Thursday, November 10, 2022

எது மெய்பொருள்

 எது மெய்பொருள்


எதை அறிய எல்லாம் அறிய வகையாகிறதோ அது மெய்பொருள்...
எதில் அனைத்தும் அடங்குகிறதோ அது மெய்பொருள்..
எது அனைத்துக்கும் ஆதாரமாய் அனைத்தையும் ஊடுருவி நிற்க்கிறதோ அது மெய்பொருள்...


இதை அறிந்தவற்க்கல்லாது மற்றொருவர் இதை சுட்டிகாட்ட இயலா...

எது ஒன்று நம் கூடவே அனாதியாக இருக்கிறதோ... எது ஒன்று ஜீவனை விட்டு கணநேரம் கூட விலகாமல் இருக்கிறதோ எது ஒன்றை ஜீவன் தன்னோடு இருந்தும் அறியாமல் இருக்கிறதோ அதுவே தான் மெய்பொருள்...அதை அழிக்கவோ சாவோ தீண்டாது.


அறிந்தவர் ஒருவர் தொட்டுக்காட்ட அது ஜீவ அறிவுக்கு வரும்... அதுவரை எத்தகைய பிரயாசையினாலும் ஜீவ அறிவிற்க்கு வராது....ஆனால் நம் கூடவே தான் சதா இருக்கும்.


பலபேர்கலள் தூலமான சிலவற்றை காட்டி இதுவே அது என்பார்கள். ஜீவன் உடம்பில் இருக்க, அது இருப்பது சூட்சுமமாகவே... அந்த சூட்சுமத்தை கடந்தாலே ஜீவனுக்குள் ஜீவனான இறையை அடையமுடியும். அதில்லாது கற்பனையாக தலைக்குள் இருக்கும் மாமிசபிண்டத்தை கவனிப்பது அறிவின்மையே.

No comments:

Post a Comment