Wednesday, November 9, 2022

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்”

 "ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்”


இந்த குறளை பார்த்துகிட்டு பலபேர் விளக்கம் சொல்லுவதை பார்த்திருக்கிறோம்.கண்ணுண்ணு சொல்றவன் காதுண்ணு சொல்றவன் என பலரகம்..பல மனம்...


ஆனால் விடையானது பாடலிலேயே.இருக்கின்றது என்பது சுவாரசியமான ஒன்று.


“உயிர் வாழ்வான்” என்பது பார்க்க சாதாரணமான வார்த்தையாக தோன்றும். ஆனால் வள்ளுவருக்கு தெரியாதா என்ன உயிர் என்பது வாழக்கூடியது என?. ஏன் உயிர் வாழ்வான் என சொல்லுகின்றார், உயிரில்லாமல் வாழ்வு தான் இல்லையே?. ஒத்ததறிவான் வாழ்வான் என சொன்னாலும் என்ன தவறு இருக்கின்றது,அல்லவா?.உண்மையென்னவெனில் உயிர் வாழ்வான் என்பதின் பொருள் உயிருடன் ஒடுங்கி வழ்வான்.அவ்வண்ணம் ஒடுங்கி வாழாதவன் செத்தவர்களுடன் சமமாக கருதப்படுவான் என்பதாம்.


இங்கு விஷயம் எதுவெனில்,ஒத்தது எதுவென்பதேயாம்.


இனி ஒருமுறை கூட வாசிப்போம், ”ஒத்தது உயிர் அறிவான் வாழ்வான் மற்றெல்லாம் செத்தாருள் வைக்கபடும்.”.


உடலொத்தது உயிர்-உயிரொத்தது உடல்..இவை. சேர்ந்தது வாழ்வு.


ஏன் இதை ஒத்தது என சொல்லுகின்றனர் எனில் உயிரானதும் உடலை போலவே ஆணாகவும் பெண்ணாகவும் டஇருக்கின்ர காரணததாலேயாம்..இதுவே தெள்ளத்தெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம் என்பது.ஆண்-பெண் உருவகமான குறியீடு மறைசுட்டு.இந்த அறிவு அற்றவன் ஒத்தது அறியாதவன்.அதனால் தான் ஜீவசமாதி மேல் சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment