Sunday, December 4, 2022

ஆதம்

ஆதம் பாதத்தை அறிந்து தொழவும் வேணும் : அதல்லாத் தொழுகையது ஆற்றில் கரைத்தபுளி" === ஊமை எழுத்தே உயிராச்சு ஓமென்ரெழுத்தே உடலாச்சு நாமிந்தெழுத்தை அறிந்துகொண்டோமென நாடி கும்மி அடியுங்கடீ... அண்டசராசரங்கள் அனித்திற்க்கும் அனித்து மதங்களுக்கும் அவை எவையும் உண்டாவதற்க்கும் முன்னே அனாதிஅனந்தங்கோடி கற்பாந்தங்களுக்குமுன்னே எக்காலகோடிகளுக்கும் கோடாலங்கிருதங்களுக்கும் முன்னே இருக்கும் எழுத்தறிவு அது இலங்கும் தலமிது...அதுவே கமலக்கண்.... எல்லா பாஷைகளுக்கும் ஒரு மொழியாய் அடங்கி எல்லா தொனிகளும் ஒரு தொனியாய் முழங்கி அங்கிங்கெனாதபடி அகம்புறமாய் விளங்கும் “மெய்பொருள்” அவ்விட்டு வைத்தங்கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டு பார்க்க லிங்கமதாய் நிற்க்கும் மவ்விட்டு மேலே வளியுற கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்கொழுந்தாமே... - திருமூலர் பாடல் இது, இங்கு “தொம்’மிட்டு நிற்பதே திருவடியாகிய நற்றாள்...அவ்வண்ணம் தொம்மிட்டு நிற்க வைப்பது “அரி” எனும் எழுத்து..இந்த “வாலையே’ ‘இவ்விட்டு” பார்த்தல் என குருமுறை.இப்படி “இவ்விடுதலையே “ வால் போடுதல் அல்லது வாலறிவு என்பது சான்றோர் அறிவு.... அண்டமுமவனிதானும் அதிர்ந்திட மறைகளோதி கண்டமுங்கழுத்து நோவ கதறிய மைந்தாகேண்மோ என்றுமுள் ளவனை மெய்யுள்ளெழுத்தினால் இருத்தி பார்க்கும் தொண்டருக்கடிமை செய்தாற் சேரலாம் சுவர்க்கம் தானே.. மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்... மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர தியான சம்பிரதாயங்கள்... பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்... முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு.... சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்... சத்தம் அடங்குமிடம் சற்குரு நின்றவிடம் என்பர்... அதுவே மூச்சு அடங்குமிடம்.... இதுவே செவிச்செல்வத்தின் பயன் என்பர் அறிவுடையோர்..... சத்தம் அடங்குவது ஆகாயத்தில்.... எந்தளவு சத்தம் ஆகாயத்தில் சென்றாலும் அது ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா?....(இது குழப்புற வேலை) காற்றும் ஆகாயத்தில் அடங்கிவிடும் இல்லயா... ஐம்பூத தன்மாத்திரைகளில் சத்தம் ஆகாயதன்மாத்திரை... அதாவது ஆகாயம் சத்தத்தில் அடங்கும்.... ஆகாயமே சத்தத்தில் அடங்கும்போது காற்றும் மூச்சும் எம்மாத்திரம்? நாதமும் நாதர்களும் மட்டுமே மிஞ்சுவர் எனப்பொருள் அன்பரே... வெளி அறிவுக்கு சத்தம் ஆகாயத்தில் அடங்கும் தான் தெரியும்... ஆனால் ஆகாயம் "சத்தத்தில் அடங்குவது அகமியம்"..... ஆதியில் வார்த்தை இருந்தது,அந்த வார்த்தை தேவனோடிருந்தது,அந்த வார்த்தை தேவனாயிருந்தது,,சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை...அவருக்குள் சீவன் இருந்தது, அந்த சீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது....(பைபிள்) புறம் என்பது அகத்தின் விரிவே....தன்னிலையின் போதே இது தெளியும்....கூறுபட்ட மனதுக்கு இது விளங்காது....ஒருமையின் ஓர்மை நினைவுக்குள் அடங்கும் போதே ஒருமையும் பன்மையும் புலம்படப்புலரும்....புலத்துக்கு புலர்ந்ததா? உதாகரணமாக, எப்படி அகமியமான இறைவன் அகத்திலும் புறத்திலும் காரணகாரிய சொரூபராகி விளங்குகிறவராயும் விளங்கப்படுகிறவராயும் உளரோ அச்சொரூபம் என்க.. வள்ளலாரும் இதையே குறிக்கும் பொருட்டு, "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்" என்பார்.... உள்ளும் புறம்பும் இல்லாமல் உள்ளும் புறம்பும் நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவை அறிவதே....இதுவே ஆறாம் அறிவு.....அதுவே அகத்தையும் புறத்தையும் காணும் மார்க்கம்....அவ்ர்களே மனு ஈசர்கள் அதுவே சூக்கும "இருதயம்"..... அதை உணர்த்துபவர் குருபிரானே அன்றி வேறில்லர்.... இதை தெரிந்து கொள்ளாதவர்களே இங்கு அதிகம் சவுடால் விடுபவர்கள்....இருதயத்தை அறிந்தவனே அறிவுடயவன்....அவர்களே கற்றவர்கள்...அக்கல்வியே சாகாகல்வி.... தேடல் உள்ளவர்களுக்கு உள்ளார்...இருத்யமும் கிடைக்கும் ஒரு குரு வந்து உபதேசித்தும் குரு உபதேசித்த பொருள் என்ன என்று புரிந்திராத சீடர்களையும் பார்த்திருக்கிரேன்...அப்படியானால் குரு உபதேசத்தினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று பொருள்.....அதாவது வயல் வளமாக இருந்தாலே பயிர் செழிப்பய் வளரும்.... வளமில்லாது கூறுகெட்ட வயலினால் ஆவது என்ன? பயிர் முளை கூட விடாது....ஆதலால் குருவை அடையும் முன் வயலை பண்படுத்திக்கொண்டு அவர்கள் முன் செல்லவேண்டும்...அல்லாவிடில் அவர்கள் விதைக்கும் வித்தானது எந்த பயனும் இன்றி போகும்... ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதையானது பூமியின் விதையன்று...கூறுகெட்ட சீடனுக்கு அது என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை....அவர்கள் விதை தேவ உலகத்து விதை..அதன் வண்ணமும் வனப்பும் அறிந்தவரே அறிவார்...அது அறியா சீடன் பாரத்த மாத்திரத்திலே கதைக்கு உதவாது என சொல்லி தூக்கி போட்டு விடுவதே அதிகம்....பிறகு காலம் கடந்து காலன் கைஇகு கதி... பாராயணம் பண்னுவது என்பது ஒரு நொடுக்கு வித்தை...அதை அவர்கள் சாமர்தியமாக மறைத்து வைத்துள்ளனர்...வித்தை கற்றவர்களுக்கு தான் அதன் சூட்சுமம் தெரியும்.... சாமர்த்தியமாக அவர்கல் மறைத்தது நன்மைக்கே...எள்ளளவினும் அறிவற்ற மாக்கள் உய்யும் பொருட்டே அவர்கள் அதை மறைத்து அருள் செய்துள்ளனர்...எப்படியெனின், சிறு மதலைகளுக்கு கசப்பான மருந்தை கொடுக்கும் போது அவர்கள் அதை உமிழ்ந்துவிட வாய்புண்டு என்பதை கருத்தில் கொண்டே வைத்தியர் மருந்தை கருப்பட்டி பாகில் குழைத்து வைத்திருப்பார்,,, குழந்தையும் ஆவலுடன் வெறுப்பின்றி உட்கொள்ளும்...இதுவே நொடுக்கு வித்தை.... இப்படியெ பாராயனமும்...கருப்பட்டி பாகில் குழைத்த வித்தயே அது....பாகில் குழைக்காவிட்டால் அதன் கடுமை தன்மையினால் மக்கள் அதை நிரசித்துவிடுவர்.... முற்றிலும் இது குருபிரான் அவர்களின் கனிவே, கருணையே...அவர்கள் மனப்பூர்வமாக கிடைக்ககூடாது என்று மறைத்த மறைப்பு அல்ல...ஆனால் பண்பட்டவர்களுக்கு அதுவே போதும்...அதிலிருந்து மருந்தை தெரிந்து கொள்வர்...கருப்பட்டிபாகை சிறிது சொரண்டி பார்க்க வேண்டும்..சிறிது நிறம் மாற்றம் தெரியும் கொஞ்சம் கூட சொரண்டும் போது புரியும் உள்ளே இருப்பது அருமருந்து என்பது புரியும் ---❣️ திரு. ரியான் ஐயா  அவர்கள் ❣️

No comments:

Post a Comment