Sunday, December 4, 2022
கற்ப விருட்சமும் காகபுசுண்டரும்
கற்ப விருட்சமும் காகபுசுண்டரும்
மஹாபிரளயம் ஆகும்போது அனைத்தும் அழிந்துவிட மும்மூர்திகள் மிஞ்சுவார்களாம், பிரளயம் மேலும் வலுக்கும் போது அவர்களும் அழிந்துவிடவே மஹாபிரளயம் மீண்டும் மேலும் வலுப்படுமாம், அப்போது மாமஹரிஷி மார்கண்டர் மட்டும் ஜலப்பிரளயத்தில் நீந்தி கொண்டிருப்பாராம் அப்போது ஒரு மாமரக்கிளை மிதந்து வருமாம்,மார்கண்டர் அந்த மாமரக்கிளை பிடித்து ஏறவே அந்த மாமரம் வளர்ந்து மேலே சென்றுகொண்டிருக்குமாம், அதன்மேலே ஏறிபோன மார்கண்டர் அங்கே கண்டது விசித்திரமாய் ஆதியென்ற சித்தருக்கும் ஆதியானவரும், அனந்தங்கோடி பிரளயங்களுக்கு சாட்சியானவரும் மகரமெனும் மவுனவித்தைக்கு ஆசானானவருமான பிரம்மரிஷி காகபுசுண்டர் அவர்கள் மாமர லிங்கத்தை பிடித்துகொண்டு “மகர தவம்” செய்து கொண்டிருந்தாராம்,. நாலுவேதங்களும் பூமியில் இறங்கிவந்து தோத்திரம் செய்த மாமரமானது காஞ்சியில் காமாட்சிஅன்னையின் தலவிருட்சமாய் கற்பாந்தகாலமாய் நிலைகொண்டுள்ளது. அப்படிப்பட்ட கற்ப விருட்சத்தை அறிந்து “மகர தவம்” செய்ய அன்புடன் அழைக்கின்றேன் அறிந்தே..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment