Wednesday, December 7, 2022

உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று

உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று என்னல்லாமோ செஞ்சு பாக்குறோம்..ஏதெல்லாமோ படிச்சு பாக்குறோம்..என்ன படிச்சாலும் சந்தேகம்ங்கிறது தீர்ந்தபாடில்லை. நாம இருக்குற நிலமை என்ன...எப்பை மாட்டிகிட்டு தவிக்கிறோம்...எங்க மாட்டிகிட்டு திணறுகிறொம்ம்..இப்படி அல்லோலபட்டு வாழ்க்கை பாழாக போறதுக்கு என்ன பாவம் செஞ்சோம்ங்கிறது எத்தனை காலம் யோசிச்சாலும் புத்திக்கு வராது, தீர தீர கேள்விகள் பல பதிலில்லாமல் பெருகிகிட்டே தா வரும். புத்தர் மாதிரி எங்காச்சும் போயிருந்து துக்கத்துக்கு காரணம் என்னாண்ணு ஆலோசனை பண்ணாலும் பதில் வராது.எண்ணா நாம மாட்டி கெடக்கிற விதம் அப்படி. ஒரு குண்டாக்கு நூல் கட்டை ஒழுங்கில்லாமல் சின்னி சிதறி அலங்கோலமாக்கி ஒரு குழந்தைகிட்ட குடுத்து அதை அவுத்து சீராக சுற்றி வைக்க சொன்னா நடக்கிற காரியமா என்ன ..அது போலத்தான் வாழ்க்கையும்...எந்த ஒழுங்கும் இல்லாம ஆயிரம் கோடி காலத்து கர்மங்கள் வினை தொகுப்புகள் அங்கிட்டும் இங்கிட்டுமாக கோடி முறை குதர்க்கமா குழப்படியா ஒண்ணுக்கு உள்ள ஒண்ணாக, அது மற்றொண்ணுக்கு உள்ளாக , அது எல்லாம் ஆயிர கோடி முறை கண்ணிகளால் இறுக்கபட்டு கண்ணிகள் இறுகுமே தவிர இளகாமல் அமைந்த த்ன்மையால் கடைசியில் சாவு தான் நிச்சயம்ண்ணு வந்து வாய பொளந்து கிட்டு நிக்குது. அகத்தியர் சொல்ற மாதிரி,அருமையான புரிதல் வந்தா புரியும், ”உடல் உயிரும் பூரணமும் மூன்றுமொன்று, உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறென்பர்” என்கிறார். உடல் எங்கிருந்து ஆரம்பம்ண்ணு கேட்டா பதில் இல்ல, உயிரின் ஆரம்பம் கேட்டாலும் பதில் இல்ல, அப்ப பூரணம் என்பது பூரணமாக கைவிட்டு போச்சு. மனிதன் பூரணமாகவே இருக்கிறான்,பூரணமே அவன் இயற்கை. இதை தான் வேத வசனமும் ‘பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத்பூர்ணம் உதச்சதே” என சொல்லுது. அகத்தியரின் வசனத்தின் உயர்ஞானம் இதுவே. உடல் என்பது பரிபூர்ணத்துக்கு வேறல்ல. உயிர் என்பது பரிபூர்ணத்துக்கு வேறல்ல, அது போல பரிபூர்ணம் உடலுக்கும் உயிருக்கும் வேறல்ல, இவை மூன்றும் ஒன்று தான்.இவை வெவ்வேறு எனுமிடத்தில் மனம் குழப்பம் மிகுந்து புரிதல் இன்றி அலை போல திணறுகிறது. அன்பே சிவம்

No comments:

Post a Comment