Sunday, December 4, 2022
ஸில்ஸிலா
====ஸில்ஸிலா===
தரீக்கா வழி நடக்கும் நிறைபேர்கள் அந்த தரீக்கா வழியில் உள்ள ஷெய்குமார்களின் தொடர்பை மறந்தே வாழ்கிறார்கள் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் வாழ்க்கையில் சோதனைகள் மற்றும் வேதனைகள் ஏற்படும்போது நிற்கதியாக நிற்க்ககூடிய நிலை ஏற்படுகிறது. உலகத்தில் தாய் தந்தை உடைய கண்காணிப்பு ஆசிரியர் கண்காணிப்பு மற்றும் நம்மை சார்ந்தவர்களின் கண்காணிப்பு இருக்க வேண்டும் இல்லையென்றால் வாழ்க்கை மாறிவிடும். இதுபோலவே உங்களுடைய தரீக்காவின் ஷெய்குமார்களின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருங்கள் உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்.
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى
எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக் கின்றானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடி யானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.
قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا
(அச்சமயம்) அவன் "என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேனே!" என்று கேட்பான்.
قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَا وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى
அதற்கு (இறைவன்) "இவ்வாறே (குருடனைப் போன்ற உன் காரியங்கள் இருந்தன) நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவைகளை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்" என்று கூறுவான்.
(அல்குர்ஆன் : 20:124,125,126)
நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்.
அவர்களின் பார்வையின் கீழ் இருந்ததால் மட்டுமே சத்திய சஹாபாக்களால் இரு உலகையும் வெல்ல முடியும்.
.
கலீfபா மௌலவி
அஹமது மீரான் சாஹிப்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment