Sunday, December 4, 2022
சிவகாரண பூரணம்
====சிவகாரண பூரணம்===
“கண்டு தொழும் சிவகாரணம் ஏதடீ சிங்கி?-நம்மை உண்டுபடுத்தின உள்ளொளிவானதே சிங்கா.
எப்படி கண்டே இறையை வணங்கலாம் சிங்கி?-அது நட்புடன் ரெண்டு நடுநிலை காண்பது சிங்கா.
நடுநிலையானதை நாடுவதெப்படி சிங்கி?-அது நாட்டம் தேட்டம் ஓட்டம் ஆட்டம் ஒன்றாகினால் சிங்கா.”
=(தக்கலை பீருமுஹம்மது ஒலியுல்லாஹ் அருளிய ஞானரத்தின குறவஞ்சி.)
தொழுகையின் ரகசியம் என்பது இறையை கண்டு தொழுவதாகும்.தொழுகையின் போது ஒன்று நீ இறையை பார்கின்றாய் அல்லது இறைவன் உன்னை பார்கின்றார் எனும் போதமே தொழுகையின் ரகசியம் என நபியவர்கள் விளம்புகின்றார்கள்.
இறை தொழுகை என்பது எங்கோ மறைந்திருக்கும் ஒருவனை தொழுவதல்ல,உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஒருவனை தொழுவதே ஆகும்.இரண்டு கைகளையும் உயர ஆகயத்துக்கு உயர்த்தி கும்பிட்டு தொழுவதல்ல தொழுகை, தூல பிரபஞ்ச ஆகாயத்துக்கு மேல் இருக்கும் பர ஆகாயத்தில் அல்ல இறைவன் வசிக்குமிடம் என்பதை உணர்ந்தோர் தொழுகையின் ரகசியத்தை முற்றும் அறித்தோர் ஆவார்கள்.
நம்மை படைத்தவனையே பார்த்து தொழுவதே தொழுகையின் ரகசியம்.இதைத்தான் பீர்முஹம்மது அப்பா அவர்களும் சொல்கின்றனர்.நாம் கண்டு தொழ வேண்டிய சிவகாரணம் எதுவென வினவி அதற்குண்டான பதிலையும் தருகின்றனர்.
எதைத்தான் நாம் கண்டு தொழ வேண்டுமாம்?,நம்மை உண்டுபடுத்தின அந்த பேரொளி சொரூபத்தையே நாம் கண்டு தொழ வேண்டுமாம்.நம்மை உண்டுபடுத்தின பேரொளிவு எங்கே இருக்கின்றதாம்?
நாம் நமது தாய் தந்தையரின் கருவிந்துநாதம் மூலம் பிறந்திருக்கின்றோம் என்பது இயற்கை உண்மை அல்லவா?.அப்போது நம்மை உண்டுபடுத்தின அந்த பேரொளிவானது விந்துநாதம் எனும் கருநிலையின் உள்ளாக அல்லவா ஒளிவாக நிறைந்திருக்க வேண்டும்,அல்லவா?.
அதைத்தன் எப்படி கண்டு இறையை வனங்கலாம் என வினவி அதற்கு பதிலையும் சொல்கின்றார் அப்பா அவர்கள்.இவ்விரண்டு நாதவிந்துக்களின் நடுநிலையை அறிந்து அதனுட்கலந்திருக்கும் இறையொளிவான நடுநிலையை பொருந்தி தொழுவதே சூஃபிக்களின் அறிவுநிலை தரீக்கா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment