Sunday, December 4, 2022

நம்முள்ளே தான் இறைவனும்

நம்முள்ளே தான் இறைவனும் ஆண்டவனுமாகிய அருட்பெரும் ஜோதியார் கலந்திருக்கின்றார் என்கிறீர், அதுபோலவே வள்ளலாரும் கலந்திருக்கின்றார் என்கிறீர்.. இவர்கள் இருவரும் இங்கே நம்முடலில் கலந்திருக்கின்றார் எனில் ஏன் வடலூரும், சிதம்பரமும் சென்று அரோகரா கோஷம் போடுகின்றீர் என்பது தான் புரியாமல் இருக்கின்றது. உலகத்துல பொறக்கிற எல்லா கொழந்தைங்களும் உச்சரிக்கிற முதல் உயிர் எழுத்து தானே எம்மொழிக்கும் முதலான உயிர் எழுத்தாக இருக்கமுடியும்? அல்லவா..? அதை சொல்லி முதலெழுத்து என காட்டாமல் எதையோ காட்டி உயிரெழுத்துங்கறாங்களே, இதை விட கொடுமை என்ன இருக்கமுடியும்? ...அப்படித்தானே? *"இயற்கை உண்மை.. இயற்கை உண்மை”* என சன்மார்க்கிகள் கத்துறாங்களே, இதுவல்லவா இயற்கை உண்மையாக இருக்கமுடியும்...??? கொழந்தை மொதலிலே உயிர் அடையாளமானதை வெளிப்படுத்தி அழும்போதல்லவா காத்து கிட்டு நின்ன தாய்க்கும் தகப்பனுக்கும் சுற்றத்தார் உறவினருக்கும் மகிழ்ச்சி பொங்கும்?.. *"உயிர் வந்திருச்சு”* என்கிறார்கள்... அப்படித்தானே?.. அப்ப உயிர் எங்க இருக்குது? உயிர் எழுத்து எங்க இருக்குது?... இப்ப புரியுது போல தெரிகிறது அல்லவா, வள்ளலார் இதனை உரைநடைப்பகுதியில் தெள்ளத்தெளிவாக சொன்ன உளவு....??? நம் உடலில் இருந்துகொண்டு இருக்கும் உயிரையே புரிந்து அறிந்து கண்டு கொள்ளாமல் எங்கோ அருட்பெரும்ஜோதியை காடான காடுமேடெல்லாம் தேடி அருளை ஏதொ ஒரு பொருளென நினைத்து கொண்டு இருக்கும் ஜீவனை இழந்து போவதை விட கொடுமை எதுவாக இருக்கமுடியும்? தன்னுயிரையே கணு அன்பு செலுத்தி, உயிரின் உயிராம் அருளை உணர்ந்து, அந்த அருளின் உயிராம் இறைவனை அடைவதை விட்டுவிட்டு தேங்காய் எண்ணையோ, நல்லெண்ணையோ, நெய்யோ விட்டு எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் அருளை தேடுவதை போன்று ஒரு மூடத்தனம் இருக்கமுடியுமா? இறந்துவிடும் உயிரை இறவாத உயிருடன் சேர்ப்பதே சாகாகல்வி ஐயா... அதுவே சன்மார்க்கம் ஐயா சாகாகல்வி என்பது சாகாமல் இருக்கும் உயிருக்கு தேவை இல்லையே... சாகும் உயிருக்கு அல்லவா சாகாகல்வி தேவை????? அவ்வண்ணம் சாகும் உயிரை அறிந்து அது சாகா நிலையை அறிந்து அடைந்து கொள்ளுதலே சாகாகல்வி. அடைவதற்க்கு ஒன்றுமில்லை, நீங்கள் அதாகவே இருக்கிறீர்கள், *"நீங்கள் தான் அதாக இருக்க தடையாக இருக்கிறீர்கள்”*... உங்களில் “நீங்களே” தடை அற்று விட்டால் அதுவே இருக்கிறது...உங்கள் உடலும் மனமும் பிரானனும் உயிரும் அதுவே...இப்படியிருக்க அதை அடைவது எளிதல்லவோ.. தன்னுடலை தான் என்பதும், தன் மனதை தன்னுடையது என்பதும், தன் உயிரை தன்னுடையது என்பதும், தன் எண்ணங்களை தன்னுடையது என்பதும், தன் பேச்சை தன்னுடையது என்பதும், தன் செயல்கள் அனைத்தும் தன்னுடையது என்பதும், தன் உடலில் ஒவ்வொரு அங்கங்களையும் தன்னுடையது என்பதும், ஆக இதுவே இருமை எனப்படுவது. இருப்பது ஒருமை மட்டுமே, அதனை காணாது, உணராது இருமையால் அவதியுறுவதே குழப்பத்திற்க்கெல்லாம் காரணம்..... தன்னுடைய செயல்களில் இறை செயல் என உணர்பவன் இருமையை கடக்கிறான், தன் எண்ணங்கள் இறை எண்ணங்கள் என உணர்பவன் இருமையை கடக்கிறான், தன் அங்ககுலங்கள் அத்துணையும் இறை அங்கங்களே என உணர்பவன் இருமையை கடக்கிறான், இவ்வண்ணம் தன் பேச்சுக்கள், தன் மூச்சுக்கள் எல்லாம் ஒருமையின் வடிவமே என உணபவன் நாளடைவில் ஒருமையின் இன்பத்தை நுகர்கிறான்... ஒருமை அவனை ஆட்கொள்ளதுவங்கும்.... ஒருமை வளர தயவு வர்த்திக்கும், தயவு வர்த்திக்க அருள் காரியப்படும்... அருள் காரியப்பட முக்தி சித்திக்கும்... இருமையில் இருந்தான பரம் முக்தி... இதுவே வேதாந்த சித்தாந்த கலாந்த ஆறந்த கடந்த முடிபு. ❣️ நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்.❣️

No comments:

Post a Comment