Sunday, December 4, 2022

பிரபஞ்சம்

பிரபஞ்சத்தில் இருக்கின்ற அனைத்து ஜீவன்களும் ஒரு மரத்தின் விதைகள். அவ்விதைகளில் இருந்து தோன்றிய தொடர்கள்.... விதைக்கு "ஜீவன்" என பெயர்.. தாய் மரத்திற்க்கு "ஜீவசிவம்" என பெயர்... அது அனாதியாகவே இருக்கின்ற பொருள்.. அது தான் இருக்கின்றது, அதுவல்லாதது இல்லை... உடலம் உருவாக்குவதும் அதுவே, உடலத்துள் குடியிருப்பதும் அதுவே உடலத்து மனத்துக்கு ஆதாரமும் அதுவே..உடலத்தை அபிமானிக்கும் "நான்” எனும் மனதின் கூற்றுக்கு ஆதாரமும் அதுவே.... அதுவே விரிவான விரிவெலாம் தாங்கி பணர்கொண்டெழுந்து விரிந்து பூத்துகுலுங்கி அணுக்கோடி பிரபஞ்சம் முதல் மகா அண்ட பெரிதான பகிரண்டகோடி பிரபஞ்ச வியாப்திவரை உயிராக நிறைந்துள்ளது... - திரு. ரியான் ஐயா அவர்கள்

No comments:

Post a Comment