====முரீது மஹரிபா====
மூச்சடங்கும் இடமதுவே முரீதென்பர் என்கின்றார் ஆண்டவர்கள்.இவனுங்களோ ஏதோ ஒரு தூல இடத்துல மூச்சு அடங்குற மாதிரியும், அந்த எடத்தையே மெய்ஞானிகள் தொட்டுக்காட்டி சென்றுள்ளதாகவும் நம்பிகிட்டு இருக்கானுவ.ஒருத்தன் சொல்றான் கண்மணி தான் அந்த இடம்ண்ணு, அடுத்தவன் சொல்றான் இல்ல இல்ல புருவமத்தி தான் அந்த இடம்ண்ணு,வேறொருத்தன் சொல்றான் கண்மணிங்கிறது தான் புருவமத்திண்ணு,மற்றொருத்தன் சொல்றான் புருவமத்தியில தான் ஆதம் திருவடியான மூன்றாவது கண் இருக்குண்ணு.எதை எதையோ சொல்லிகிட்டு இது தான் ஆதம் பாதம்ண்ணு நம்பிகிட்டு இருக்கானுக போல.
“மூச்சாகும் தம்மாஹு உயிரு ஹயாத்தாகும் முடியாத மூச்சலவோ ஆதமென்று பேரு” என மெய்ஞான செம்மல் பீருமுஹம்மது அவர்கள் பிஸுமில் குறத்தில் சொல்வது இவன் காதுக்கு ஏறவே ஏறாது.இந்த முரிதை குறிப்பிட்டால் அது மெய்ஞான முரீது இல்லை, எங்க குரு சொன்ன கண்ணு தீட்சை தான் மெய்யான உபதேச முரீதென்பான் கூறுகெட்ட பயல்.
“ஆதமென்ன அவருடைய பாதமென்னவெற்றால் அறியாத பேருக்கெல்லாம் அறிய சொல்வேன் கேளும்”ண்ணு பீரப்பா பாடி சொல்லியும் இவன் புத்தி விளங்காம இருக்கான்.”வேதமென்றும் ஆதமென்றும் விலம்புவதும் அது தாந்வெகுபலதாய் சமையுமுன்னே அஹதியத்தாயிருந்து அதுதானே அஹதத் என்று அனைத்தியும் உள்ளடக்கி அப்புறமும் வாகிதியத்தாய் வானத்திலோ ஆதம்-வாகிதியாவதென்ன ஆதமுருவாச்சு வகைவகையாய் தலைமுறையாய் வந்தது அந்த விந்து-அந்த விந்து ஆதம் முதல் அணிய வந்ததினால் அது தானே ஆதத்துடைய பாதமது நிஜமாம்” என்கின்றார் வள்ளல் பீருமுஹம்மதிய்யா.
அதாவது அஹதத் என்கும் மறைபொருளாய் விளங்கிய குதுபு மன்ஸில் மஹபியா எனும் மறைவேத ரகசியமானது, வாகிதியாவாக மலர்ந்து, ஆதம் முதல் அவனியில் தரித்து கொண்டது.அந்த முச்சுடர் சொரூபமானது வகை வகையாக விந்துவினூடாக தலைமுறை தலை முறையாக வவ்வல்கொடியாக படர்ந்து நிற்கின்றது. இதனையே பீரப்பா அவர்கள் தமது ஞானபுகழ்சியினில் “ அவ்வல் அஹதாக நின்ரமரம் ஆகி றஹ்மத்தாய் பூத்துகாய்து வவ்வல்கொடியக படர்ந்து காய்த்து பகதுஅஹதாக காலியாமே -சொல்லத்தகுமல்ல இப்பொருளை சுருட்டி மறைக்கின்றேன் ஷறகுக்காக” என மறைத்து சொல்லியிருக்கின்றார்.
”விந்தை பெறும் ஆதத்துட விந்து நிறம் வெள்ளை வெடித்த புகையது காற்றாய் வெளியில் வரும் மூச்சாம்” என விந்துவுக்கும் மூச்சுக்கும் உண்டான தொடர்பை வெளியாக்கியிருக்கின்றார்.ஆனால் இந்த கூமுட்டை பயலுகளுக்கு சொல்லியும் சொல்லியும் மரமண்டைக்கு ஏறவே மாட்டேன்கிறது.இவன் இப்பவும் கண்ணு கண்ணு என கண்ணையே ஞான ரகசியம்ண்ணு சுத்திகிட்டு இருக்கான்.
“ஆச்சரியம் மூச்சுக்கொரு ஆதாரம் அலிபு அந்த அலிபு மூச்சுமல்ல ஆதத்துட பாதம்-அந்தலிபு நிலையறிந்து அதற்கு சுஜூதிட்டால் அதிக தவம் ஆதத்துட பாதமது நிஜமாம்- அந்த அலிபு நிலையறிந்து அதிக தவம் செய்ய அதிகமுள்ள பெரியோரை அடிபணிந்தால் சொல்வார்” இவ்வண்ணம் மறைவேத ரகசியமான ஆதம்பாதம் அறிந்து அதன் தவக்கருத்தில் ஊணாது பொய்பயல்கள் பொய்யை மெய்யென்று போதகம் செய்து தானும் கெட்டு தன்னை சார்ந்து இருப்போரையும் கெடுத்து, இது தான் மெய்வழி என பொய் வார்த்தை சொல்லி திரிவான், வேஷம் மட்டும் புனைந்தால் மெய் ஆகாது, அறிவாம் முத்து உன்னிடம் இருக்க வேண்டும், அந்த மாணிக்க முத்து உன்னிடம் இல்லையென்றால் நீயும் சைத்தானை ஆராதிப்பவனே,சைத்தான் செய்த தவத்தை செய்பவனே தான் என பீரப்பா சொல்லி போயிருக்கின்றார்.நீயோ செய்ய வேண்டிய தவமுறை முரீது என்பது சைத்தானுக்கு தெரியாததாக இருக்க வேண்டும், சைத்தான் பழகாத முரீதாக இருக்கவேண்டும், சைத்தான் ஏறாத தவநிலையாக இருக்க வேண்டும்.அதுவே தீன் எனப்படும் மெய்வழியாகும். அந்த ஹக்கான அலிபை அறிந்து அந்த தவநிலையினில் ஏற்றம் கொள்வது இஸ்லாம்.
”ஹக்காம்நபி தம்மோடு இறை கல்பான பல்லுடலில்
செக்கானது போல் அஞ்சு திருக்காய் எழும் மூச்சில்
நாக்காத அலிபு ஒன்று உண்டு அதில் நடு ரெண்டுள லாமும்
சிக்காமல் எடுத்து ஓதிடும் என்றே உரை செய்தான்”=பீரப்பா ஞானமணிமாலை
No comments:
Post a Comment