Sunday, December 4, 2022

சத்விசாரம்

தோத்திரம் செய்வதினால் கோடி பங்கு உஷ்னத்தை பெற்று கொள்ளலாம் எனவல்லவா வள்ளலார் சொல்லி இருக்கின்றார்... ஏன் தோத்திரம் செய்யவேண்டும்? தோத்திரத்தினால் எப்படி சுத்த உஷ்னம் உண்டாகும் என அறியவேண்டாமா?.. ."சாலை ஆண்டவர் சொல்லுவதை பாருங்கள்,” "வாயுணவுஇந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது, அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை. னித்திய தேகமெடுத்துவாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம். அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள்கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙுபெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்." "மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால்கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக்கொடுத்துள்ளான். வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்." "மூக்கறிவு வளர்வதற்காகத்தான் தேக பரிசுத்தம். ஆலய வழிபாடு முதலியன எடுத்து வைக்கப் பெற்றதுஅதற்கே. மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும். ஜீவனுக்கு மெய் உணர்ச்சி தைப்பது காது வழியாகத்தான்.செவிச் சுவை உன் ஜீவனுக்கு உஷ்ணத்தையும் தேஜஸ்ஸையும் தருகிறது - கிளப்பி உண்டாக்குகிறது. செவிக்கு உணவு அருந்நுபவன் யோகத்தில் ஆழ்வான். வாய்க்கு உணவு அருந்நுபவன் பாபத்தில், துக்கத்தில் ஆழ்வான். செவிக்கு உணவு அருந்நுவது என்பது, ஞான சைதன்ய வார்த்தைகளை உள்ளம்சம்மதிக்கச்செவி மடுப்பது - யோகத்தைப் பெருக்கி சீவேசனாக்கும் செயலில் உன்னை விழுத்தாட்டுவது." செவிக்கு உனவு என்றால் சும்மா பாட்டுபாடிகிட்டு இருக்கிறதுவல்ல ஐயா.... அது வேற சங்கதி உண்டு. சும்மா பாட்டு பாடுறது என்றால் பெந்தேகொஸ்த்துகாரனும் தான் பாட்டுபாடி ட்ரெம் செட் எல்லாம் அடிச்சுகிட்டு அல்லேலூயாண்ணு கூட்டகோரஸா பாடிகிட்டு இருக்கானே, அவனுக்கு என்ன அடக்கமா கிட்டபோகுது இல்லியே?..அது ஏன்? அவனுந்தான் தோத்திரம் பண்ணிகிட்டு சதா இருக்கானே, அவனுக்கு ஏன் முக்தி கிடைக்கலேண்ணு ஆலோசிக்கவேண்டியது இருக்கல்லவா?.. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் எனவல்லவா வள்ளுவநாயனார் பாடிகிட்டு போனார், அல்லவா.. அப்ப நாமளும் அடக்கத்தை அறிந்து அடங்கவேனும் அல்லவா.. அதற்க்கு அடங்கும் தலம் அறியவேண்டுமல்லவா.. இடம் அறிந்து கொள்ளாமல் எங்க போயி அடங்குறதுக்கு?...கண்டிப்பாக ஆரிருள் உய்த்துவிடும். சைவ சித்தாந்தத்தில் திருவாசகம் முற்றோதுதல் ஓதலாகத்தான் இருக்குமோ? ஓதுவது எல்லாம் அறிந்து ஓதாவிடில் அது திருவாசகம் ஆனாலும் சரி  திருவருட்பா ஆனாலும் சரி சும்மா பாட்டு மட்டும் தான் நடக்கும்... ஈசன் சேவடி சேராது, இறைவன் கேட்க்கமாட்டான். இறைவன் கேட்க்க பாடுவதே பாட்டு. அதற்க்கு தன்னுக்குள் இறை இருக்கும் தலம் கணு அந்த இறைவனிடம் பாடி தோத்தரிக்கவேண்டும். அவர் கிட்ட பாடாம அடுத்தவன் வீட்டுல போயி பாடிகிட்டு இருந்தா அவருக்கு என்ன லாபம் நமக்கு என்ன லாபம்?.. செத்து தொலையவேண்டியது தான்... இதை தான் கிறிஸ்த்து சொல்லுவார்,  “நீங்கள் என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள். அவர் சத்தத்தையும் கேட்டதில்லை. பிறகு எப்படி நான் சொல்லுவதை ஏற்றுகொள்ளுவீர்கள்?” -- ரியான் அய்யாவின் சத்விசாரத்திலிருந்து.

No comments:

Post a Comment