Sunday, December 4, 2022

ஆன்ம விடுதலை

ஆன்ம விடுதலை ===== முக்தி என்பது உடலுக்கு உயிருக்கோ, உனக்கோ அல்ல. முக்தி என்பது சுழற்சியின் *விடுதலை*. கர்மம் எனும் மகா சாகரம் சதா ஓயாமல் அலை வீசி, நொடிக்கு நொடி ஆசையெனும் காற்றில் அலைவீசி கொண்டிருக்கும் தன்மையில் இருந்தும் விடுதலை. *கர்மம் எனும் சக்கரத்தில் இருந்து விடுதலை.* ஒவ்வொரு பிறவியும் கர்மத்தின் எச்சங்கள் தான், கர்மங்கள் தான் மறு பிறப்பு கொள்கின்றன, அவையே பிறப்பின் பீஜம், பிறப்புக்கு ஆதாரம், இவ்வண்னம் கர்மங்களினால் பிறவிகள் நிலைகொண்டுள்ளன. "நீ" ஒவ்வொரு பிறவியிலும் செத்து போகிறாய், உண்மையில் சாவு என்பது உன் மனதின் சாவு, "நான்" எனும் உன் எண்ணத்தின் சாவு, "நான்" எனும் தற்போதத்தின் சாவு.... வந்த வந்த பிறவிகள் எல்லாம் சாவு கொள்ளும், ஞானியென்றோ சித்தனென்றோ சாவுக்கு வேறுபாடு இல்லை, "நீ" இந்த சாவிலிருந்து தப்ப போவதில்லை. எத்தனித்தாலும் இல்லையென்றாலும் செத்துத்தான் போவாய். இதெல்லாம் உன் கற்பனையின் சாவு தான், உன்மையில் நீ ஒருபோதும் மறு பிறப்பு எடுப்பதில்லை, ஏனெனில் ஒரே “நான்’ அதே "நானாக” பல பல பிறவிகளில் அதே “நான்” ஆக இருப்பதில்லை. "நான்" சதா மாறிகொண்டிருக்கும், மனமும் மாறி கொண்டிருக்கும், உடலும் மாறிக்கொண்டிருக்கும்... கர்மம் மட்டும் நிலையாக சுழன்றுகொண்டிருக்கும். *இந்த கர்ம சுழற்சியில் இருந்து விடுதலை என்பதே முக்தி.* -❣️திரு. ரியான் ஐயா அவர்கள்❣️

No comments:

Post a Comment