=====போதிசத்வ சாமந்தர்=====
கபில வஸ்துவில் பிறந்து அன்று போதி மரத்தடியில் அவர் ஞானம் பெறுவதற்கு 2400 கோடி ஜன்மங்களுக்கு முன் அடர்ந்த காட்டுபகுதியில் செல்வந்தரான ஒரு ஆந்தை இளவரசனாக அவர் பிறந்தார்.அருகாமையில் இருக்கும் ஊர்புறங்களில் இரவு நேரங்களில் சுற்றுபயணம் செல்லும் போதெல்லாம் அவர் மனதில் எழுந்த கேள்வி ஒன்றே,ஏன் இந்த மனிதர்கள் எல்லாம் கடவுள் என்ற ஒன்றை வைத்து வாழ்நாளெல்லாம் வணங்கி கொண்டு திரிகின்றனர் என்பதே.உண்மையில் இவர்கள் செய்வது நிஜமானதா அல்லது பொய்யானதா,கடவுள் என ஒரு பொருள் இருக்கின்றதா எனும் சந்தேகமே.
ஆந்தை இளவரசருக்கு இரவெல்லாம் ஆராய்ச்சியே தான் மிஞ்சியது,கூட்டத்தார் எல்லாம் இரைதேடி செல்லும்போதெல்லாம் அவர் அந்த போதி மரத்தின் கிளையிலேயே தன் பொழுதை கழித்தார்.மனிதர்களி இந்த செய்கையினால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கபோகின்றது என்பது எத்தனை இரவுகள் கழித்தும் அவருக்கு விளங்கவில்லை.மனிதர்கள் தான் இப்படி கடவுள் வணக்கம் செய்வதினால் எதாவது உயர்நிலைகளை அடைகின்றனர் எனில் நம் போன்ர அற்ப பிறவிகள் உய்வதற்க்கு வழிதான் என்னும் கேள்வியும் அவர் மனதில் எழவே செய்தது.அவரால் விடை காணமுடியாத கேல்விகள் என ஏராளமான விஷயங்கள் கண்முன் வந்து மறைந்தன.
அன்றும் எப்போதும் போல நேரம் இருண்டது,சாமந்தர் ஆந்தையர் போதிமரக்கிளையில் தன் வழக்கப்படியே ஆராய்ச்சியில் முழுக தொடங்கினார்.கண்களை மூடி ஆழ்ந்திருந்த சாமந்தர் மெல்ல கண்விழித்தார்,ஏதோ ஒரு உறுத்துதல் கண்முன் தெரிந்தது.பாதி விழித்திருந்த கண்களை மெல்ல திறந்த சாமந்தர் தன் மூக்கின்மேல் ஒரு வண்டு ஒன்று அமர்ந்திருப்பதை கண்டு முதலில் திடுக்குற்றார்.வண்டும் அசையாமல் அவர் மூக்கின் மேலேயே உட்கார்ந்து கொண்டது.
விழி அசையாமல் மூக்கின் மேலேயே கண் வைத்துகொண்டிருந்த சாமந்தர் வண்டின் அழகை கண்டு மெய்சிலிர்த்தார். அசைவற்று மூக்கை வைத்த கண் வாங்காமல் அமர்ந்திருந்தார் சாமந்தர்.நேரம் மெல்ல மெல்ல உருண்டோடியது.,வண்டானது மெல்ல மெல்ல சாமந்தரின் பார்வையில் இருந்து மறைய துவங்கியது.அப்போது தான் சாமந்தர் ஒரு விஷயத்தை கவனித்தார் அவரின் மூக்கின் துளைகள் வழியாக வந்து செல்லும் சுவாசமானது மெல்லிய ஆவியாக காற்றில் கலந்து செல்கின்றது.அவரின் மனம் அதன் மேல் பற்றியது.ஆம் சுவாசம் வந்து செல்லும் போது ஏதோ ஒன்று நடக்கின்றதை புரிந்துகொண்டார்.அவருக்குள் ஞானம் மிளிர்ந்தது.அன்றும் இன்றும் போதிமரம் ஞானம் கொடுக்கும் என நம்பும் மனிதர்கள் அதன் பொருளை எப்போதும் அறிந்திருக்கவில்லை.
No comments:
Post a Comment