Sunday, December 4, 2022

ஆண்டவனால் பிராணனே போகுதே

ஆண்டவனால் பிராணனே போகுதே இந்த ஆண்டவனால் பிராணனே போகுதே... எதுக்குத்தான் இந்த பாரப்பெரிய உலகத்தை படச்சே? படச்சதும் படைச்சியே இந்த பாழாப்போன மனத்தையும் வேச்சு எங்களையும் படச்சே? உனக்கென்ன வேறவேலைண்ணு எதுவும் தான் இல்லியா? வேலவெட்டி எதுவும் இல்லா வெட்டியானா என்ன? செய்யிறத எதுவுமே ஒழுங்கா செய்யமாட்டியா? அப்புறம் எதுக்கு படைச்சவன்ண்ணு பேரை கூட வெச்சிருக்கே? நீ படைச்சு பரிதலிச்சு காப்பாத்தி அமைச்சு வெச்சிருக்கியே இந்த மனம்.. அது ஏன் இப்படியா இருக்க வெச்சிருக்கேயாம்? கடவுள்ணு பேருக்கு அர்த்தம் சொல்றவா கட+உள் ந்ணு வியாக்யானம் பண்றாள்.. உள்ள கடக்கணும்ண்ணு சொல்றாள்... உள்ள கடக்கிறது தான் சரிண்ணு பட்டிருந்தா எதுக்கு நீ இந்த மனத்தை சதா வெளியே போகிற போக்கில அமைச்சு வெச்சிருக்கேயாம்?.. உனக்குத்தான் புத்தியில்லையா அல்லது எனக்கு தான் புத்தியில்லையா? உன்னையே தான் நாங்க்ள்லாரும் அடையறதுக்குத்தானே மனத்தை படைச்சே.. அப்ப என்ன் அந்த மனத்தை வெளிய பாக்கிற பார்வைல வெச்சிருக்கே... உள்ள் பார்த்து உன்னையே அடைஞ்சிரலம்லியா.... ஒருவேளை உள்ள நீ இல்லைங்கிற காரணத்தாலேயேவா?...அப்ப நீ வெளியவா இருக்கே?அட நாதாரி பயலே என்னையே எமாத்திட்டியா?

No comments:

Post a Comment