Sunday, December 4, 2022

மனமும்புத்தியும்

மனமும்புத்தியும் மனம், புத்தி ரெண்டும் வித்தியாசமானது மனம் வேண்டும் என்பதை, புத்தி வேண்டாம் என்று கூறும் ஆம், மனம் எப்போதும் ஆசை சம்பந்தப்பட்டதாக உள்ளது ஆனால், புத்தி எப்போதும் தேவை சம்பந்தப்பட்டதாக உள்ளது இதனால், இரண்டிற்கும் எப்போதும் முரண்பாடு வந்து கொண்டே இருக்கும் இப்படி, மனமும், புத்தியும் மோதிக்கொள்வதைத் தான் நாம் -குழப்பம் என்கிறோம்,,,, ஒரே குழப்பமா இருக்கு,,,,என்ன முடிவு எடுக்கிறதுன்னே தெரியலை ன்னு சிலசமயங்களில் சோர்ந்து போயி,,,,நிறைய பேர்களிடம் அறிவுரை கேட்க, ஆரம்பிப்போம்,,,, சிலசமயங்களில் நாமே சொல்வோம்,,-ரெண்டுமனசாஇருக்கு ன்னு அதாவது போவோமா, போகவேண்டாமா, செய்வோமா, செய்ய வேண்டாமா இப்படி நிறைய அறிவாளிகள் தான் முடிவெடுக்க முடியாமல் தவிப்பார்கள்,,,,நாம் தான் அந்த அறிவாளிகள்,,,,எத்தனை முறை தவித்திருக்கிறோம்,,,, காரணம் மனம் ஆசையிலும், புத்தி தேவையிலும் பேசும் என்பது புரியாதது தான்

No comments:

Post a Comment