Sunday, December 4, 2022

சுழுமுனையாம் கொழுமுனை

சுழுமுனையாம் கொழுமுனை விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்; விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம் ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன் உலகமெலாந் தானவ துண்மை யாகும்; நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக் கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம் கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே. 26: பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம் தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு; சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்; திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்; காப்பதற்கு நடுநாடி யூடே சென்று கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே. Hseija Ed Rian வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!  வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்  கூறாகப் பின்னியடா கீழே பாயுங்  கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;  வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே  வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே  நேராக இருகண்ணிற் பின்ன லாகி  நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே. 8 பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே  பத்திலே நரம்புவழி பாயும் போது  ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி  அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு  காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்  கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு  வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்  வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே. 9 கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்  கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக  நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்  நன்றாக ஓடுமடா நரம்பி னூடே  வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!  வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே  தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்  சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே. 10 பாரடா புருவமத்தி யேதென் றக்கால் பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி  நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி  நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு  வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!  மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது  காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து  கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே. Hseija Ed Rian இந்த பாடலில் பிடர் மார்க்கம் ஓடும் நரம்பு என்பது முதுகுதண்டு வழியா இருக்க்கிற துவா? Nasrath Ahamed பிடரி நரம்பு இல்லை பிடரி நரம்புக்கு அருகாமையில் இருக்கின்றான் என்றே அதாவது இறைவனை எங்கும் தேடாதீர் நமக்குள் இருக்கின்றான் என்றே உள்ளது ஹ்சீஜா எட் ரியான் நஸ்ரத் அகமது وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ وَنَحۡنُ اَقۡرَبُ الۡوَرِيۡدِ (50:16) நிச்சயமாக நாம் 19 மனிதனைப் படைத்திருக்கிறோம், அவருடைய இருதயத்தின் தூண்டுதல்களை நாங்கள் அறிவோம், அவருடைய ஜுகுலர் நரம்பைக் காட்டிலும் நாம் அவருக்கு மிக அருகில் இருக்கிறோம். 1 இதை மறைக்க அல்லது புகாரளிக்கவும் மேலும் எதிர்வினைகளைக் காட்டு · பதில் · 49 வ  ஹ்சீஜா எட் ரியான் خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ۖ ஆசாத் மொழிபெயர்ப்பு: இப்போது, ​​வெரிலி, நாம் தான் மனிதனைப் படைத்துள்ளோம், அவனுடைய உள்ளார்ந்த சுய இன்பம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்: ஏனென்றால் அவருடைய கழுத்து நரம்பை விட நாம் அவருடன் நெருக்கமாக இருக்கிறோம். மாலிக் மொழிபெயர்ப்பு: நாங்கள் மனிதனைப் படைத்தோம், அவருடைய ஆத்மாவின் தூண்டுதலை நாங்கள் அறிவோம், அவருடைய ஜுகுலர் நரம்பை விட நாம் அவருடன் நெருக்கமாக இருக்கிறோம். பிக்தால் மொழிபெயர்ப்பு: நாங்கள் நிச்சயமாக ஒரு மனிதனைப் படைத்தோம், அவருடைய ஆத்மா அவருக்கு என்ன சொல்கிறது என்பதை நாங்கள் அறிவோம், அவருடைய ஜுகுலர் நரம்பை விட நாம் அவருக்கு மிக அருகில் இருக்கிறோம். யூசுப் அலி மொழிபெயர்ப்பு: நாம் தான் மனிதனைப் படைத்தோம், அவருடைய ஆத்மா அவருக்கு என்ன இருண்ட பரிந்துரைகளை அளிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்: ஏனென்றால் (அவருடைய) ஜுகுலர் நரம்பை விட நாம் அவருக்கு மிக அருகில் இருக்கிறோம். 4952 ஒலிபெயர்ப்பு: வாலகாத் கலக்னா அலின்சானா வனஅஅலமு மா துவாஸ்விசு பிஹி நஃப்ஸுஹு வனாஹ்னு அக்ரபு இலாயி மின் ஹப்லி அல்வாரெடி Nasrath Ahamed மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவனின்) பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். .(50:16) Muthu Kumar "எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்  ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே" பிடரி மார்க்ம் என்பது சுழுமுனை மார்க்கம். பிடரி மார்க்கத்தில் ஏறுவதை உணர்த்துவதே உபதேசம் ஆகும். அதுவே பிடரி நரம்பின் சமீபமான இடமாகும் Hseija Ed Rian Muthu Kumarபிடரிநரம்பின் சமீபம் ஆன இடம் எனும் பொருள் அல்ல குறான் கூறுவது.அதாவது பிடரிநரம்பிற்க்கும் மிக சமீபம் ஆக இருக்கின்றோம் என்பதே.

No comments:

Post a Comment