==== எழுநிலை சூட்சுமம் =====
"பிராணாயாமம்" முதலான சம்பிரதாயங்களினூடே எவ்வண்ணம் குண்டலினீ சக்தியை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோமோ அவ்வண்ணம் மற்றொரு முறை தான் "பேச்சு சக்தியை" கொண்டு உணர்வு நிலைக்கு மேலேறும் முறையும். இதை ஓதி ஓதி உணர்தல், ஓதாதுணர்தல் என வகைபடுத்துவர் ஞானியர்கள்.
பேச்சின் சூட்சும அறிவு நிலைக்கு பரையறிவு அல்லது வாலறிவு என்பர்.
பர வித்தை என்பதும் இதை கொண்டு இயற்றப்படும் சம்பிரதாயம்தான். இவ்வண்ணம் பிராணனுக்கும் பேச்சுக்க்கும் மையமாக திகழ்வது ஒரு அமானித விந்துநிலை. அதற்க்கு தான் வித்யா தத்துவம் என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. எழுநிலை சூட்சுமம் அது, அதில் இருந்து கிளம்புவதால், அமிர்த விந்துவுக்கு எழுத்து என பெயர் வைக்கபட்டிருக்கின்றது.
அட்சர சொரூபமாக வாலறிவாக விளங்குவதால் சித்சொரூப சக்திக்கு வாலை என பெயர். அதாவது அமிர்த சொரூபமாக சதா வடிந்து கொண்டிருப்பவள், அமிர்த பாஷிணி.
அதி சூட்சுமத்துக்கு செல்லாமல் சற்று குறுக்கி கொண்டமைக்கு மன்னிக்கவும்.
No comments:
Post a Comment