Thursday, November 24, 2022

பிஸ்மில் குறம்

 ஆதமென்ன அவருடைய பாதமென்ன வென்றால் அறியாதபேர்களெல்லாம் அறியசொல்வேன் கேளும்-

வேதமென்றும் ஆதமென்றும் விளம்புவதுமது தான் வெகுபலதாய் சமையுமுன்னே அஹதியத்தாயிருந்து
-அதுதான் அஹதத்தென்று அனைத்தியுமுள்ளொடுக்கி அப்புறமும் வாகிதத்தாய் வானத்திலோ ஆதம்-
வாகிதியாவதென்ன ஆதமுருவாச்சு
வகைவகையாய் தலைமுறையாய் வந்ததந்த விந்து--அந்த விந்து ஆதமுதல் அணிய வந்ததாலே அதுதானே ஆதமது பாதமது நிஜமாம்-விந்தைபெறும் ஆதத்துட விந்து நிறம் வெள்ளை வெடித்து புகை காற்றாய் வெளியில் வருமூச்சாம்-மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்தாகும்-முடியாத தம்மல்லவோ ஆதமென்று பேரு-ஆசரியம் மூச்சுக்கொரு ஆதாரம் அலிபு அந்தலிபு மூச்சுமல்ல ஆதத்துடபாதம்-அந்தலிபு நிலையறிந்து அதற்க்கு சுஜூதிட்டால் அதிகதவம் ஆதத்துட பாதமது நிஜமாம்.
(பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-பிஸ்மில் குறம்)

No comments:

Post a Comment