சித்தர் பாடல்களில் பார்த்தீர்களானால் மூலம்னா இடுப்புக்கு கீழ குதத்திற்க்கு மேலேன்னு சொல்லி வெச்சிருப்பாங்க. பிராணன் அங்கிருந்து உதயமாகி சிரசளவு சென்று மீண்டு நாசி வழி வெளிய வீணாகின்றது என காணலாம்.
அப்போ மூலம் கீழயா அல்லது மேலயான்னு சந்தேகம் வருவது இயற்கை. தக்க குரு இதன் விளக்கத்தை சொல்லி புரிய வைக்கவில்லையென்றாகில் குழம்பிகிட்டே தான் வாழ்க்கை முழுசும் அலைவான்.தலையடி உச்சியில் உள்ளது மூலம் என திருமந்திரம் சொல்வதையும் காண்கிறோம்.
இதுக்கு தான் மூலம் அறியாமல் முக்தி இல்லை என்கிறோம்.மூலம் அறிந்தாக்கால் முக்தியும் உண்டாமே.விஷயம் தெரியாமல் ஏதையோ கேட்டுகிட்டு எதையோ புருஞ்சுகிட்டு காளைமாடு மோண்டுகிட்டு நடக்கிற மாதிரி நடப்பாங்க.
----❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️
No comments:
Post a Comment