Monday, December 5, 2022
பரிசுத்தம் என்றால் என்ன?
❤பரிசுத்தம் என்றால் என்ன?💚
பரிசுத்தமானது இணை இல்லாத மதிப்பிட முடியாத ஒரு உண்மை. நீ காணும் நிலைகளுக்கு அப்பாலுக்கும் அப்பாலானது. அப்பொருளுக்கு நிகராக வடிவு உருவ சொரூபம் எதுவுமே இல்லை. அதைத்தான் சைவம் என்றும், பரிசுத்தம் என்றும் சொல்லப்படுகின்றது. அப்பொருளை இணை துணை நிகர் இல்லாமல் பரிசுத்தத்தைக் கொண்டு பரிசுத்தமான தலத்தில் நின்று போற்ற வேண்டும்.
அதே இடத்தில் நீ பரிசுத்த சைவமானால் அத்தலம் அவனாகும். அவன் நீயாகும், நீயும் அவனும் உயிரும் ஒளியுமாகும். நீ உயிராகும், அவன் ஒளியாகும். இரண்டும் உயிருக்குள் ஒன்றாகும். உயிருடைய ஒளியுடைய கண்தான் அவ்வுண்மை. அக்கண்ணைக் கொண்டே நீ அவனுடைய சிர் (இரகசியம்) அதுவே ஆத்ம பேரின்பப் பிரகாச ஞான ஜோதி ஆகும், அவ்விடத்தில் உனக்கு உருவம் இல்லை. வடிவு இல்லை. அவ்விடம் இணை துணை இல்லை. அந்நிலை ஒளிப்பிரகாசத்தின் நிகரற்ற தோற்றமாகும். அத்தோற்றத்திற்கு என்மதம், உன்மதம், என்சாதி, உன் சாதி, என் சமயம், உன் சமயம் என்ற வேற்றுமைப் பேதமை மறுக்கள் இல்லை.
சூபி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment