Sunday, December 4, 2022
என்ன தான் பண்றோம்ண்ணு
என்ன தான் பண்றோம்ண்ணு இவனுக்கு தெரியாது, எதுக்குத்தான் பண்றோம்ண்ணும் தெரியாது,ஆனா எதையாச்சும் பண்ணிகிட்டே இருக்கான், எதுக்குண்ணு கேட்டா ஆன்ம விடுதலைக்கும்பான்.எதுக்கு ஆன்மாவை விடுதலை பண்ணணுமாம்ண்ணா தெரியாது, சரி ஆன்மா விடுதலை இல்லாம தவிச்சுகிட்டு இருக்குண்ணு யாரு சொன்னதுவாம்ண்ணா எவனையாவது சுட்டி காட்டுவான், அவர் என் குரு அவர் சொன்னாரும்பான்,அல்லது அந்த நூல்ல இருக்கு இந்த நூல்ல சொல்லியிருக்கும்பான்.உனக்கு தெரியுமாண்ணா நின்னு முழிப்பான், குருவுக்காவது தெளிவா தெரியுமாண்ணாலும் இதே கதை தான்.
என்னமோ பண்ணி தொலைக்க வேண்டியது. அதிகாலைல எழுந்திருச்சா தான் ஆன்மீகம் விளங்கும்பான்,அப்பத்தான் சுழுமுனையில ஆன்மா வரும்பான்.இவன் நெனப்பு ஆன்மாங்கிறது இவன் உடல் முழுசும் அங்கிங்க ஓடிகிட்டு இருக்கும் போல என்கிறது தான். வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும் என கால்பெருவிரல் நுனிமுதல் அங்கிங்கென ஓடிட்டு இருக்கும்ங்கிறான்.அதை புடிச்சு அடக்கணும்ங்கிறான், ஏதோ காற்றை புடிச்சு பலூண்ல அடைக்கிற மாதிரிஆன சங்கல்பம் பண்ணிக்குவான்.குருமார்கள் கூட இப்படித்தான் சொல்லிண்டிருக்காங்க.
நாம எதை செய்யுறோம், எதுக்கு செய்யுறோம்ங்கிற தெளிவு இல்ல,குண்டலி என்பான், ஆதாரம் என்பான், வாசி என்பான்,சுழுமுனை என்பான், ஏதேதோ சொல்லிகிட்டு தனையே தான் ஏமாத்திகிட்டு இருக்கானே ஒழிய ஆழமாக தெளிவு நிலைக்கு வர இவன் தயாரில்லை.தனக்குண்ணு ஒரு கூட்டம் இருக்க ஆசைபடுவான்,தான் சொல்றதை அவங்க ஏத்துக்கணும் அவ்வளவு தான் இவன் வாழ்க்கை, முடிஞ்சு போச்சு கதை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment