Thursday, December 8, 2022
திரு. ரியான் சத்விசாரம் தொகுப்பு=
=== திரு. ரியான் சத்விசாரம் தொகுப்பு===
கேள்வி: மனம் என்பதே உயிரின் அம்சம் தானே உயிர் சக்தியின் செலவிடுதலே மனதின் இயங்கும் நிலை
இதில் ஒடுங்குவதும் அடங்குவதும் உயிரின் சுயம் அன்றி வேறென்ன. . .ஐயா?
Hseija Ed Rian: உயிர் இருப்பதனால் தான் மனம் இயங்குகிறது என்பது தெரிந்த ஒன்று... ஆனால் மனமானது உயிரின் அம்சம் தான் என்பது தெரியாத ஒன்று அல்லவா?
உயிர், உடல், மனம் வெவ்வேறானவை, வெவ்வேறு குணாதிசயம் சேர்க்கையில் இயைந்து இயங்குவது.
உயிரின் அம்சம் உடலுக்கு இருக்காது.... உடலின் அம்சம் உயிருக்கும் இருக்காது... உயிரின் அம்சம் மனதுக்கு இருக்காது.. மனதின் அம்சம் உயிருக்கும் இருக்காது... ஆனால் உடலெனும் கூட்டில் இவை அடக்கம்.
"நான்" என்பதே மனதின் ஆணிவேர்... சூட்சுமமாக அனுபவத்தில் நிலைகொளத்தான் அது புரிதலுக்கு வரும்...
"நான்" இருப்பதினனல் மனம் என இருக்கிறது. "நான்" என்பது தான் மனம் என மலர்ந்திருக்கிறது... எப்போது "நான்" இல்லை என ஆகிறதோ.. அப்போது மனம் இல்லை என்றாகிறது. மிஞ்சுவது அறிவு மட்டுமே.. ஞானசொரூபமான வஸ்த்து.
கேள்வி: தூக்கத்தை பற்றி உங்களது கருத்து என்ன?
Hseija Ed Rian: தூக்கம் என்பது "கவனம் அற” நிகழும் சங்கதி.
அனைத்திலும் கவனம் அற்று போகையில் தூக்கம் நடக்கும்... அக மற்றும் புற நிகழ்வுகளில் இருந்து கவனம் அற அது வரும். இதுக்குத்தான் எவ்வளவோ சொல்லியும் ..மொக்கை என சொல்ராங்க...ஒருவேள சரியா இருக்குமோ?
கவனம் என்கிறதை பற்றுதலே தூக்கம் வராம இருக்க வழி.
கேள்வி: கவனிப்பவனை கவனித்தால் தூக்கம் வருவதை தடுக்கலாம் அப்படிதானே!!!! ????
Hseija Ed Rian: உபநிஷத்துகளில் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது.. "உத்திஷ்ட்ட ஜாக்ரத” என்பதாகும். அதாவது ”ஜாக்கிரதைக்கு எழுவாயாக” என்பதாகும்.அதாவது கவனத்தை பற்றுவாயாக என விளக்கம்.
கேள்வி: கவனத்தை பற்றுதல் தான் வள்ளலார் சொன்ன "விழித்திரு" என்பதா?
Hseija Ed Rian: ஆமாம்.
கேள்வி: மனம் உயிரில் ஒடுங்குவதுதான் தூக்கமா?
Hseija Ed Rian: தூக்கத்துலயும் சரி விழிப்புலயும் சரி உயிர் இல்லாம இவை இல்லையே...
மனம் உயிரில் இருந்து தோற்றம் பெற்றால் அல்லவா அதில் சென்று ஒடுங்கவும் தெரிந்திருக்கும்...அல்லவா?
தூக்கத்தில் ஒடுங்க மனதுக்கு தெரிந்திருந்தால் மரணத்தின் போதும் ஒடுங்க முடிந்திருக்குமே... தெரியாததினால் அல்லவா உயிர் விட்டு போகிறது...அல்லவா?
கேள்வி: உயிர் நிலைக்க பிராணன் அவசியமல்லவோ ...?
Hseija Ed Rian: கருப்பையில் உயிருடன் இருந்த சுக்கில துளிக்கு ஏது பிராணன்?
உயிரில் இருந்து பிராணன் வந்த பிற்பாடல்லவா மனதுக்கு மூன்று நிலை... சுக்கில துளிக்கு ஏது கனவும் நனவும்?
கேள்வி: ஐயா. மரணத்தை சந்திக்கும் போது உயிர் பல கொடுமைகளை சந்திக்கும் என்று சொல்ராங்க அப்படி தூக்கம் வரும் போது ஏதுமில்லையே!!?
Hseija Ed Rian: தூக்கத்தில் மனம் சப்தத்தில் ஒடுங்கியிருக்கும்.. மனதின் சூட்சும தன்மாத்திரையான ஆகாய ரூபம். மரணத்தில் இது இருக்காது.
ஆகாய தன்மாத்திரையான சப்தம் உயிருடன் ஒன்றியிருக்கும்... ஆகையினால் அது ‘விட்டு போகாது’... மரணத்தில் விட்டு போகும்..
கேள்வி: தாயின் கருவில் உள்ள குழந்தை எப்படியா தூங்குது?
Hseija Ed Rian: ஐயா.. இங்க ரெண்டு நிலைகள் கவனிக்க தகுந்தவை. பிறவிக்கு முன் பின் என. பிறக்கிறதுக்கு முன்ன பிராணன் வெடிக்கா நிலை... பிறவிக்கு பின் பிராணன் வெடித்த நிலை.
சாதாரணமாக பிறவிக்கு பின் நிகழகூடிய மூன்று அவஸ்த்தைகளையே "நனவு, கனவு, தூக்கம்" என வகைபடுத்தி கொள்ளுகிறோம். கருவில் மனம் மொட்டாக இருக்கிறது, அதனால் மனம் வியாபிக்கவில்லை... மனம் வியாபிக்க வாயு விசும்பிதல் ஆகவேண்டும். கண்டம் பிரியவேண்டும்.
முதல் அழுகையினால் கண்டம் பிரிகிறது... அதற்க்கு முன் பத்தாம் மாதமும் சரி ஒன்றாம் மாதமும் சரி.. எல்லாம் வளர்ச்சி நிலை நோக்கி நகருதல் தாம்.. நிறை ஆகவில்லை. பிராணன் வெடிக்க மனம் சலனம் ஆரம்பிக்கின்றது. மூன்று அவத்தைகள் மனதுக்கு வந்து சேருகின்றது.
கேள்வி: ஐயா கருவில் குழைந்தைக்கு சுவாசம் எப்படி நுகரும் தன்மை எப்படி?
Hseija Ed Rian: சுவாசம் வெடிக்காது என சொன்னதினாலே புரியவேண்டியது.. அது ஒரு இடத்தில் சுழன்று கொண்டிருக்கும் என்பது தான்... இதனையே "சக்கரம்" என்பர்.
வெட்டுபட்ட சக்கரம் எனவும் வெட்டாத சக்கரம் என இரண்டு... வெட்டுண்ட சக்கரம் துண்டாகும்... துண்டான சக்கரம் கலை சிறுக்கும்... வெட்டாத சக்கரம் துண்டாகாது.. கலை சிறுக்காது... தட்டுண்டு போகாமல் தலைபடுவது எக்காலமோ..தெரியலியே ஐயா..
❣️ நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள் ❣️
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment