில் ஏற்படுகின்றன உங்கள் மனதில் தீய எண்ணம் உருவாகும் பொழுது உங்கள் அவயங்கள் செயல் புரிகின்றன, மனதில் பக்தி ஏற்படாமல் உங்களால் இறைவனுக்கும் பக்தி செய்ய முடியுமா ,மனதில் தோன்றும் தீய எண்ணமும் நல்ல எண்ணமும் உடனுக்குடன் உங்கள் அவயங்களால் செயல்படுத்தப்படுகின்றன உண்மையில் பக்தன் என்ற பெயர் மனதுக்கு தான் பொருந்தும், மனதின் தூண்டுதலால் தான் இறைவணக்கம் உருவாகின்றது மனதின் உணர்வினால் தான் மனிதன் நிலையின்றி தடுமாறுகின்றான், அதனால் தான் அவன் அறிவுக்கு பொருந்தாத செயல்களில் ஈடுபடுகின்றான் (சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்) மனத்தில் உள்ளது தான் செயலில் வரமுடியும், தான் என்னாத ஒன்றை தான் சிந்திக்காத ஒன்றை எந்த மனிதனும் செய்யப் போவதில்லை
=====ஆன்மீகமும் மனமும்=====
நம்முடைய மனம் எப்படி இருக்கின்றது அதைப்பற்றி நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும், மனதை நாம் அறிந்து கொண்டால் தான் இறைவனை அறிந்து கொள்ள முடியும் மனதை அறிந்து கொள்ளாதவர்கள் இறைவனை அறிந்து கொள்ள முடியாது நம் மனதைப் பற்றியே நம்மால் ் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் மற்றவர்களை பற்றியும் மற்றவற்றைப் பற்றியும் எப்படி அறிந்து கொள்ள முடியும், ஆன்மீகத்துறையில் பெரும்பாலோர் மனதை அறிந்து கொள்ளாமலேயே பின்தங்கி விடுகின்றார்கள், தம் மனதைப் பற்றியும் தன்னுடைய உணர்வுகளைப் பற்றியும் எண்ணிப் பார்ப்பதில்லை, தம் மனதைப் பற்றியே அறிந்து கொள்ளாமல் நாம் எவ்வாறு தியானம் பக்தியில் பிறவேசிக்க முடியும் நம் மனம் வீணான எண்ணங்களுக்கு அடிமையாகி கிடக்கின்றது அதில் ஒரு சில வேலை சிந்தனையின் சிறப்பால் மேல் நோக்கி உயறமுடியும் இன்னும் சில சமயம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி அதல பாதாளத்தில் விழுந்து விடமுடியும் எல்லாம் வல்ல இறைவன் மனிதனின் மனதை எப்படி எல்லாம் ஆட்டி படைக்கின்றான் அவனுடைய ஆன்மீக சக்தி கைகளில் மனிதனின் உள்ளங்கள் தடுமாறி வீழ்கின்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment