Thursday, December 8, 2022
நோயுடையார் = வாயுடையார்
நோயுடையார் = வாயுடையார்
நோய் இருக்கிறவங்க கிட்ட போய் கேட்டு பார்த்தா, அவன் கடவுளிடம் தான் வேண்டி கொண்டு இருப்பான் தன் வாயால், அவனுக்கு இந்த ஜென்மாந்தரமா வந்த வினையின் தொகுப்பு அவனுக்கு புரியாது, தெரியாது, கடவுளை வேண்டிக் கொண்டே இருப்பவர்களிடம் கேட்டாள் அவருடைய நோயைப் பற்றிய தன்மையும் அறிந்து கொண்டே இருப்பான்,நம்முடைய வாழ்க்கையில வினை என்ற ஒரு வார்த்தை அதிகமாகஉபயோகப்படுத்தப்படுகின்றோம்இந்த வினை என்பது உன்னுடைய வாழ்க்கையில நீ முன் ஜென்மத்தில் செஞ்ச வேலைதான் உன்னை இந்த மாதிரி எல்லாம் பாடா படுத்துது,அப்படி என்று சொல்ல கூடிய ஒரு விஷயம் இருக்குது,
வந்த வினை தொகுப்பு அப்படி என்று சொல்லுவாங்க, அந்த தொகுப்பு பலகோடி காலமாக கர்ப்பகோடி காலங்களாக இந்த தொகுப்பு உன் வாழ்வில் ஜென்மம் ஜென்மம் எடுத்து வந்து கொண்டிருக்கின்ற ஒரு தொகுப்பு இதை அவன் சீக்கிரம் இதை அறிந்து கொள்ள முடியாது புரிந்து கொள்ள முடியாது இது சூட்சமமாக இருக்கக்கூடிய மிகப்பெரிய மகா ரகசியமாகவும் இருக்கின்றது
நிலக்கடலை வித்து ஒன்று இருக்கின்றது அந்த நிலக்கடலையை விதைத்தால் அந்த வித்தானது வளர்ச்சி சில வாரத்துக்குள் வித்து முளையிடும் அதே மற்றொரு வித்தானது நீண்டகாலம் முளைத்து வர நேரம் எடுத்துக் கொள்கின்றது, அந்த மாதிரி தான் இந்த ஜீவன்ல இருக்குற நம்ம உடம்புகள் அனைத்துமே ஒரு ஒருவருக்கும் ஒவ்வொரு வித அமைப்புக்குள்ளான உடம்பாக இருக்கின்றது, ஒவ்வொரு அசைவுகளும் இயக்கங்களும் அங்கங்களும் ஒரு ஒரு வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றது,
ஒருவர் உடம்பில் ஆரோக்கியமாக இருப்பாங்க ஒருவர் காலம் முழுவதும் நோயுற்றே இருப்பாங்க, ஒரு சிலர் படுத்த படுக்கையிலேயே இருப்பாங்க, இந்த மாதிரி பல விதமான மனிதர்கள் நோயுடனும் அவஸ்தை பட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள், ஆனா இந்த பலகோடி கற்பகாலமாக இந்த மனிதன் உடலை எடுத்து வந்து கொண்டு இருந்து அதுல அந்த வினையின் தொகுப்பை அனுபவித்து தான் ஆக வேண்டும், அந்த அனுபவித்ததில் ஒரு சிலர்களுக்கு அந்த வினை பாதிலேயே கழிந்து போய்விடும்,
உதாரணமாக ஒருத்தருக்கு கேன்சர் இருக்கு அப்படின்னா அந்த கேன்சர் உள்ள நபர் கொஞ்ச காலம் இருந்துட்டு அந்த கேன்சருக்கு வந்து இருந்த இடம் அறிகுறி இல்லாமயே போய்விடும், அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையிலும் ஒரு சில மிராக்கள் நடந்த ஒரு சம்பவங்களும் இருக்கின்றது, அதே போல தான் ஒருத்தருடைய வாழ்க்கை தரமும் வாழ்க்கையில அவருடைய அனுபவிக்கக்கூடிய உணவு முறைகளும் பழக்க வழக்க முறைகளும் அவர்களுடைய உடல் அமைப்பு மாற்றிக்கொண்டு மனோ சக்தியாள் வரக்கூடிய அந்த சக்தி ஒருவர் உடல் அங்கங்கள் சரியான கோணத்தில் உடல் அமைத்துக் கொண்டிருக்கின்றது அது அவர்களுடைய வினையின் மிகப்பெரிய மாபெரும் ரகசியமாகவும் இருக்கின்றது, இதன் பிரகாரம் பார்த்தோம்னா ஒரு மனிதனுக்கு ஒருத்தருக்கு தயிர்சாதம் ரொம்ப பிடிக்கும், ஒருத்தருக்கு புளிசாதம் பிடிக்கும், ஒருத்தருக்கு கீரை சாதம் பிடிக்கும், இந்த மாதிரி தான் மனிதனுடைய அறுசுவை உணவுகளும் அவருடைய பழக்கவழக்கங்களும் அவனுக்கு உள்ள இருக்குது, ஒருத்தனுக்கு ஒன்று பிடிக்கும் இன்னொருத்தனுக்கு வேறு ஒன்றும் பிடிக்கும் ஒருத்தன் மிகவும் கொடூரமாக இருப்பான், மற்றொருவன் ரொம்ப சாந்தமாக இருப்பான், இது எல்லாமே அவருடைய வாழ்வியல் முறைகளும் அவருடைய உடல் சார்ந்த அமைப்புகளும் அவனுக்குள்ள இருக்க கூடிய அந்த வித்துவின் மகத்துவமும் பொருந்திய நிலையில் தான் இருப்பான், இதுல அவனுக்கு அறிவு வயப்பட்டு அறிவால் அவர் சிந்தித்து செயல்பட்டு அந்த வினையே போக்கக்கூடிய ஒரு விஷயம் புரிந்து கொண்டார் என்றால் அவனுக்கு எப்பேர்பட்ட ஒரு விஷயங்களும் அவனுக்கு வந்த நோயும் எல்லாமே அவனுக்கு வந்த வினையின் வித்து என்றும் புரிந்துகொள்ள வான்,
ஒரு சிலருக்கு நோய் வரத்தான் செய்யும் அதை அனுபவிச்சு தான் தீரனும். அப்படி என்ற எண்ணத்தில் போவோம், ஒரு சில விஷயங்கள் வியப்பாக இருக்கின்றது, பெரிய மகான்கள் ஞானிகள் எல்லாருமே ஒரு ஒரு காலகட்டத்தில் ஒரு ஒரு வினையின் சார்பாக நோயுற்று அவதிப்பட்டு உள்ளவர்களும் இருக்கின்றார்கள், இப்படித்தான் ஒரு சில விஷயங்கள் நடக்கும் இதே போல் ஒருத்தருக்கு ஒரு சின்ன குழந்தைக்கு கேன்சர் இருக்கின்றது, அந்த குழந்தை யை மிகப் பெரிய டாக்டர்கள் பரிசோதித்து விட்டார்கள் குழந்தை கொஞ்ச காலம் தான் உயிருடன் இருக்கும் என்று கூறினார்கள்,
அந்த கேன்சர் வந்த குழந்தை ஒரு பெரிய சித்த ஞானியிடம் அழைத்து சென்றார்கள், அந்த குழந்தையை அந்த ஞானி வயிற்றை தடவி கொடுக்கிறார் தடவி கொடுத்து பார்த்த உடனே அந்த குழந்தையை ஆசீர்வாதம் செய்து அனுப்பிவிடுகின்றார், அந்த குழந்தையை இரண்டு நாள் கழித்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தால் அந்த குழந்தைக்கு அந்த கேன்சர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றது, இது தான் அந்த வினையின் ஆதிக்கம் உள்ள வரை செயல்படும் பின்பு அந்த நோயின் தாக்கம் குறைந்து கொண்டு சரியாகிவிடும், இவை எல்லாமே மிராக்கலாகவும் நடக்கும், அதனால் இந்த வினை என்பது அவன் கூடவே வந்தது தான், அந்த வித்தாகி வந்ததை அனுபவித்து தான் ஆக வேண்டும், வாழ்க்கை என்பது வாழ வேண்டிய அரிய பொக்கிஷம், அதை அறிவு கூர்ந்து வாழ்ந்தால் நலம்,
நாள் என் செயும்?
வினைதான் என் செயும்?
எனை நாடி வந்த
கோள் என் செயும்?
கொடும் கூற்று என் செயும்?
குமரேசர் இரு
தாளும் சிலம்பும்
சதங்கையும் தண்டையும்
சண்முகமும்தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
🌷நன்றி பித்தன்🌷
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment