ஆக்ஞா சக்கரம் என்பது புருவமத்தியா?
சாதாரணமாக யோகஞான விவகாரங்களில் பார்க்கும் போதும் இந்த கேள்வி எழுகிறது. ஆக்ஞா சக்கரம் என்பது ஆறாதரங்களில் ஆறாவது நிலை சக்கரம். ஆனால் இது எதற்க்கு புருவமத்தி என பெயரால் அழைக்கின்றனர் என்பது புருவபூட்டு தான் அல்லவா?.. இப்படியான சிக்கல்களைத்தான் பூட்டு என நடைமுறையில் அழைப்பார்கள். அல்லவா?
ஒரே இடத்திற்க்கு ஏன் இரண்டு பெயர்கள் வந்தன?..அல்லது இவை இரண்டும் இரு இடங்களா? இரு விஷயங்களை சொல்லுகின்றதா?..யாரும் எங்கும் புருவமத்தி சக்கரம் என சொல்லி கேட்டதில்லை.
அப்போது புருவமத்தி என்பது தான் என்ன?. இந்த குழப்படியில் சிலர் கண்மணி மத்தி தான் புருவமத்தி என சொல்லிகொண்டு தனி இயக்கமே ஆரம்பித்து இயங்கிகொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்தது தானே?.. திறப்பது யாரோ?
"காக புஜண்டர் பாடலை சற்று ஆழ்ந்து சிந்திப்போம்"
கேளப்பா கேசரமே அண்ட வுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு
நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே.
7:
காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
அண்டமடா அனந்தனந்த மான வாறே.
8:
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
9:
பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.
10:
கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.
11:
பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
12:
போமடா முன்சொன்ன நரம்பி னூடே
பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே””....சரிதானே
பாரடா புருவமத்தி ஏதென்றாக்கால் பரபிரம்மமானதொரு அண்ட உச்சி. == இது ஒரு பாடல் வரி; அடுத்த பாடல் வரியை கவனியுங்கள்;
“நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய் பாரு.” சரிதானே அப்போது எது புருவமத்தி எது சுழுனை ஐயா?
புருவமத்தியே அண்ட உச்சி என சொல்லும் புசுண்டர் பிரான் அந்த புருவமத்தியானது என்னவென சொல்லுகிறார் கவனியுங்கள்;
”அண்டவுச்சி தன்னில் நின்று
பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
அண்டமடா அனந்தனந்த மான வாறே”
அதாவது உயிர்பயிரை எந்நாளும் படைத்து தொந்தமென்னும் எழுவகை தோற்றமாக நாலுவகை யோனியாக இருப்பது தான் அண்ட உச்சி எனும் புருவமத்தி. சரிதானே?
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
அண்ட உச்சி என்பது சுழுனை என சொல்லலாமா? நன்றாக பார்த்து சொல்லுங்களேன். அண்ட உச்சி எனும் புருவமத்துயாம் முனை கம்பாலே நரம்பு விழுது போலாகி இருகண்ணில் ஒளிவாகி அந்த நரம்பு வட்டம் சுழுனை என ஆச்சு. அல்லாது அண்ட உச்சி எனும் புருவ மத்தி தான் நரம்பு வட்டமான சுழுனை என்பது எங்ஙனம் விளக்கம் பெறும்
பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
12:
போமடா முன்சொன்ன நரம்பி னூடே
பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.
=இந்த பாடலையும் சற்று கவனியுங்களேன்
ஓமடா விந்துவுந்தான் அண்ட உச்சி எனவல்லவா சொல்லுகிறார், அல்லவா? அந்த அண்ட உச்சியே தான் புருவமத்தி எனும் பரபிரம்ம நிலை....நீ ங்கள் சொல்லும் சுழுனை என்பது கபாலத்தில் முக்கூறாக இருக்கும் நரம்பு வட்டம். சொல்லுவது சரிதானே ஐயா?
ஓம் எனும் விந்து அல்லவோ அண்ட உச்சியான புருவமத்தி?.. அப்படித்தானே?.. அல்லாது சுழுனை எனும் நரம்பா புருவமத்தி?
மூலமான லிங்கத்துக்கு கீழ்மேலாக ஓடுகின்ற நரம்பு மத்திக்குத்தான் சுழுனை என பெயர். அதாவது மூலமான லிங்கத்திலும் சூரியசந்திர நாடிகள் உண்டு. அதன் மத்தியும் சுழுனை தான். இருதயத்திலும் மேற்சொன்ன நாடிகள் கீழ்மேலாக பாய சந்திக்கும். அங்கும் சுழுனை உண்டு. கண்டத்திலும் சூரிய சந்திர சுழுனை உண்டு. அதுக்கு மேலும் உண்டு.இப்படி மூலம் முதல் அண்ட உச்சி வரைக்கும் சுழுனை உண்டு. ஆனால் புருவமத்தி என்பது மூலமான லிங்கத்தில் இல்லை. கீழே கொடுத்திருக்கும் புசுண்டர் பாடலை கவனியுங்கள்.
கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.
11:
பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
இப்படி ஆறு ஆதாரங்களிலும் சுழுனை உண்டு, அதாவது ஆக்ஞை சக்கரத்திலும் சுழினை உண்டு.. ஆனால் ஆக்ஞை புருவமத்தி இல்லை.புருவமத்தி என்பது பரபிர்மமான, சகல புவனங்களும், உயிர்பயிர் வகைகலையும் சிருஷ்ட்டித்த, நாலுவகை யோனி சிருஷ்ட்டித்த விந்து நிலையே...புரிகிறதா வித்யாசம் ஐய்யா
சதாரணமாக “அண்ட உச்சி” என்பதற்க்கு நம்ம மக்கள் “தலை உச்சி” என பொருள் கொண்டு விடுகின்றனர். அது மிகபெரிய கற்பனை புரிதலுக்கு வழி வகுத்துள்ளது. ஏராலமான மக்கள் இப்படி குழம்பிகிடக்கிறார்கள்...அதனால் தான் புசுண்ட பிரானவர்கள், “ஓமென்ற பிரணவமே அண்ட உச்சி” என சூட்சும விளக்கம் அளிகின்றார்.அல்லது ஓமெடா விந்துவுந்தான் அண்ட உச்சி என்கிறார். இது நுணறிவினால் புரிந்துகொள்ளகூடியது.குருநிலையினால் கிடைக்கபெறுவது.
அண்டம் என்றால் தலை என பொருள் கொண்டால் இப்படி தவறானபுரிதல் உண்டாகும்.ாண்டம் என்றால் பிரணவம் என கொண்டால் உண்மை விளக்ங்கும். அந்த பிரணவ உச்சியே புருவமத்தி.அது தான் பரபிரம்மமானதொரு அண்ட உச்சி.
அதனாலத்தான் காகபுசுண்டர் பிரானவர்கள் “விஷமுண்ட அண்டமதை விரும்பி பாரே” என்கிறார். இவங்க அது இவங்களோட தலை தாண்ணு சொல்லிகிட்டு இருக்காங்க.புரிதல் வரட்டும்பா...
ஏல்லாம் மறை பொருட்கள் தான்...அது மறைஞ்சு இருக்கிறதுனால தான் நாம தேடிட்டு இருக்கோம்...ஆனால் வெளியரங்கமா போட்டா யாரும் தேடமாட்டாங்க...தேடிகலைச்சு கிடைக்க அதன் அருமை ரெம்ப உசத்தியாக இருக்கும்...அதனாலத்தான் சின்ன விஷயத்துக்கு கூட ரெம்ப வருஷம் அலையவிடுறது...
இனி புசுண்டர் பாடலை மீண்டும் படிச்சு பாருங்க, புரிதல் சற்று வேறுகோணத்துக்கு மாறுபட்டு தோற்றமளிக்கும்=”பாரடா புருவமத்தி ஏதென்றாக்கால் பரபிரம்மமானதொரு அண்டவுச்சி”
அருமை...இது தான் ஞானம்..நெறைய தெரியும்கிறது அஞ்ஞானம்...ஒண்ணும் தெரியாதுங்கிற ஆழ்மன நினைப்பு தான் ஞானம்...ஒருவித வெறுமையாதல்..படிச்சது முழுதும் பயனற்று போகும் நிலை...அதுவே உன்னத மனநிலை..அங்கே பணிவும் தன்னடக்கமும் விலையாடும். என்ன மாதிரி குசும்பும் குதர்க்கவும் இருக்காது
சர்வேசுரனென்னும் நாமத்தின் பிரத்தியேக ஆத்ம சைதந்நியமாகிய வஸ்து எங்கும் பூரணமாய் இருப்பது இயற்கையுண்மை ஏகதேசம்... ஆதலால், கடவுளை - அறிவதற்கு - ஆன்ம அறிவைக் கொண்டே அறிய வேண்டும். மேற்படி அறிவு ஆன்மவியாபக ஆலயமாகிய மனிதர் தேகத்தில் கடவுள் காரியப்படுவது உத்தமம்."
ஆன்ம அறிவு துலங்கும் இடம் புருவமத்தி இன்னும் சிந்தித்தால் அந்த அறிவுதான் புருவமத்தி என வருகிறது ஐயா
அப்போது அறிவு துலங்குமிடம் தான் புருவமத்தி என வருகிறது அல்லவா?.. அது தான் சரியான உண்மை. மேற்படி அறிவானது நம்மிடம் இருந்தும் நம்மால் பற்றிகொள்ளமுடியாமல் இருக்கிறது. மேற்படி லிங்கம் என சொல்லுவதும் அந்த அறிவைத்தான்.அறிவானது உடலெங்கும் வியாபகமாக இருப்பினும் அதை பிரத்யட்சத்தில் சில முறைகளில் பிரித்தறியலாம். அந்த உபாதிகளில் ஒன்றே தியானம், மனத்துடன் கலந்திருக்கும் அறிவை பிரித்தறியும் ஒருவித யுக்தி, உபாதி. இவ்வாறு பல முறைகள் அறிவை பற்றிகொள்ள வகுக்கபட்டுள்ளது. அதில் சற்று கூடுகமானது லிங்க அறிவு, அதாவது புருஷ அறிவு, ஆண் அறிவு.
No comments:
Post a Comment