Tuesday, December 6, 2022

அகர எழுத்து

எழுத்துக்களில் நான் அகரமாக இருக்கின்றேன்   'பகவத் கீதை' ஆரும் அறியார் அகாரம் அவனென்று 'திருமந்திரம்' எழுதாத புத்தகத்தின் எழுத்து 'திருமந்திரம்' எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் ' எழுத்ததிகாரம்' "உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையிலும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் உறுப்புற்றமைய  நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லும் காலைப் பிறப்பின் ஆக்கம் வேறு வேறியல திறப்பட தெரியும் காட்சியான" 'பிறப்பியல்' "எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்போடு விடு வழி உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை அரில் தப நாடி அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே" "அஃது இவண் நுவலாது எழுந்து புறத்தி சைக்கும் மெய்தெறி வளியிசை அளபு நுவன்றி சினே" 'பிறப்பியல்' "எழுத்தெனப் படுவது அகர முதல் னகரம் வரை முப்பதுவகைப்படும்" உந்தியில் தோன்றி வரும் காற்று, தலை, தொண்டை ,நெஞ்சு, ஆகிய இடங்களில் நிலைபெற்று பல் ,உதடு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உட்பட எட்டு இடங்களில் ஒரு உறுப்போடு மற்ற உறுப்பு பொருந்தி அமைதிபெற பிறப்பின் ஆக்கம் வேறு வேறு புலப்பட்டு வழங்கப்பெறும் என்ற கூறுபாடு உள்ளது. உள்நின்று எழும் காற்றாலாகிய இசையைப் பிணக்கமற ஆராய்ந்து  வரையறை கொள்ளுதல் அகத்தனின்று எழுந்து புறத்து இசைக்கும் பொருண்மை தெரிகின்ற காற்றின் இசை, உள்நின்று எழுந்து வெளியில் வந்து அளவு முறையோடு இசைக்கும் காற்று உள்நின்று எழுந்து உள்ளேயே அளவு முறையோடு இசைக்கும் காற்று அந்தணர் மறைக்குட்பட்ட எழுத்து  என்பது ஞானிகள் மட்டுமே அறிந்த எழுத்து அதுவே எழுதாத புத்தகத்தின் எழுத்து அந்த எழுத்துக்களில் அகரமாக இறைவன் இருக்கின்றான்

No comments:

Post a Comment