Saturday, November 12, 2022

தாத்து

 பேயோ அலிபோ முதல் வெம்பனியென்று ஓயாமல் வருந்துளி யுள்ளுருவாய் சீனோநூனோ தெரியாதெமக்கும் மாயாமுகநான்கும் வழங்கிறையே


சுகமுறும் பேயோடு அலிபு சென்றொரு சுழி அறிந்துயர் துளியொடு அகமுறும் கடலதில் வலம்புரி தனில் அடைந்தொரு தரளமாய் அஹ்மதின்னிரு பதம் என் அன்புற மனம் மகிழ்ந்து உன்னோடு இரந்த நான் முகம் மலர்ந்தெனை முடுகி வந்து உயர் முறைமை தந்தருள் முதல்வனே

-----------  பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்.

வெம்பனி என்றால் சூரியனே நடுங்கும் வெப்பம் மிகுந்த துளி.பீரப்பா பாடுவர் ‘பருதி நடுங்கும் துளிகொடென் ஆவி அமைத்தோனே” என.இந்த துளிக்கு “ஆஷிக்” என சூஃபிஸம் கூறும்.பிரபஞ்ச உற்பத்தி காலத்தில் இறைவனும் இறைவனுடைய பெருங்கருணையும் மட்டுமே இருந்தன. அந்த கருணைகடலுக்கு றஹ்மத் கடல் என பெயர், அல்லது ஆத்தும மர்ம ஜலக்கடல் எனவும் பெயர்.மேற்படி றஹ்மத்து கடலில் சதா இறைவனுடைய பேரருள் பெருமழையான துளி பெய்துகொண்டிருக்குமாம்.அப்படியான றஹ்மத்து கடலில் கோடானுகோடி கற்பாந்தங்களினூடாக ஒரு மலர்ச்சி உண்டாகுமாமந்த மலர்சிக்கு காரணமானது கடலில் நீரோடு நீராக உறைந்துள்ள தாத்து எனும் தன்மையே.இதையே மஹரிபத்துமாலையில் ‘தாத்து றஹ்மத்து கடல் நிறைந்த ரகசியம் தனை சொல்லக்கேளும்” என பீரப்பா விவரிக்கின்றார்.அந்த தாத்தானது சிபத்து சிபாத்துகளாக விரியும்.அந்த தாத்து விரிந்து அஹமத் என வளரும்,அஹமது பின்னர் முஹம்மதுவாக மலரும்,அதன் விரிவு நிறைய சொல்ல உண்டு.இந்த முஹமதுவை தான் வலம்புரி என்கின்றோம்வலம்புரியான இதற்குள் மேற்சொன்ன ஆஷிக் துளியை உண்டு முத்து உதயமாகும்.இதுவே றசூல்.

‘பே’ என்பது பீர் என்பதில் வரும் முதல் வார்த்தை.அதன் மேல் இருக்கும்’ஈ’ என்பது அலிபு,இதைத்தான் பேயோடு அலிபு சென்றொரு சுழியறிதுயர் துளியொடெ என்பதின் விரிவு.முஹம்மது எனும் வலம்புரியில் புகுந்து பிறந்தவர் தாம் பீர்முஹம்மது எனும் பெயர்.இதில் பேயோ அலிபோ முதல் வெம்பனி என அறியாமல் மருள்கின்றேன் என்பது உட்கிடை ஞானம்

No comments:

Post a Comment