Thursday, December 8, 2022

குருவை அறியாதவன் குருடன்

குருவை அறியாதவன் குருடன் குருவே ஞானம் என்பார்கள் நாம் பல இடங்களில் பல தடவை கேட்டு இருக்கோம், படித்து இருக்கோம், நாம் என்ன நினைப்போம், குரு தான் ஞானமாக இருக்கின்றார் என்று முடிவு கட்டி விடுவோம், அப்புறம் என்ன இந்த புருஷ நெறியில் குருவிற்கு சேவை செய்ய போட்டி போட்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு நிற்போம், பட்டு வேட்டி கட்டிக் கொண்டும், இடுப்பில் பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டும், கைகளில துணியை வைத்துக் கொண்டும், இருப்பவனும் உண்டு. தலையிலும் கக்கத்திலும் வைத்திருப்பவனும் உண்டு இப்படிப்பட்ட குருவும் சீடனும் தகுதியில்லாதவர்கள், தேவையில்லாதவர்கள், குருவிற்கு குரு என்றால் என்ன என்று பொருள் கேட்டால் புத்தகத்தின் பக்கத்தை புரட்டுவான், குரு என்றும் (கு ) என்றால்  என்ன என்று கேட்பான், எல்லா சீடனும் சொல்வார்கள்,  அஞ்ஞானம் என்றும் (ரு)  என்ன என்று கேட்டால்( ரு )என்றால் பிரகாசம் இப்படி குருவும் சீடனும் குருடாட்டம் ஆடுவார்கள், இப்படி விளக்கம் சொல்லி கொண்டு இருப்பார்கள், இந்த ஞானம் தான் மிகப்பெரிய ஞானம் என்றும் இதைவிட பெரிய ஞானம் எங்கும் கிடையாது என்றும் குரு பொலந்து கட்டுவார்கள், அதாவது (கு) என்ற அஞ்ஞானத்தை அடக்கி ஞானத்தை தானம் செய்கின்ற பகவானுக்கு தான் தேவ சொரூபத்துக்கான பெயர் சத்குரு என்றும் பெயர். என்றும் மிகப் பெரிய வேதாந்த ரகசியத்தை சொல்லிக் கொடுப்பவர் தான் இந்த கூறுகெட்ட குரு அடிமாட்டு சீடர்களும் தலையை ஆட்டி கையை கூப்பி நமஸ்காரம் செய்வார்கள். இதுதான் இந்த குருட்டு குருமார்களும் சீடர்களும் கொடுக்கும் விளக்கம் குருவே ஞானம் என்பார்கள் குருவின் விளக்கம் கேட்டால் இந்த விளக்கம் தருவார்கள், சரியா தவறா என்று யோசிக்கிற புத்தி இந்த குருவுக்கும் இல்லை சீடனுக்கும் இல்லை. வேதாந்தம் என்றால் உபநிஷதம் இருக்கும் அல்லவா, இந்த வேதாந்தத்தில் ஒரு நிரூபனம் உண்டு ஒரு கயிறு இருக்கின்றது அந்தக் கயிறு நாம் நடந்து போகின்ற பாதையில் வழியில் தென்படுகின்றது, அந்தப் பக்கமாக ஒரு மாட்டு வண்டி சென்று கொண்டிருந்தது, அந்த மாட்டு வண்டியில் இருந்து ஒரு கயிறு அவிழ்ந்து கீழே விழுந்து இருக்கின்றது, அது இருள் நிறைந்த இடம். அந்த இருள் நிறைந்த இடத்தில் ஒருவன் போகின்றான். அந்த வழியே போகின்றவன் அந்த கயிறைப் பார்த்து பாம்பு என்று நினைத்துக் கொண்டு பயந்து விட்டான், அவன் ஒரு தென்னை ஓலையில் நெருப்பை பிடித்துக் கொண்டு அந்த வழியே சென்றவன்.அந்த தென்னை ஓலை நெருப்பு வெளிச்சத்தை எடுத்துக்கொண்டு சென்று அந்த கீழே இருந்த கயிற்றை பார்க்கின்றான்,  அதை பார்த்து அவன் பயந்து ஒதுங்கி நடுங்கி நின்று கொண்டிருந்தான், அவன் உடம்பெல்லாம் வியர்த்துப் போய்விட்டது. ரத்தம் சூடாகிவிட்டது, அவன் சுற்றி முற்றிலும் பார்க்கின்றான், அவனுக்கு தெரிந்து விட்டது பாம்பு தான் இங்கே இருக்கின்றது என்று, அவன் உடனே அந்த தீப்பந்தத்தை எடுத்து சுற்றிப் பார்க்கின்றான் அங்கு பக்கத்தில் ஏதாவது கம்பு இருக்கின்றதா  அந்த நிலா வெளிச்சத்தில் நடுவில் படுத்து கொண்டிருக்கும் அந்த பாம்பு இரையை சாப்பிட்டு விட்டு நெளிந்து கொண்டு படுத்து இருக்கின்றது என்று, அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் இவன் புத்திக்கு எட்டியது பாம்பு தான் என்று  இரை சாப்பிட்டுவிட்டு படுத்து சுருண்டு இருக்கின்றது,என்று  இவன் மெல்ல சுற்றிப் பார்க்கின்றான் பக்கத்தில் இருக்கும் கம்பு கிடைக்கின்றதா என்று பார்க்கின்றான் ஒரு கம்பு எடுத்து மெல்ல மெல்ல நகர்ந்து நச்சென்று அதை தலையில் அடித்தான். இந்த கயிற்றில் முதல் முடிச்சு அதன் முனை அந்த முடிச்சு பாம்பின் தலை போல இருக்கின்றது, அடித்தான் அடித்தான் பாம்பும் இறந்து விட்டது என்று நினைத்தான், இவனும் ஓடிக் கொண்ட அடித்தான் அந்தப் பாம்புக்கு எந்த அசைவும் இல்லை, இந்த பாம்பை எடுத்து பாம்பை புரட்டி போட்டான், இந்த பாம்பையும் கையில் உள்ள கம்பினால் தூக்கினான் இந்த வெளிச்சத்தில் தெரிந்தது, இது வெறும் கயிறு என்று. இந்த கயிறை அடித்து கொன்றான் இவன். இதுவே வேதாந்தம் சொல்லக்கூடிய கதை இந்த மாயை பற்றி சொல்லும் பொழுது இந்த கதையை சொல்வார்கள் இப்படி இந்த அஞ்ஞானத்தினால் இருக்கக்கூடிய மயக்கத்தினால் வெறும் கயிற்றை பாம்பு என்று நினைத்து அதை அடித்து கொள்ளக்கூடிய செயலை போல இந்த முட்டாள் குருமார்களும் குரு என்பதற்கு பொருள் தெரியாமல் சீடர்களை வளர்த்து வைத்திருக்கின்றார்கள், குரு என்றால் அஞ்ஞானத்தை அகற்றி ஞானம் வழங்குபவர் என்றும் கதை விடுவான், இதை இந்த சீடர்கள் கூட்டம் பரம்பரை பரம்பரையாக இதை சொல்லிக் கொண்டே இருப்பார்கள், இவனுக்குத் தெரியாது அது என்ன என்று கூறு என்றால் என்ன என்று இவனுக்கு தெரியவே தெரியாது, ஸ்லோகங்கள் சொல்கின்றது குரு சாட்சாத் பரப்பிரம்மம் என்று குரு என்றால் யார் சாட்சாத் பரப்பிரம்ம் உண்மையிலேயே குரு என்பது பரப்பிரம்ம சொரூபம் என்று சொல்லி வைத்திருக்கும், அது கூட இவனுக்கு விளங்காது, இவன் அதற்கு கற்பனையில் மயக்கத்தில்  மாயையில் அஞ்ஞானத்தில் இவன் உளறிக் கொண்டே இருப்பான், காலம் காலமாக விளங்க வைத்துக் கொண்டு இருப்பான், தீட்சை கொடுப்பதற்கு முன் குரு என்றால் என்ன என்று? குரு என்றால் அஞ்ஞானம் ஆகிய இருளை அகற்றி ஞானக்கண்ணை திறந்து கொடுப்பவர், தான் குரு என்று, ஞானமாக இருக்கக்கூடிய கண்ணை அறுத்து பிளந்து ஞானமாக இருக்கக்கூடிய ஞானக்கண்ணை எடுத்துக் கொடுப்பவர் தான் குரு என்று நினைப்பான், இதுதான் இந்த அஞ்ஞான கூட்டத்தின் செயல் உனக்கு உன்னுடைய வயிற்றில் மலம் இருக்கின்றது, அல்லவா இந்த மலம் இருக்கின்ற மாதிரி உன்னுடைய அறிவிலேயே மலம் இருக்கின்றது அல்லவா, அஞ்ஞான மலம் இந்த மலத்தை எடுத்து ஞானத்தை கொடுத்து நிறைக்கும் பொழுது அந்த இடத்தில் அஞ்ஞான மலத்தை யாராவது வைத்து இருப்பார்களா? இந்த வயிற்றில் உள்ள மலம் இந்த மலத்தை நீ போக்கிவிட்டு இருப்பாயா இல்லை அந்த மலத்தை வயிற்றுக்கு முன்னாடி கட்டி வைப்பாயா? யாரும் கட்டி வைக்க மாட்டார்கள் அல்லவா, மலத்தை நீக்கி மலமற்ற நிரூபணமாக உள்ள ஒன்றை கொடுக்கும் பொழுது அந்த மலத்தை அங்கு வைத்துக் கொள்ள தேவையில்லை, நான் மலத்தை கலைந்து விட்டேன் என்று சொல்லிக்கொண்டு மலத்தை ஒரு துணியில் கட்டி வயிற்றின் முன் பக்கமாக கட்டி தொங்க விட்டால் என்ன எப்படி இருக்கும், அது மாதிரி தான் குரு என்றால் (கு) என்று சொல்வது அஞ்ஞானம், என்றால் (ரு) என்றால் பிரகாசம், என்றால் அஞ்ஞான மலத்தை கலைந்து (ரு) என்ற பிரகாசத்தை கொடுப்பவர் குரு என்றால்( ரு) என்றால் பிரகாசம் மட்டும் போதுமே (கு) என்ற அஞ்ஞான மலத்தை ஏன் வைத்திருக்கின்றாய், என்றால் அந்த முட்டாள் கூட்டத்திற்கு பதில் சொல்லத் தெரியாது அஞ்ஞானத்தை ஏன் முன்னாடி வைத்துக் கொள்ள வேண்டும், பிரம்ம சொரூபமாய் இருக்கக்கூடிய இடத்தில் உன் வீட்டில் உள்ள அழுக்குகளை உன் வீட்டிற்கு முன்னாடி கட்டி தொங்க விடுவாயா? விடமாட்டான் அல்லவா? அந்த மாதிரி (கு) என்பது அஞ்ஞானமாக இருந்தால் (ரு) என்பது பிரம்ம சொரூபமாக இருந்தால் இந்த அஞ்ஞானமாக இருக்கக்கூடிய( கு,) இருக்கின்றது இந்த (கு)  என்றஎழுத்தை வெளியே போட வேண்டியதுதானே, எதற்காக இந்த(கு) முன்னாடி இருக்க வேண்டும் அப்படி என்பது இவனுக்கு யோசிக்க தெரியவில்லை, இதைக் கூட சிந்திக்க கூடிய திறமை இல்லாத குருமார்கள் ஆயிரம் ஆயிரம் சீடர்கள் உண்டு பண்ணி எந்த பிரயோஜனமும் இல்லை, இந்த கூமுட்டை குருவிற்கு வரக்கூடிய சீடர்களும் இதைவிட ஆயிரம் கூமுட்டையாக உள்ளவர்களும் எடுத்துச் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டும், நீங்களே யோசித்துப் பாருங்கள். இது சரியா சரியான நடைமுறையில் உள்ளதா என்று? இதனால்தான் திருமந்திரத்தில் (தெளிவு குருவின் திருமேனி கானல் )இவன் இந்த குருவின் திருமேனி என்றால் உடம்பு அல்லவா என்று  இந்த உடலை பார்ப்பது தான் ஞானம் இதுதான் தெளிவு என்றும் நினைப்பான், தெளிவு குருவின் திருமேனி கானல் என்பது மிகவும் ஆழமாக இருக்கக்கூடிய ஒரு பரம ரகசியம், ஒரு விஷயம் , அதுதான் ஞானம், இதுவே ஞானசொரூபம், என்று சொல்வது, இவனுக்கு அந்த விளக்கம் தெரியாது அதனால் இவன் இப்படி சொல்லிக்கிட்டே வாழ்க்கை முழுவதும் அழுதுகிட்டே இருப்பான், இதற்குத்தான் இயேசுபிரான் பரிசுத்தமானவற்றை நாய்கள் முன்னால் போடாதீர்கள் என்று, அதை ஏன் சொன்னார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா, அதையும் பார்ப்போம் பரிசுத்தமானதூம் நாய்க்கும் என்ன சம்பந்தம் எப்பொழுதாவது யோசனை பண்ணது உண்டா? பரிசுத்தமானதை நாய்க்கு போடாதே என்று ,இந்த உலகத்தில் நாய் எங்கேயாவது பரிசுத்தமானதை சாப்பிடுமா? சாப்பிடாதே.! பரிசுத்தமான உணவை கொடுத்தால் சாப்பிடுமா சாப்பிடாது, எதற்கு இந்த தொடர்பு இயேசு கிறிஸ்து சொல்கின்றார், இது அவருடைய சீடர்களுக்கும் தெரியும், பரிசுத்தமானதை நாய் சாப்பிடாது. தேவையில்லாத உணவைத்தான் நாய் சாப்பிடும்.  ஏன் கிறிஸ்து தெரிந்த விஷயத்தை போதனையாக சொல்லி இருக்க வேண்டும் அதற்கு ஒரு விஷயம் இருக்க வேண்டும், நாய் எப்பொழுதாவது பரிசுத்தமானதை தின்னாது, இதுபோல நுணுக்கமான ஞான விஷயத்தை குரு என்ற பரிசுத்தமான விஷயத்தை இந்த நாய்கள் தின்னாது என்றும்,  நாய்க்கு என்று தனி குணம் உண்டு, அது அசுத்தமான மலத்தை தின்னும், அதே சமயத்தில் பரிசுத்தமான பொருளை போட்டால் என்ன பண்ணும் என்றால் அதன் மேல் அது சிறுநீர் கழித்து விடும், அதனால்  தான் கிறிஸ்து பரிசுத்தமானதை நாய்கள் முன்னால் போடாதீர்கள் என்றும். நாய்கள் மலத்தைத் தான் தின்னும், பரிசுத்தமான பொருளை கொடுத்தால் தின்னாது, இந்த குரு என்ற பரிசுத்தமான திருமேனியை நாய்களுக்கு போடாதீர்கள் என்று பொருள்.

No comments:

Post a Comment