Thursday, November 10, 2022

ஞானம்ண்ணா என்னவாம்

 === *ஞானம்ண்ணா என்னவாம்?* ===


சாதாரணமாக நாம் பற்பல யோக சம்பிரதாயங்கலை கேல்விபட்டுள்ளோம், எதை எதையோ புடிச்சு இழுந்து நிமிர்த்தி என பல அப்யாசங்கள் பண்றதையே யோகம்ண்ணு சொல்றோம்லியா? இதெல்லாம் ஏதோ ஒரு யுக்தி, செயல்முறை,சடங்கு சம்பிரதாயம்ண்ணு தான் இருக்கும்லியா?. ஆனா ஞானம்ண்ணா எதுண்ணு நமுக்கு சரியான அறிவு இல்ல, சரியான புரிதல் இல்ல, அதன் காரணமாக ஞானம்ண்ணா ஏதோ கடைசி காலகட்டத்துல சாகும் தருவாயில் கிடைக்கிற ஒண்ணுண்ணு நெனச்சிட்டிருக்கோம்தானே? ஆனா ஞானம்ங்கிறது முக்திக்கு மூலம். ஒருத்தனுக்கு ஞானம் கிடைச்சிடுதுண்ணாலே அவன் முக்தி அடைஞ்சிட்டான்ண்ணு அர்த்தமில்ல. யோகம் கிடைச்சாலும் கூட அவன் யோகி ஆகி சித்துக்கள் ஆடுற தன்மையை பெற்றவனல்ல.

ஞானம் கிடைக்கிறதுனால என்ன ஆகுதுண்ணு கேட்டா, அவன் தன்னை அறியறான். சிலவேலை ஆயிரம் ஆயிரம் யுகாந்திரங்கள் கூட ஆகலாம் ஒருவன் தன்னை அறிவதற்கு.சிலவேளை நொடியிடையில் கூட ஒருவன் தன்னை அறியலாம்.அது அவன் பாடின பாட்டுக்கு தகுந்தபடி அமையும்.அவன் தேடின தேடலுக்கு தக்கபடி அமையும், அவன் உள்வாங்கிய தன்மைக்கு ஏற்ப அமையும்.

ஆனா ஞானம் கடவுள் ஒருபோதும் இறங்கி நேரடியாக வந்து இந்தா புடி ஞானம்ண்ணு குடுக்கிறதில்ல. இந்த பிரபஞ்சத்துக்கு நாம வந்ததே நம்மை அறியத்தான், தன்னை அறியத்தான்.”

*தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை*
*தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்*
*தன்னை அறியும் அறிவை அறிந்தபின்*
*தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.”*  என திருமூலர் சொல்றது இதைத்தான்.

இங்க சீடனாக இருக்கிறவன் குருவை அளந்து பாக்க எத்தனிக்க, குருவிடம் இருக்கும் ஞானம் என்பது என்ன எனக்கூட இவனுக்கு தெரியாதிருக்க, ஆகும் விளைவை நினைத்து பாருங்களேன்.குருவானவர் தன்னிடம் இருக்கும் பொருளை வெளிகாட்டிக்கொண்டு திரிவதில்லை, அது வெளிக்காட்டி விளம்பரம் தேட அது ஒன்றும் உலகியல் விஷயமல்ல. அவர் யாருக்கு, எத்தகைய பக்குவம் கொண்டவருக்கு , எப்படி ,எந்த சமயத்தில் வழங்கவேண்டும் என தெரிந்தவராக இருப்பார் என்பது திண்ணம்.

*”என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே*
*என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்*
*என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ*
*என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே”*

தன்னை அறிந்த மெய்குருமார்கள் சீடனின் பக்குவம் பார்த்து. அபக்குவிகளான சீடர்களுக்கு தக்க அறிவுகலை கொடுத்து, நடக்கத்தெரியாதவனை நடக்க வைத்து, உண்ணத்தெரியாதவனை உண்ணவைத்து, புரிய முடியாதவைகலை புரிய வைத்து அனேகம் ஊட்டச்சத்துக்களை வேளவேளைக்கு ஊட்டித்தான் வளர்ப்பார்கள். சீடனோ, இவரு சதா எதோ யோகங்களையே தான் சொல்லிகிட்டு இருக்காரே, அல்லாது ஞானமான விஷயங்கள் ஏதும் சொல்லித்தருவதில்லையே என ஆதங்கபடுவது சகஜம் தான். ஆனால் சீடன் எப்படி குருவிடம் இருக்கும் ஞானத்தை கண்டுபுடிக்கமுடியும்?. தானாக இருக்கும் பொருள் இன்னது என குரு சொல்லாதவரைக்கும் இவன் அண்ணாந்து பார்த்துகிட்டு இலை எத்தனை என எண்ண வேண்டியது தான்.

ஞானம்ண்ணா பெரிய சங்கதி ஒண்ணுமில்லை என பெற்ற பின்னர் தான் தெரியவரும். தன்னிலே தானாக இருக்கும் ஒரு பொருளை அறிதலே ஞானம். அது அறிவுக்கு வர ஏராளமான காலம் சிலவேளை ஆகலாம், ஏராளமான யோகங்கள் பண்ணி முடித்தபின்னார் கூட வரலாம், யோகங்கள் ஒன்றும் பண்ணாமலும் அந்த பொருள் எது என தெளிதல் வரலாம். ஆனால் தன்னிலே இருக்கும் பொருளை அறிந்து கொண்ட பின் உடனேயே அவன் முக்தன் ஆகிவிடுவான், எல்லாத்தையும் கடந்து விட்டிருப்பார் என ஒரு அளவுகோலை மக்கள் கையில் வைத்திருப்பதினால், அந்த அளவுகோலினால் தான் உண்மையான ஞானம் பெற்றவனையும் அளந்து விடுகின்றார்கள்.தான் யார் என்பதை ஒரு க்‌ஷண நேர்த்தில் சீடனின் அறிவுக்கு கொண்டு வரக்கூடிய அறிவு நிலை தான் ஞானம்.ஆனால் சீடன் அபக்குவியாக இருப்பதினால் தான் குரு அவனை ஓடாத ஊரெல்லாம் ஓடிக்கிட்டு இருண்ணு ஓட சொல்றது.ஓடி முடிச்சப்புரம் தான் பக்கத்துல இருக்கிற மாங்கணி சீடனுக்கு தெரியும்,அதுக்கு முன்னாடி தெரியவராது.இதான் காரணம்.

இவன் குருவை அளக்க போயி, குருவுக்கு அது புரியப்போயி, அப்புறம் குரு நீ அளந்துகிட்டே இரு என நினைக்க போயி, கடைசியில இவனுக்கு இவன் அளவுகோலே சிலுவையாக மாறும் நிலை வந்துவிடுகின்றது.தன்னை அறிந்தவன் தன்னையே அர்ச்சிக்க இருப்பான்.அப்படி தானாக இருக்கும் பொருளை அறிதலே ஞானம், அதை அறிந்தவன் வேலை என்பது தன்னையே அர்ச்சித்து இருப்பதாகும்.அதாவது பெற்ற ஞானத்தை போற்றி இருப்பதாகும்.


No comments:

Post a Comment