Sunday, December 4, 2022
மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம்
மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம் ===
நாம் தூலத்தில் வசிக்கிறோம், தூலத்தை வளர்க்கிறோம், தூலத்தை மெய்யென கொள்கிறோம்... ஆனால் அவர்கள் தூலத்தை கடந்து சூட்சும தேகங்களில் பிரவேசிக்கிறார்கள், சூட்சும தேகங்களை வளர்த்துகொள்ளுகிறார்கள், அதை மெய்யென்று கொண்டு அதில் குடியேறுகிறார்கள், அட்ட்ட்ட்ட்தில் வாழ்கிறார்கள்.. அந்தந்த தேகங்களின் ஆயுள் முடிவுமட்டும்
அந்த நாதந்த நாட்டிற்க்கு வழி தேட வேண்டாமா? ... அதற்க்குத்தான் இவ்வளவும் சொல்லிகொண்டிருக்கிறேன், அந்த "சப்தமய தரிசனமான” தேகத்தை, எஞ்ஞான்றும் அழியாத மெய்க்குள் புகுந்து கொள்ளவேண்டாமா!? எனத்தான் அரைகூவல் விடுத்துகொண்டிருக்கிறேன்.
தூலம் ஜோதியாச்சு!! தூலம் ஜோதியாச்சு! என கதறிகொண்டிருக்காமல் ஆகவேண்டிய காரியத்திற்க்கு அழைக்கிறேன்... நாதாந்த நாட்டிற்க்கு நாயகனாகி அரசு பண்ணவேண்டாமா?!..அந்த மெய்தேகத்திற்க்குள் புகுந்துகொள்ளவேண்டாமா?!... எங்கே அந்த வழி?.. யாரிடம் இருக்கிறது என தேடவேண்டாமா...??சிந்திப்பீர்... ஆறானது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதே அதில் ஸ்னானம் பண்ணுபவன் உத்தமன்.
எந்த ஒரு பொருள் மெய்பொருள் என அழைக்கபடுகிறதோ, எந்த ஒரு பொருள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பூரணமாய் அனாதிகாலம் முதல் நம்மோடு நம் உயிருக்கு உயிராய் நிலைகொண்டிருந்தும் எவ்வண்ணத்தாலும் நமது சிற்றறிவிற்க்கு புலப்படாமல் இருக்கிறதோ, எது மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்க்கு திறவுகோலாய் இருக்கிறதோ, எதை பற்றி வந்தவந்த வழித்தோன்றல்களும் வந்துபோன மெய்கண்டார்களும் அன்புடன் அழைத்து வாரி வாரி வழங்கினார்களோ அது ஒன்றே காலம் காலமாய் அற்புத அனவரத தாண்டவமாய் இலங்கிரணங்களை விசிரிம்பித்தபடி அம்பலத்தாடி கொண்டிருக்கிறது...அந்த சேவடிக்கே சரணம்.
---❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment