Sunday, December 4, 2022

மூர்த்தி தீர்த்தம் தலம்

மூர்த்தி தீர்த்தம் தலம் கோடானுகோடி கற்ப காலங்கள் தவம் செய்யினும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கோ மும்மூர்த்திகளுக்கோ கிடைக்காத ஒரு அரும் பொக்கிஷம் ஒன்று உன்னிடம் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறாய். அது உன் உயிர் என நினையாதே, உயிரினும் மேலானது. ஏன் உன் உயிரினுக்கும் ஆதாரமானது கூட,; ஆயினும் அதை நீ மதியாதிருக்கிறாய். அதை நீ கவனியாதிருக்கிறாய்.சலனமறிருந்தும் சலியாமல் அசைவற்ற சிவம். அதுவே மெய் என்றறிவாயாக. அதை பெற்றிருக்கும் நீ நிச்சயம் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் மும்மூர்ர்த்திகளுக்கும் மேலானவனே ஆம் என்பது நிச்சயமான நிச்சயம். இதுவே மெய்.உடலுக்கே மெய் என பெயர். பொய்யானது எனில் இதை மெய் என்பானோ? மெய்யே தான் மெய். _______________________ Navaneethakrishnan Kuppusamy பின்வரும் கருத்துக்கள் கர்மவினைகளின் பலாபலன்களின் தொகுப்பே இவ்வாழ்வு என்பதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுகிறது. 'நல்லாற்றுப் படூஉம் புனை போல் ஆருயிர்', ' அதிகமாம் புண்ணியர்க் கிந்த யோகம்', 'ஜென்மாந்த்ர க்ருதம் பாபம் வ்யாதி ரூபேணாம்' என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க கர்மாக்கள் (பாவ புண்ணியக் கூறுகள்) உண்டென்றும் அவையே நமது அன்றாட வாழ்வின் போக்கினை மேன்மையை நிர்ணயிக்கின்றது என்பது எம் நம்பிக்கை. வரும் வினைகளின் பலன்களை, இன்பமோ துன்பமோ அதை துய்ப்பது இந்த உடலாகிய மனம், மனம் மட்டுமே. இன்னும் இந்த சங்கிலித் தொடரினின்று விடுபட்டு உய்வதற்கும் ஆகிய புண்ணியமும் இவ்வுடலாகிய மனம் இன்றி அசாத்தியமே. ஏதோ ஒரு புள்ளியில் இக்கணக்கு நேர் செய்யப் பட்டு சுதந்திரம் வயப் படுகிறது. தவறு இருப்பின் மன்னிக்கவும்.  - குருவின் துணையுடன் Hseija Ed Rian நாம் சாதாரணமாக வழக்கில் “அவனுக்கு அளந்த அரிசி முடிந்துவிட்டது” என சொல்லகாண்கிறோம்.கர்மவினைத்தொகுப்பு அதன் பகுப்பு அதன் நிர்ணய வினைபோக அனுபோக பயன் நிலை யாது யாது எனவும் அதன் தொடர்பு உண்ணும் அரிசியும் எவ்வாறு தொடர்பு நிலை கருத்துள்ளோர் இயம்ப கேட்க்க ஆவல்

No comments:

Post a Comment