Sunday, December 4, 2022

அவ்வலு தீனி மஹ்ரிபத்திலாஹி" என்று எம்பெருமான்

"அவ்வலு தீனி மஹ்ரிபத்திலாஹி" என்று எம்பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லிம் அவர்கள், அறிவுத்துள்ளார்கள். மஹ்ரிபத்துல்லாஹி என்பது, ஷரீ-அத், தரீகத், ஹக்கீகத், என்ற மூன்று நிலைகளைக் கடந்து வந்து, இறைவனைப் பற்றிய மெய்யறிவை உணர்ந்து, அறிந்து அதில், தரிபடுகின்ற நிலை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், " தீனுடைய பாதையில் முதல் காரியம், இறைவனைப் பற்றிய ஞானத்தை அடைவது" என்று கூறிய, பிறகும், "இறைவனைப் பற்றிய ஞானம் தேவையில்லை" அவனுடைய ஏவல்கள், கட்டளைகளை ஏற்று, நடந்தால் போதும்" என்று சொல்லும் கூட்டத்தாரோடு சேர்ந்து விடாதீர்கள். சிலரிடம்  மெய்ஞானம் தேவையில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டு அவனளவில் மீள்வதே மார்க்கத்தின் சாரமாகவும், மனித வாழ்வின் இலட்சியமாகவும் இருக்கின்றது. அல்லாஹ்வைப் பற்றிய அறிவும், தேடலும் நமக்கு இருந்தாலன்றி, அவன் மீது நாம் கொள்கின்ற  நேசம் முழுமை ஆகாது. இதைத்தான் "அவ்வலு தீனி மஹ்ரிபத்துல்லாஹி" என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். அல்லாஹ்வைப் பற்றிய அறிவு அல்லது ஞானம், எங்கே கிடைக்கும்..? அதை எப்படி அடைவது...? இந்தக் கவலை உண்மையில் ஒருவனுக்கு, ஏற்படுமானால், அவன் கவலையின் அளவுக்கேற்ப, தேட்டமும், தேட்டத்தின் அளவுக்கு உரிய ஞானமும், அவனுக்கு கிடைக்கும். "வ அன்லய்ஸனில் இன்ஸானி இல்லா மாஸாஅ” "எதற்காக ஒரு மனிதன் முயற்சி செய்கின்றானோ, அதனையே அவன் அடைந்து கொள்வான்" என்பதை, அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். . எனவே "ஒருவனுடைய தேட்டத்தின் அளவைப் பொறுத்துதான் ஞானம் பெருகும்." நாஹூர் ஆண்டகை அவர்கள் வரலாற்றிலிருந்து. Courtsy;Nasoordeen Cassim

No comments:

Post a Comment