‘கூறாத மந்திரத்தின் குறிப்பறிவித்து....
ஏறாநிலையெனை ஏற்றுவித்து....’என ஆங்காங்கு குரு பரம்பரையினில் மட்டும் ஒதுங்கி எக்காலத்தும் தலையை வெளிக்காட்டாது, தலை ஏது வால் ஏது என புரிதலுக்கு இடம் கொடாது மறைந்து மூலகுகைக்குள் அடங்கி ஒடுங்கி தன்னிலை அற்று தனிமையே குணமாக முக்குணத்துக்கும் ஆதாரமாக எத்தேவருக்கும் தாயாக ஈனா மலடியாம் பெருஞ்சூலி திரிபுரை சின்னபெண் சித்து விளையாட காத்திருக்கின்றாள்,
அவள் தன்னையே பகுத்து சரிபாதி அந்த ஈசனுக்கும் கொடுத்தவள் ஆம் தயாவல்லி.அவள் சொரூபத்தை சித்தர்கள் ஞானிகள் என அறிந்தவர் யெவரும் சொல்ல கூச்சபட்டனர்,அவ்வண்ணமான சொரூபம்.அதான் அவள் மறைவாகவே உலாவுகிறாள் பெருங்கள்ளி.
அவளுக்கு என மட்டும் அவள் அறிவின்றி யெவரும் அறிந்திரா மந்திரம் தான் மூல மந்திரம், எழுகோடி மந்திரங்களுக்கும் தாயான மந்திரம்.அதை சித்தர்கள் வாய் விட்டு சொல்லாமல் மறை பரிபாஷையாகவே சொல்லி சென்றிருக்கின்றனர்.மூலாக்கினி எனவும் குண்டலினீ எனவும் வாலை எனவும் சூலி எனவும் வல்லபை எனவும் வாக்மயி எனவும் தேவி எனவும் பல ரூப பல பேத பல நாமம் அனேகம் விதம்.ஆயினும் அந்த ஓரெழுத்து தான் என்னவோ அவள் ரகசிய குறி????
. ’ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே’.
------------------ திருமூலர்
---- திரு. ரியான் ஐயா அவர்கள்
No comments:
Post a Comment