Friday, November 11, 2022

புனரபி ஜனனம் புனரபி மரணம்

 புனரபி ஜனனம் புனரபி மரணம்




எண்ணற்ற கோட்பாடுகள், எண்ணற்ற கொள்கைகள் என எல்லாம் குழம்பி போய் கூத்தடிச்சு நான் சொல்றது மெய், நீ சொல்றது பொய் என அடுத்தவன் அடுத்தவனை குறை சொல்லியே உண்மை எதுவென அறியாமல் கடைசியில் ஒரு அருமையான வாழ்வு முடிந்துவிடுகின்றது.


ஞானியர் என சொல்லிகொண்டு பலபேர் வந்துபோயிருக்கின்றனர், ஆனால் சீடர்களுக்குத்தான் குழப்பம் திர்ந்தபாடில்லை. மறுபிறவி உண்டு என சொல்பவர்கள், மறுபிறவி என்பது இந்த ஒரு பிறப்பிலேயே நிகழும் மாற்றங்கள் தான் என்பவர்கள், கர்மம் உண்டு என்பவர்கள், கர்மம் இந்த பிறப்பிலேயே முடிந்துவிடும் என்பவர்கள், ஜீவன் பலபிறப்புகள் எடுக்கிறது என்பவர்கள், ஜீவனை அலகை கொண்டு சென்று விடும் என்பவர்கள், எமன் ஜீவனை பிடித்து நரகத்தில் கொண்டு சென்று துன்புறுத்துவான் என்பவர்கள், உத்தராயனத்தில் செத்தால் சொர்க்கம் சென்றுவிடலாம் என்பவர்கள், தட்சிணாயனத்தில் செத்தால் மறுபிறப்பு உண்டு என்பவர்கள், குரு நினைத்தால் மட்டும் தான் மோட்சம் உண்டு என்பவர்கள், குருவில்லாமல் மோட்சம் பெற்றவர்கள் உண்டு என்பவர்கள். ஆண் இறந்தால் அடுத்த சென்மமும் ஆணாக தான் பிறப்பு என்பவர்கள், ஆண்களுக்கு மட்டும் தான் முக்தி கிடைக்கும் என்பவர்கள். குண்டலினீ இல்லையென்றால் ஞானம் இல்லை என்பவர்கள்,மிருகங்களுக்கும் முக்தி கிடைக்கும் என்பவர்கல், மரங்கலை வனங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பவர்கள், இயற்கையே கடவுள் என்பவர்கள். உயிர் தான் கடவுள் என்பவர்கள், ஜீவனே சிவன் என்பவர்கள், நியாயத்தீர்ப்பு உண்டு என புலம்பி சென்ரவர்கள், நியாயதீர்ப்பு வரும் என காத்திருந்து ஏமாந்து போனவர்கள், வருகிரதை வரும் இடத்தில் நின்று பார்ப்போம் என இருப்பவர்கள், என்னால் ஒன்றுக்கும் முடியலியே என ஏங்கி தவிப்பவர்கள்.சாவோடு எல்லாம் முடிஞ்சு போச்சு என்பவர்கல், மோட்சம் முக்தி என்பதெல்லாம் பொய் என்பவர்கள்,கடவுளே கதி என தவம் கிடப்பவர்கள்,சாப்பாடு போட்டா மோட்சம் கிடைக்கும் என்பவர்கள்..என..என...


மெய்யென்ன மெய்யென்ன...எல்லாம் பொய்யே...பொய்யின்றி சொன்னவை மெய்யல்ல...உனக்கு முக்தியில்லை என்பதே உண்மை, ஏனெனில் ‘நீ’ இருக்கும் வரை உனக்கு முக்தி வராது. முக்தி என ஒன்று இருக்குமிடத்தில் ‘நீ’ இருப்பதில்லை. இப்பிறப்பில் மட்டுமல்ல எப்பிறப்பிலும் ‘நீ’ நிலையாக இருந்ததில்லை. இப்பிறப்பில் இருக்கும் ‘நீ’ வேறு முற்பிறப்பில் இருந்த ‘நீ எல்லாம்’ வேறு. ஒவ்வொரு பிறப்பிலும் ‘நீ’ மாறிகொண்டேயிருக்கிறாய். உன் மனமும் உடலும் உயிரும் எல்லாம் மாறிகொண்டேயிருக்கின்ரன. நீ ஒருபோதும் அவ்வ்வண்னம் எவ்வனமாயும் நிலையாக இருந்ததில்லை, நிலையற்ற தன்மையே எக்காலத்திலும் உன் வாழ்வின் நிகழ்வு கடந்து வந்திருக்கின்றது. சற்று க்‌ஷன நேரத்தின் முன்னிருந்த நீயல்ல சற்று க்‌ஷன நேரத்துக்கு அப்புறம் இப்போதிருக்கும் ‘நீ’. சுழலும் தன்மை சதா சுழன்று கொண்டே மாறுதலுக்கு உட்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஓ மூடனே, ஆனால் ‘நீ’ உன் மனதால் ‘நான்’ சதா மாறாமல் இருக்கின்ரேன் என நினைந்துகொண்டிருக்கின்ராய், இது பொய்யன்றி வேறென்ன?. சுத்த பொய், ‘நீ’ இருப்பதாக நினைக்கிறாயே அதுவே பொய். எப்போது ‘நீ’ அற்று போகிறது அப்போது முக்தி, ஆனால் அந்த முக்தியும் கூட ‘உனக்கல்ல,’., ஏனெனில் ‘நீ’ இருந்தால் முக்தியில்லை, எனில் முக்தி என்பது யாருக்கு என கேட்ப்பாய் அல்லவா?. ம்க்தி என்பது உடலுக்கு உயிருக்கொ, உனக்கோ அல்ல. முக்தி என்பது சுழற்சியின் விடுதலை. கர்மம் எனும் மகா சாகரம் சதா ஓயாமல் அலை வீசி ,நொடிக்கு நொடி ஆசையெனும் காற்றில் அலைவீசி கொண்டிருக்கும் த்ன்மையில் இருந்தும் விடுதலை.கர்மம் எனும் சக்கரத்தில் இருந்து விடுதலை. ஒவ்வொரு பிரவியும் கர்மத்தின் எச்சங்கள் தான், கர்மங்கள் தான் மறு பிரப்பு கொள்கின்றன, அவையே பிறப்பின் பீஜம், பிறப்புக்கு ஆதாரம், இவ்வண்னம் கர்மங்களினால் பிறவிகள் நிலைகொண்டுள்ளன. ‘நீ’ ஒவ்வொரு பிறவியிலும் செத்து போகிறாய், உண்மையில் சாவு என்பது உன் மனதின் சாவு, ‘நான்’ எனும் உன் எண்ணத்தின் சாவு, ‘நான்’ எனும் தற்போதத்தின் சாவு....வந்த வந்த பிரவிகள் எல்லாம் சாவு கொள்ளும், ஞானியென்றோ சித்தனென்றோ சாவுக்கு வேறுபாடு இல்லை,’நீ’ இந்த சாவிலிருந்து தப்ப போவதில்லை. எத்தனித்தாலும் இல்லையென்றாலும் செத்துத்தான் போவாய். இதெல்லாம் உன் கற்பனையின் சாவு தான், உன்மையில் நீ ஒருபோதும் மறு பிறப்பு எடுப்பதில்லை, ஏனெனில் ஒரே “நான்’ அதே ‘நானாக” பல பல பிரவிகளில் அதே “நான்” ஆக இருப்பதில்லை.’நன்’ சதா மாறிகொண்டிருக்கும், மனமும் மாறி கொண்டிருக்கும், உடலும் மாறிக்கொண்டிருக்கும்...கர்மம் மட்டும் நிலையாக சுழன்றுகொண்டிருக்கும். இந்த கர்ம சுழற்சியில் இருந்து விடுதலை என்பதே முக்தி

No comments:

Post a Comment