சூட்சும தேகம்
சூட்சுமத்துள் ஆண் எது? பெண் எது? என அறிந்துகொள்ளும் ஆவலே "காமம்" என படுகிறது... ஆனால் அதுமறைந்து வெளிதூலத்தில் ஆண் பெண்ணை அறியவும் பெண் ஆணை அறியவும் முற்படுவது காமம் என ஆயிற்று.
வெளிதூலத்தில் அறியமுற்பட "சிருஷ்டி" பரிணமிக்கிறது.. உட்சூட்சுமத்துள் அறியமுற்பட "முக்தி" பரிணமிக்கிறது
இது ரெண்டும்... வெளியும் உள்ளும் ஒன்றாகவே இருக்கின்றன..பிரித்தறிவது ஞானம்
பிறப்பு என்பது யோனி வழி என்பது சாமான்யம், ஆனால் முதற் பிறப்பு எது வழி என்பது விசேஷம்.
அது தெரியாமல் "பிறப்பறுப்பது" தான் எங்ஙனம் முக்தியும் எங்ஙனம்?
முதற்முதல் மனிதனுக்கு தொப்புள்கொடி இருந்திருக்குமா... அவனா அது அல்லது அவளா.. எது முதல் என அறிந்துகொண்டால் அல்லவா பிறவியின் சூட்சுமம் தெரியவரும்... ஏன் பிறந்தோம்? எங்ஙனம் வாழ்வு உண்டாயிற்று? .... அடுத்து தானே இதில் இருந்து ஆகவேண்டிய விடுதலை எப்படி என சிந்திக்க வேண்டியிருக்கிறது?..அல்லவா.
சூட்சும சரீரம் என்பது பஞ்சபூத சேர்க்கையினால் ஆனது அல்ல.. சப்த மய கோசரம்.. அதை அடைய மனம் இருக்கிற ட்ராக் விட்டு அடுத்த மேன்நிலை ட்ராக்குக்கு வரவேண்டும்....
பாருங்க..நம்ம வீட்டுக்குள்ளேயே, நம்ம ரூமிலேயே, நம்ம பக்கத்திலேயே நம்ம கூடவே இருக்கிற மனைவிக்கு யாராச்சும் போன் பண்னி கூப்பிட்டு பேசுவாங்களா?! ..இல்லையே!. அது போல அதே மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கிற சமயம், அவங்க நம்ம கூடவே பக்கதுல இருக்கிறப்ப பேசின மாதிரி பேசுவோமா?! ... அப்படி பேசினா அவங்களுக்கு கேட்க்குமா... இல்லையே... ஏதாவது ஒரு மொபைல் போன் வெச்சு தானே பேசுவோம்,அல்லவா?. அது போலத்தான் கதை.
மற்றொரிடத்தில் பைபிளில் மற்றொரு வசனம் வரும்.. "அதிக சத்தமாக இவர்கள் செய்கின்ற பிரார்த்தனைகள் விண்ணப்பங்கள் பரமண்டலத்தில் கேட்கும் என இவர்கள் நம்புகிறார்கள்" என.
--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
No comments:
Post a Comment