Friday, November 11, 2022

வேதம்

 வேதம்





இறைவனால் வகுக்கபட்டது வேதம்..அதை யாரும் கையாலோ மற்ற எந்த உபகரணத்தாலோ எழுத முடியாது.


அது தான் வேதம் என யாரும் சொல்ல வேண்டியதில்லை... அதுவே சொல்லும்...ஒளிக்கு சாட்சி தேவையில்லை எங்கிருந்து அறிவு கிடைக்கிறதோ அது வேதம்.


வேதம் ஒன்று தான், அதை கண்டவர்கள் மட்டும் ஒன்றைத்தான் பேசுவார்கள். காணாதவர்கள் எல்லாம் பலவாறாக பேசுவார்கள். யாரொருவர் பலவாறாக பேசுகிறார்களோ அவர்கள் வேதத்தை கானவில்லை, அவர்கள் பேச்செல்லாம் ஏகதேசம், நிச்சயமான உண்மை அல்ல என்பதே உண்மை. அது எந்த பெரிய ஞானிகள் என நீங்கள் கொண்டாடுபவர்கள் ஆனாலும் சரியே தான்.


வேதத்தை கண்டவர்கள், அறிந்தவர்கள் என நீங்கள் சொல்லும் வேதங்களை பாருங்கள், அதில் உலகம் இன்ன விதமாக சிருஷ்ட்டிக்கபட்டது என தீர்க்கமாக சொல்லபட்டிருக்கிறதா என்ன?.. உலகத்து படைப்புகள் இன்னவிதமாக சிருஷ்ட்டிக்கபட்டனர் என சொல்லபட்டிருக்கிறதா என்ன?..எங்கே எடுத்து காட்டுங்கள் உங்களுடைய ஞானிகளின் வேதத்தில் இருந்து, சவால் விடுகிறேன். நீங்கள் சொல்லும் ஞானிகள் இதன் உற்பத்தியை சொல்லியிருக்கிறார்களா? பெரிய ஞானிகள் என பீத்தி கொள்வதோடு சரி. அவங்கள் கதை முடிந்து விடுகிறது. இருக்கிறது எனில் எடுத்துகாட்டுங்களேன்.


கடவுள் நிற்பது அண்ட சராசரங்களின் அளப்பிடமுடியாத வல்லபத்திறதின் பின்னால், அவனுடைய ஆற்றல் மறைந்திருப்பது இந்த பிரபஞ்ச ரகசியத்தின் பின்னால். சொல்லபடுகின்ற எந்த வேதமும் இதை ஆரம்பமாக சொல்லத்தான் செய்கிறது, ஆனால் ஒவ்வொருவேதமும் ஒவ்வொரு விதமாக சொல்லிகொண்டு திரிகின்றன. பலவிதமாக சொல்லிகொண்டு திரியும் வேதங்கள் உண்மைத்தான் சொல்லுகின்றன என எப்படி நிச்சயபடுத்திகொண்டீர்கள் என சொல்லுங்களேன். என்னுடைய நிச்சயம் இவையான வேதங்கள் உண்மையை அறியவில்லை இதுவரைக்கும். இந்த உண்மையை தெரிவிக்காத வேதங்கள் எல்லாம் உண்மையை அறிந்திறாதவை. கற்பனை படைப்புகள். ஏதோ அந்தந்த காலத்துக்கு தக்கபடி மக்களை திருப்திபடுத்துவதற்க்கு தக்கபடி மனித கைகளால், மனித மனத்தினால் ஒப்புக்கொள்ளும் படியாக கற்பனையாக உருவாக்கபட்டவைகளே அன்றி உண்மையை உண்மையென கண்டு இது இன்ன விதமாகத்தான் சிருஷ்ட்டிக்கபெற்றன என அறுதியிட்டு கூற இயலாத வேதங்கள். அவற்றை சுமந்துகொண்டு திரியும் உங்களை போன்ற வேதாந்திகள் இதை வாய் கிழிய பெசினாலும் உண்மை பொய்த்து போகாது.


சிருஷ்ட்டியை கூட தெரியாத வேதங்கள் கூறும் முக்தி எப்படியானது ஆக இருக்கும் என சற்று நினைத்துபாருங்கள். ஏன் பிறந்தோம், எப்படி பிறந்தோம், எதுக்கு பிறந்தோம், யாரால் பிறந்தோம், எப்போது பிறந்தோம், என கூட சொல்லத்தெரியாத வேதங்கள் அதற்க்கு முன்னே எப்படி முக்தி எதுக்கு முக்தி எப்போது முக்தி எவ்வாறு முக்தி யாரால் முக்தி என விளம்பரம் பண்ணிகொண்டிருக்கின்றன. இது தான் உங்க ஞானமா?. இதைத்தான் ஞானம் என்கிறீர்களா?.எங்கே உங்க ஞானிகள் வேதம், எடுத்து பிரித்து போடுங்கள். ரகசியங்களை கேட்கிறேன், பதில் வேதங்களில் இருந்து வரட்டும், அவை உண்மையை தெரிந்திருக்கின்றன எனில்....
மனிதன் ஏன் விதவிதமான வர்ணங்களில் படைக்கபட்டான் எனும் சின்ன கேள்விக்காவது உங்கள் எந்த வேதமாவது பதில் சொல்லுமா?..அல்லது சொல்லதெரியுமா? ஏன் மனிதனை படைப்பதற்க்கு முன்னரே இறைவன் வர்ணங்களை நிர்ணயித்தான், வேதத்தை பிரித்து பார்த்து பதில் சொல்லுங்களேன், சற்று காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment