Friday, November 11, 2022

இயற்கை

 இயற்கை என்பதனை நாம் காணும் இயற்கை என கொள்ளக்கூடாது, நாம் காணும் இயற்கை என்பது ஒரு வரையறைக்குள் பட்டது... அதாவது ஐந்து இந்திரிய அளவுக்கு உட்பட்டதே நாம் அறியமுடிகிற இயற்கை...


வள்ளலார் சொல்லும் இயற்கை என்பது அதீத விரிவு கொண்டது... அதை புரிந்துகொள்ளவேண்டும்.

அப்படி இயற்கையாகவே இருக்கிறவர் தாம் இறைவன்.... அது அவருடைய இருப்புநிலை அதை விளக்கமுடியாது..... நாம் காணும் இயற்கை என்பது அவருடைய விளக்க நிலை... அதாவது விளக்க நிலை என்பது அவர் இன்றி இவை ஒன்றும் இல்லை.. இதுவே விளக்க நிலை...

விளக்க நிலை என்பது கடவுளின் ஏகதேசம்..... அந்த ஏகதேசத்தினல் அவருடைய அளப்பற்ற இருப்பு நிலையை அனுமானிக்க கூட இயலாத வண்ணமுடையது.... ஏகதேசமான விளக்க நிலை எனும் இப்பிரபஞ்சம் கூட எல்லையற்று இருக்கிறது... இதிலிருந்து அவருடைய இருப்புநிலையின் தன்மை ஏகதேசமாக விளங்கும்

அப்படி எல்லையற்ற ஒன்றை அதன் இருப்பு நிலையை ஏகதேசமாக பற்றுவதே "பற்றற்றான் பாதம் பற்றுதல்”... அதுவும் சின்ன ஏகதேசமே.... ஒரு நூல் அளவு என வேண்டுமானால் சொல்லலாம்

*//இது தான்.. "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்” என்பதன் பொருள்....//*

"இயற்கை உண்மை என்றால் இயற்கையில் என்றென்றும் உள்ளது..என்றென்றும் இருப்பது.. தானே தோன்றி வளர்வது, தனக்கு ஆதாரமாக தானே இருப்பது.. தன்னைபோல வேறொன்றை யாராலும் உருவாக்கமுடியாதது, தனித்தன்மை வாய்ந்தது, உடலங்கலெலாம் உருவாக்க வல்லது.. உடலங்கலெலாம் நிலைநிறுத்த வல்லது, உடலங்கலெலாம் அழிக்கவல்லது... அதுவே ஜீவன் எனும் ஜீவசிவம் ஆக விளங்கிகொண்டிருக்கும் இயற்கை உண்மை கடவுள்."

-------- திரு. Hseija Ed Rian

No comments:

Post a Comment