Wednesday, December 7, 2022

ஒலி_ஆலோசனை

ஒலி_ஆலோசனை - எல்லோருக்குள்ளும் இருப்பதைப் போல உங்களுக்குள்ளும் தொடர்ந்து ஒரு உள்குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ,அதைக் கேட்பதற்கு நாம் மெளனமாக இருக்கவேண்டும். தலை ரொம்பவும் சத்தம் போடுகிறது. ,அதனால் நிசப்தமான, இதயத்தின் மெல்லிய குரலைக் கேட்க முடியாது, மேலும் அது மெல்லிய, சிறிய குரல். எல்லாமே அமைதியாக இருந்தால் மட்டுமே அதை கேட்கமுடியும், ஆனால் அதுதான் உங்களுக்கும் பிரபஞ்சத்துக்குமான தொடர்பு. ஒருமுறை கேட்டுவிட்டால், நீங்கள் எங்கே இணைந்து, எங்கே தொடர்பாகி, எங்கே பிரபஞ்சத்தோடு இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்பது தெரிய வரும். ஒருமுறை அதை கேட்டு விட்டால் நீங்கள் அதனுள் சுலபமாக செல்லலாம். அதில் கவனம் வைத்தால் பின் நீங்கள் எளிதாக அதை கேட்கலாம். நீங்கள் எப்போதெல்லாம் அங்கே போகிறீர்களோ, அப்போதெல்லாம் அது உங்களுக்கு புத்திளமை அளிக்கும். அது உங்களுக்கு அற்புதமான பலத்தை கொடுக்கும், மேலும் மேலும் அதிக உயிர்ப்போடு வைத்திருக்கும். ஒருவர் அந்த உள்சத்தத்தை மறுபடியும் மறுபடியும் கேட்டால் அவர் , தெய்வீகத்தோடு உள்ள தொடர்பிலிருந்து விலகமாட்டார். அவர் இந்த உலகில் வாழலாம், ஆனாலும் அந்த தெய்வீகத்தன்மையோடு தொடர்பிலேயே இருக்கலாம். இப்படியே நாளடைவில் இந்த தந்திரத்தை தெரிந்துகொண்டால், சந்தையில் இருந்தால்கூட உங்களால் அதை கேட்கமுடியும். ஒருமுறை அதை தெரிந்து கொண்டு விட்டால் பின் அதை கேட்பதில் சிரமம் எதுவும் இருக்காது. முதல்முறை கேட்பதில்தான் பிரச்னை, காரணம் எது எங்கிருக்கிறது, அல்லது அது என்ன அதை எப்படி அனுமதிப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை. அதற்கு தேவையானதெல்லாம் மேலும் மேலும் மெளனமாக இருப்பதுதான். . மெளனமாக உட்காருங்கள். உங்களுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம், தினமும் ஒருமணிநேரம், எதுவும் செய்யாதீர்கள் உட்காருங்கள் கேளுங்கள். சுற்றிலுமுள்ள சத்தங்கள் எல்லாவற்றையும் கேளுங்கள், எந்த குறிப்பிட்ட காரணமும் இல்லாமல், அதற்கு என்ன அர்த்தம் என்று விளக்கம் சொல்லாமல், எந்த காரணமுமில்லாமல் கேளுங்கள். அங்கே ஒரு சத்தம் இருக்கிறது. அதனால் அது ஒருவரால் கேட்கப் படுகிறது. மெதுவாக, மெதுவாக, மனது மெளனமாக இருக்கத் துவங்குகிறது. சத்தம் கேட்கப்படுகிறது ஆனால் மனம் அதற்கு இனிமேலும் விளக்கம் கொடுப்பதில்லை. இனிமேலும் அதை பாராட்டவில்லை, இனிமேலும் அதைபற்றி யோசிப்பதில்லை. திடீரென்று அந்த இருப்பு மாறுகிறது. மனம் மெளனமாக இருக்கும்போது,, வெளிசத்தத்தை கேட்கும்போது, திடீரென்று ஒரு புதியசத்தம் கேட்கிறது ஆனால் அது வெளியே இருந்து இல்லாமல், உள்ளேயிருந்து கேட்கிறது. ஒருமுறை கேட்டுவிட்டால், பிறகு கயிறு உங்கள் கையில்தான். அந்த சங்கிலியையே பின்பற்றுங்கள், அதில் ஆழமாக இன்னும் ஆழமாக செல்லுங்கள். உங்களுடைய இருத்தலில் மிகஆழமான பகுதி ஒன்றுள்ளது, அதில் போகதெரிந்தவர்கள் முற்றிலும் ஒரு வித்தியாசமான உலகத்தில், ஒரு தனியான யதார்த்ததில் வாழ்பவர்கள். - ஓஷோ

No comments:

Post a Comment