Thursday, November 10, 2022

விஷூவ ஸஞ்ன

 ===விஷூவ ஸஞ்ன==


ராசி என்பது வேறு மாதம் என்பது வேறு,வருடம் கணக்கிட பலமுறை நிலுவையில் உள்ளது,சூர்யமானம் சந்த்ரமானம் குருமானம் தினமானம் நட்சத்ரமானம் என பலமுறை.ராசிமண்டல சுழர்சி என்பது வேறு சந்ரமண்டல சுழற்சி வேறு.இதை புரியாமல் குழப்பிகிட்டு இருக்கிறது வேதனை.

ராசி பனிரெண்டு,இது சூரியன் சுழன்று வரும் பாதை என்பது கணிப்பு,அதாவது நம் பார்வைக்கு சூரியன் காலையில் இருந்து மாலை வரை பிரயானம் பண்ணி அச்தமனமாகி மறுபடியும் உதிக்கும் பாதையே ராசி மண்டலம் என ஒரு வருடம் என கனக்கிடும் முறை.ஒவ்வொரு ராசிக்கும் மேஷம் முதல் மீனம் வரை பனிரெண்டு நாமங்கள்.இதில் அயனபேதங்கள் உத்தர அயனம் தட்சின அயனம் என அயனங்கள் இரண்டு.

சந்ரமான முறைபடி சந்திரன் சுழன்று இருபத்தியேழு நட்சத்திரங்கலை கடந்து வரும் பாதை ஒரு ஆண்டு.இதில் அபிஜித் நட்சத்திரமும் அடக்கம்.ஒவ்வொரு முழுநிலவு அன்று எந்த நட்சத்திர கூட்டத்தின் அருகாமையில் சந்திரன் வருகிறதோ அந்த மாதத்துக்கு அந்த பெயர், சித்திரை நட்சத்திர கூட்டத்துக்கு அருகில் வந்தால் சித்திரை மாதம், விசாகம் நட்சத்திரம் அருகில் வந்தால் வைகாசி என...

சந்திர மண்டலத்துக்கும் தூலசூட்சும உடலங்களுக்கும் உடனான தொடர்பே ‘விஷுவ ஸ்ஞ்ன” எனபடும்.சிரசில் இருக்கும் மெல்லிய நாடியே விஷூ எனப்படும்.நட்சத்திர மண்டலம் சிரசில் முன்பின்னாக சுற்று வட்டபாதையிலும், சூரிய மண்டலம் மேல்கீழ் சுற்றுவட்டபாதையிலும் ஆதார மண்டலங்களாக பிணைந்துள்ளன. யோக நடைமுறைபடி, சரியான குரு வாய்க்கும் போது அவர் மண்டலசக்கர நுணுக்கங்களையும் அயனங்களையும் பருவங்களையும் சுட்டிகாட்டி போதித்து அதற்கான கிரியாமுறைகளை உணர்த்திகாட்டுவார். மனோமண்டலத்தையும் பிரானமண்டலத்தையும் சூரியசந்திர சேர்க்கையினால் நிலைபெற செய்யும் யோகி காலத்தை கடக்க செய்கின்றான்.அப்போது சீடன் விஷூவ நாடியில் பிரவேசித்து அண்டபிண்ட தொடர்பை ஏற்படுத்திகொள்கின்றான்.

No comments:

Post a Comment