Saturday, November 12, 2022

கா-அப

 ====== கா-அப =========


“அறிந்துகொள்ளசொல்லுகிறேன் முக்திதாத்துவெளியில்
ஐந்தாம் வணக்கம் திக்கீர் கபியின் முடிவாகும்
பொருந்துமெட்டாம் புகழும் மக்காம் தம்கூத்து விபரம்
போதவித்து நாதநிலைபுகல்யாகும் நுக்தொன்று
அந்த கருநாதமணி சூடுநினைவொளிவு
அதுதானே உதிரமெல்லாம் அணிந்துடலாய் திரண்டு
விந்தையுள்ள கருவுக்குள்ளே விளைத்த சூடுநினைவு
வேகமுடலெங்குமுயிர் வெதுவெதுத்தே நிற்க்கும்
அங்கமெல்லாம் நபியாகும் அவன் நினைவே றூஹூ
அதுதானே கருநினைவு ஆசையுடனறிவு
கருநாத நுதல் நடுவே காபகபுசைனி
கண்ணான பார்வை ஒலி ஹக்கென்றறிவீரே
இன்னங் கருநாதமணி பேச்சுமூச்சு பார்வை
இரக்கமுடன்கோபம் கேள்வி எதுவுமதுவாகும்
தன்னை அறிந்தல்லவோ தனது பொருளறிந்தால்
தானேதான் தானேதாம் தம்பிரானுமாகும்
கருநிலையில் கருநினைவை கருவதினால் அறிந்தால்
கடிதான பாவமெல்லாம் காற்றில் பஞ்சாய் பறக்கும்”

       ----  பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் பிஸுமில் குறம்

முத்தொடு பவளம் பச்சை முதலொளி கூட்டி
சக்தியாய் சிவனாய் இந்த தாரணி தன்னிலாக்கி
பத்தியாய் யெனைவளர்த்த பரமனே யுனையான் பாச
இத்திசை அனைத்தும் போற்றும் இறைவனே துணை செய்வாயே .

❤️ "தாத் என்பது இறைவன் அம்சம் என கொள்ளவேண்டாம், அது இறை சொரூபமே, ஒன்றானது தான் ,முப்பொருளாக இலங்கினாலும் ஒரு பொருளே தான்" ❤️

பிண்டம் என்பது பிரபஞ்ச பிரமாண்டத்தின் ஒரு சிறு அளவு.. அவ்வளவு தான்... இந்த சிறு பிண்டத்திற்க்குள் எங்ஙனம் ஜீவன் இருக்கிறதோ அதுபோல பிரபஞ்ச பகிரண்டத்தினுள்ளும் மஹாஜீவன் குடியிருக்கிறது... அதை அறியவேண்டுமெனில் இந்த பிண்ட சரீர ஜீவனை முதலில் கவனிக்கவேண்டும்...அது பகிரண்ட ஜீவனுக்கு கொண்டு செல்லும்

அந்த மகாஜீவனைத்தான் அகம் புறம் அகப்புறம் புறப்புறம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஜோதியுள் ஜோதியுள் ஜோதி என வள்ளலார் குறிப்பிடுகின்றார். அறிவு விளக்கம் வராது மூட புத்திகளுக்கு ஒரு விளக்கை காட்டி அதை கண்டு அவ்வண்ணம் உபாசிக்க சொல்லியுள்ளார். தன்னுடைய வெளிச்சமாக தன்னுடம்பு முழுதும் வியாபித்திருக்கின்ற ஜீவனையே அறிந்து வணங்க தெரியாதவர்கள் எங்கே அண்ட பகிரண்ட ஜீவனை உள்வாங்கி புரிந்து அறிந்து உபாசிக்க போகின்றார்கள்...இருந்தாலும் அவர்களுக்கும் சிறு வெளிச்சம் வரத்தான் செய்யும்.

🙏 குருவே சரணம் 🙏

--❣️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❣️

No comments:

Post a Comment